சனி, 25 மே, 2013

சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 23-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ,சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் சவூதிமர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சுட்டெரிக்கும் நரகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.