வியாழன், 23 மே, 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான முகாம் - 31-05-2013

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !

கத்தர் ஹமத் மெடிக்கல் கார்பொரேஷன் (HMC) மருத்துவமனைக்கு, அறுவை சிக்கிச்சைக்காக பல நோயாளிகள் போதிய அளவிலான இரத்தம் இல்லாததால் காத்து இருகின்றனர் என்றும், காரணம் இரத்த வங்கியில் இரத்தத்திற்காக கடும் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், இதை ஈடுகட்ட தங்கள் அமைப்பு துரித முகாம் ஒன்றினை நடத்தி தரவேண்டும் என்று ஹமாத் இரத்த வங்கியிலிருந்து கோரிக்கை வந்த நிலையில், மனித உயிர் காக்கும் இம்மகத்தான பணிக்கு உடனே செவி சாய்த்து, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 31-05-2013 வெள்ளிக் கிழமை, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இதில் தங்களும், தங்களுக்கு தெரிந்த அன்பர்களையும், நண்பர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸை காணவும்.