செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29/08/2013


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி QITC மர்கஸில் 29-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் "இறைவனை மறந்த மனிதன்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதைத்தொடர்ந்து மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் "பித்னாக்கள் நிறைந்த காலத்தில் நமது அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல தலைவர் சகோ, மஸ்வூத் அவர்கள் தலைமை கட்டிட நிதி மற்றும் சிறுவர்களுக்கான இரண்டாம் கட்ட மார்க்க கல்வி வகுப்பு ஆரம்பம் தொடர்பான அறிவிப்புகளை செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவுபரிமாற பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.