புதன், 21 ஆகஸ்ட், 2013

கத்தர் மண்டல QITC மர்கசில் நடந்த வாராந்திர நிகழ்ச்சி 15/8/2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC மர்கஸில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் ஷைக்அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் "ரமலானில் நாம் பெற்ற படிப்பினை" என்ற தலைப்பிலும் அதைத்தொடர்ந்து மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் "வாரிசுரிமைச் சட்டங்கள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையும், சமூகத்தில் அது எப்படி பறிக்கப்படுகிறது என்பது பற்றியும் அழகாக விளக்கினார்கள் 

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சகோ துணை செயலாளர் தஸ்தகீர் அவர்கள் QITC மர்க்சின் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள். 

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!