புதன், 4 மார்ச், 2015

இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்

இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

உன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. 

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி)நூல் : புகாரி 1975 

இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள். 

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விûயாடுபவர்களாக இருந்தார்கள. அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள் 

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)நூல் : அஹ்மத் 13131 

இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள். 

பள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடையால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 5236 

விளையாட முன்நின்ற நபிகளார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள். 

அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)நூல் : புகாரி 2899 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : முஸ்லிம் 3956 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார் 

அறிவிப்பவர் : உக்பா (ரலி)நூல் : முஸ்லிம் 3543 

நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

ஓட்டப் பந்தயம்

நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : அஹ்மத் 25075 

குதிரை பந்தயம்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே 'ஹஃப்யா' எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை 'சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்üவாசல் வரை பந்தயம் வைத்தார்கள். 

(நூல் :புகாரி 420) 

நபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹஃப்யா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட குதிரையை குதிரைபந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸ‚ரைக்கின் பள்ளிவாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்படாத குதிரையை ஓட்டினார்கள். சேனம் பூட்டப்பட்டு குதிரையில் சவாரி செய்வதென்பது அதிலேயே பயிற்சி பெற்ற வீரர்களால் மட்டும் தான் முடியும். நபி(ஸல்) அவர்கள் சேனம் பூட்டப்பட்டாமல் 6 மைல்கள் (இந்த கால கணக்கு படி 9 கி.மீ) குதிரை பந்தயத்தில் சென்றுள்ளாôகளென்றால் அதுவும் 50 வயதுக்கு பின்னால் அவர்களின் உடல் வலிமையை தெரிந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஜிப்பா தலைப்பாகையுமாக உடல் உழைப்பை செலுத்தாமல் பள்ளிவாசலுக்குள் முடங்கிகிடக்கவில்லை. பல வீரதீர போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. 

ஒட்டக பந்தயம்

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள். 

நூல் புகாரி: 6501 

பொம்மைகளை வைத்து விளையாடுதல்

இஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது. 

நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடை விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன? ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன ? என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா? என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் அபூ தாவூத் 4284 

நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன். என்னுடைய தோழிகள்(விளையாடுவதற்காôக) என்னிடத்தில் வருவார்கள். நபி(ஸல்) அவர்ளை கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் அவர் அனுப்பி வைப்பார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 4827 

தடைசெய்யப்ட்ட விளையாட்டுகள் சூதாட்ட விளையாட்டுகள்

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90) 

இன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : முஸ்லிம் 4194 

நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள் 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) புகாரி 6220