சனி, 9 ஆகஸ்ட், 2014

கத்தரில் 01/08/2014 அன்று நடைபெற்ற பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 01/08/2014 வெள்ளிகிழமையன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

மையத்தின் தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கத்தையும், மையத்தின் செயல்பாடுகளையும் விளக்கி கூறினார்.

பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்பாஸ் அலி misc அவர்கள் முகவுரையுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து கேள்விகளுக்கும் சகோதரர் அப்பாஸ் அலி misc அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் பிற மத சகோதரர்களுக்கான ரமழான் சிறப்பு கட்டுரை போட்டியில் "திருக்குர்ஆன் என் பார்வையில்" என்ற தலைப்பில் எழுதி முதல் பரிசான நாலு கிராம் தங்க நாணயத்தைக் தட்டி சென்றார் சகோதரர் அருள் முருகன். அவருக்கு சகோதரர் தாஜுதீன் (QP) அவர்கள் வழங்கினார்கள்.