திங்கள், 16 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12-09-2013

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திரசொற்பொழிவு நிகழ்ச்சி QITC மர்கஸில் 12-09-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணைத் தலைவர் சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோதரர் DR. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் - "சஹாபாக்கள் வரலாறு என்ற தொடர் தலைப்பில் உஸாமா பின் ஸைத் (ரலி)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அடுத்ததாக மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "முஸ்லிம்களின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு மவ்லவி ,அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சூரத்துல் கஹ்ஃ ப் ஒரு பார்வை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல தலைவர் சகோ, மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் பல செய்தார்கள். பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி அவர்கள் கடந்த வாரம் நிகழ்த்திய உரையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவுபரிமாற பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!