புதன், 5 ஜூன், 2013

கத்தர் மண்டலத்தின் மனித நேய பணி

கடந்த 18/05/2013 அன்று சவுதி அல்கோபர் பகுதியிலிருந்து நாகை மாவட்டம் திடச்சேரியை சேர்ந்த சகோதரர் ருக்னுதீன் என்பவர் நமது கத்தர் மண்டல அலுவலகத்தை தொடர்புகொண்டு, தனது சகோதரர் பாவா பக்ருதீன் என்பவர் கத்தரில் உள்ள முஐதெர் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதாகவும், அவருக்கு 22/05/2013 அன்று இருதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு இங்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றும், தான் நமது இணையதளத்தின் மூலம் கத்தார் மண்டல தொலைபேசியை தெரிந்துகொண்டு தொடர்பு கொள்வதாகவும், தனது சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படியும் நம்மை கேட்டுகொண்டார்.

அதனடிப்படையில் 19/05/2013 மண்டல துணைச் செயலாளர்கள் சகோதரர் அப்துர்ரஹ்மான் மற்றும் சகோதரர் காதர் மீரான் அவர்களும் சகோதரர் பாவா பக்ருதீன் அவர்கள் பணிபுரியும் முஐதெர் பகுதிக்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர். அவர் தனது அறுவை சிகிச்சைக்கு ஆறு யூனிட் O+ வகை இரத்தம் தேவை என்றும், அந்த இரத்தம் கிடைத்தால் தான் 22/05/2013 அன்று இருதைய மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள் என்றும், தனக்கு இங்கு உதவ யாரும் இல்லை என்றும், தனக்கு இந்த உதவியை செய்யவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

அவருக்கு ஆறுதல் கூறி, நாங்கள் அனைத்து உதவிகளையும் இன்ஷா அல்லாஹ் செய்து தருவதாக சொல்லி, உடனடியாக களத்தில் இறங்கி கத்தாரில் உள்ள கொள்கை சகோதரர்களுக்கு மின்அஞ்சல் மூலமும், முகநூல் (facebook) மூலமும் செய்தி அனுப்பப்பட்டது. அதன் விளைவாக, 35 க்கும் மேற்ப்பட்ட கொள்கை சகோதரர்கள் மற்றும் பிறமத சகோதரர்களும் நமது மண்டலத்தை தொடர்புகொண்டு இரத்த தானம் செய்ய முன் வந்தனர். இருப்பினும் அவருக்கு தேவையான ஆறு யூனிட் இரத்தத்திற்கு 6 ஆறு நபர்கள் இரத்தம் தந்தாலே போதுமானது என்று ஹமத் இரத்தவங்கியில் தெரிவித்ததால், ஏழு நபர்கள் 20/05/2013 அன்று இரத்த தானம் செய்தனர்.

சகோதரர் பாவா பக்ருதீன் அவர்கள் உடனடியாக 21/05/2013 அன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/05/2013 அன்று இருதைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ICU UNIT இல் இருந்த அவரை நமது மண்டல நிர்வாகிகள் சென்று பார்த்தனர். அவர் நமது நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து நமது மனித நேய பணிக்கு அல்லாஹ்விடம் துஆ செய்வதாக சொன்னார்.

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.