ஞாயிறு, 21 ஜூலை, 2013

18-07-2013 கத்தர் மண்டலம் சவுதி மர்கஸில் ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி18-07-2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவஹீத் மையம், மதீனா கலிஃபா பகுதியில் அமைந்துள்ள சவுதி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம் என்ற சவுதி மர்கஸில் ஸகர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஷா தொழுகையுடன் இரவு தொழுகையும் நிறைவேற்றிய பின்னர் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மைத்தின் தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் வரவேற்புரை வழங்கி, சவுதி மர்கஸின் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாறு கேட்டுக்கொண்டார்.

1 . மவ்லவி அன்சார் மஜீதி - ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு !

2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி - நபிவழி நடந்தால் நரகமில்லை !

3 . மவ்லவி கே அப்துன் நாஸர் M.I.Sc - கணவன் மனைவி கடமைகள் !

ஆகிய தலைப்புகளில் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குர்ஆன் மனனம், துஆ ஓதுதல், இஸ்லாமிய பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளுக்கான QITC RAMADAN 2013 கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, 500 க்கும் அதிகமான சகோதரர்கள் அல் கோர், துக்கான், சனையா, வக்ரா, உம் சையீத் போன்ற தொலை தூர இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர். மேலும் நூற்றூக்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

கத்தர் இந்திய தவ்ஹீத மையத்தின் செயல் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களுடைய தலைமையில் 10 பேர்க்கொண்ட உணவு குழு முழு வீச்சாக செயல்பட்டு, நமது மர்கசிலியே உணவு தாயாரித்து வருகை தந்திருந்த அனைவர்க்கும் ஸகர் உணவை பரிமாரியது.

இறுதியாக இணைச்செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சி அல்லாஹுவின் அருளால் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது அல் ஹம்துலில்லாஹ்!