ஞாயிறு, 9 ஜூன், 2013

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுக நிகழ்ச்சி 06-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 06-06-2013 வியாழக்கிழமை புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுகம் வாராந்திர பயானிற்கு பிறகு நடைபெற்றது .

இதில் இராமநாதபுர மாவட்டம் இடைக்காட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த இந்து மதம் சேர்வார் பிரிவைச் சேர்ந்த சகோதரர் சிவக்குமரன் சில தினங்களுக்கு முன்பு தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டதாகவும், தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றிகொண்டதாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக, இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்து ரெட்டியார் பிரிவைச் சேர்ந்த சகோதரர் வீரமணி மாணிக்கம் சில தினங்களுக்கு முன்பு தன்னை இஸ்லாமிய மார்கத்தில் இணைத்துக்கொண்டு தன்னுடைய பெயரை முஹமத் என்று மாற்றிகொண்டதாக கூறினார். அவருக்கும் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.