ஞாயிறு, 2 ஜூன், 2013

கத்தரில் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கத்தர் மண்டல கிளையான கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் கடந்த 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாமில் 86 என்பத்தி ஆறு சகோதரர்கள் குருதி கொடை அளித்தார்கள்.

இங்குள்ள ஹமாத் மெடிக்கல் கார்போரேஷன், இரத்த வங்கியில் போதியளவிலான இரத்த இருப்பு இல்லை என்றும், அதனால் அன்றாட நிகழும் சாலை விபத்துகள், கட்டுமான பணிகளில் நேரும் விபத்துக்கள், மேலும் அவசர அறுவை சிக்கிசைக்களுக்கான தேவையான இரத்த யுனிட்கள் அளிக்க முடியவில்லை என்றும், எனவே உடனே அவசர இரத்த தான முகாமை நடத்திதர வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை ஹமாத் இரத்த வங்கி அனுப்பியிருந்தது.

ஒரு வார இடைவெளி மட்டுமே இருந்த சூழலில், குறுஞ்செய்தி மூலமாகவும், இமெயில், முகநூல் மூலமாகவும், மேலும் அனைத்து கிளைகளுக்கும் வாராந்திர வியாழன், மற்றும் வெள்ளி பயான்களில் இரத்த தான முகாம் பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது. இரத்த தானம் சம்பந்தமாக பொதுவாக மக்கள் மத்தியில் உள்ள அறியாமையை போக்க இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜும்மா தொழுகைக்கு பின் சரியாக இரண்டு மணிக்கு மர்கஸ் வளாகத்தில் முகாம் தொடங்கப்பட்டது. இம்முகாமில் ஹாமத் மெடிக்கல் கார்போரேஷன் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழு மொபையில் வேனுடன் வந்திருந்தார்கள். சனைய்யா, பின் மெஹ்மூத், நஜ்மா, லக்தா, வக்ரா, அல்ஹீசா, கராஃபா ஆகிய பகுதிகளிலிருந்து சகோதரர்கள் பெயர் பதிவு செய்ய நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.

இதில் 200 க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் தங்கள் பெயர்களை பெயர் பதிவு செய்தனர். பல்வேறு காரணங்களால் 86 என்பத்தியாறு பேரிடம் மட்டுமே இரத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு சகோதரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவலிருந்து வந்து குறைந்தது ஆறு மாதம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் அதிகமான சகோதரர்கள் இரத்தம் கொடுக்க அனுமதியளிக்கப்படவில்லை.

மதியம் இரண்டு மணிக்கு தொடங்கப்பட்டு இரவு ஒன்பது மணி வரை முகாம் நடைப்பெற்றது. இரத்ததானம் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் பால், பழம், கேக் வகைகள் வழங்கப்பட்டது. இம்முகாமை பற்றி ஹமாத் அலுவர்கள் கூறும் போது "This campaign categorized under successful campaign" என்று கூறினார்கள். இம்முகாமை "வெற்றி முகாமாக" ஆக்கிதந்த அல்லாஹுவிற்கே எல்லா புகழும்.