புதன், 27 மே, 2015

கத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015

கத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015


கடந்த 22-05-2015 வெள்ளிகிழமை அன்று (QITC)கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததானம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதில் நூற்றுக்கும் மேட்பற்றோர் தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்

பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது. இதில் சமூகமளித்த அனைத்து சகோதர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. 

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 7 பேர் கொண்ட குழுவை QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்
இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம்

(QITC) கத்தர் மண்டலத்தின் கிளைகளில் கடந்த இரு வாரங்களாக இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.