ஞாயிறு, 16 ஜூன், 2013

14-06-2013 அன்று QITC மர்கஸில் “ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அலோசனைக்கூட்டம்"


அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், கடந்த வெள்ளிக்கிழமை 14-06-2013 அன்று கத்தர் மண்டலம் தவ்ஹீத் மர்கஸில் "ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அலோசனைக்கூட்டம்" நடைப்பெற்றது.

முன்னதாக மண்டல துணைத்தலைவர் சகோதரர் பக்ரூதீன் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தலைமையேற்று, இக்கூட்டத்தின் நோக்கம் பற்றியும், இன்ஷாஅல்லாஹ் எதிர் வர கூடிய ரமலானில் ஆற்ற வேண்டிய தாவா பணிகள் பற்றியும், செயல் வீரர்கள் உடலுழைப்பையும், தங்களுடைய ஒய்வு நேரத்தை தாவாப்பணிக்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விளம்பரக்குழு, வாகனக்குழு, நூலகக்குழு, உணவுக்குழு, ஊடகக்குழு என்று பல்வேறு பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டது.

பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் கிளைவாரியாக திட்டமிட்டிருக்கின்ற பல்வேறு நிக்ழ்ச்சிகள் குறித்து பட்டியலிட்டார். தமிழகத்திலிருந்து வரும் சிறப்பு பேச்சாளரை கிளைப்பொருப்பாளர்கள் தத்தமது பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேதிகளை கேட்டு வாங்கிக்கொண்டனர்.

இறுதியாக நிகழ்ச்சிகளின் பட்டியல் வாசிக்கப்பட்டது. இணைசெயலாளர் சகோதரர் இப்றாஹீம் அவர்கள் நன்றியுரையுடன், துஆ ஒதியவர்களாக கலைந்து சென்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.