வியாழன், 4 ஜூன், 2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)

கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல QITC மர்கசில் மாதந்தோறும் இறுதி வியாழக்கிழமைகளில் நடைபெறும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி இன்று 28/05/2015 கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்றது இதில் பல சகோதர சகோதரிகள் பங்குகொண்டு ஆர்வத்துடன் தமது மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டனர், அதற்கு மௌலவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் அழகிய முறையில் பதிலளித்தார்கள், கடைசியாக சில அறிவுப்புகளுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


கத்தர் மண்டல சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. கோ.அப்துல் ஹமீது அவர்கள் “இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்” என்ற தலைப்பிலும், மவ்லவி. ரிஸ்கான் அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள், இதில் பல இந்திய இலங்கை சகோதரர்கள் பங்குகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.பக்ருதீன் அலி “நெகில்வூட்டும் அறிவுரைகள்” அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. முஹம்மத் அலி அவர்கள் “அவதூறு பரப்பாதீர்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.