தினமும் ஓர் நபிமொழி

ஆலோசனை கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனை கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

01-04-2016 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொதுக்குழு

கத்தர் மண்டல பொதுக்குழு 01/04/2016 வெள்ளிக்கிழமை காலை 7.15 மணி முதல் 11:15 மணி வரை QITC மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் முதலில் நிர்வாகிகள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். பிறகு குறை நிறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இறுதியாக TNTJ மாநிலத் தலைவர் சகோ. ‎ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி‬ அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.















ஃ பேஸ்புக்:

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

15/01/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/01/2016 வெள்ளிக் கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை QITC மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் மண்டல செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் குறிப்பாக கிளைகளின் செயல்பாடுகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி மண்டல பொதுச்செயலாளர் மௌலவி. முஹம்மத் அலி MISc அவர்களும் மண்டல துணைப் பொதுச்செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்களும் விவரித்து கூறினார்கள்.

கிளைகளில் நடைபெறும் தாவாவிற்காக மண்டல தலைமையை அணுகுவது குறித்து மண்டல துணைச்செயலாளர் சகோ. காதர்மீரான் அவர்களும், மாற்றுமத தாவாவின் அவசியம் குறித்து மண்டல துணைச்செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்களும் எடுத்துக்கூறினார்கள்.

முன்னதாக மண்டல துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் 'மனிதநேயமும் நமது தியாகமும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும், திருச்சியில் 31-01-2016 அன்று நடைபெறவிருக்கும் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" பணிகள் பற்றியும், அதற்கான நமது பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக குறைநிறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.










ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/2015






கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 12/06/2015 அன்று ஜும்மா தொழுகையை தொடர்து ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக்கூட்டம் மண்டல துணை தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது, இதில் கத்தர் மண்டல தாயிக்கள் கிளை பொறுப்பாளர்கள் QITC உறுப்பினர்கள் மற்றும் விசேஷ அழைப்பாளர்கள் ஆகிய எல்லோரும் கலந்து கொண்டனர்

ஆரம்பமாக சகோ. முஹம்மது  தமீம் அவர்களின் “தர்மத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது 

அதனை தொடர்ந்து மண்டல பொது செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc. அவர்கள்  ரமலானில் நடக்க இருக்கும் நிகழ்சிகள் பற்றியும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி பேசினார்

ரமலான் பித்ரா மற்றும் டிவி விளம்பரங்கள் பற்றியும் பேசப்பட்டது 

பின்னர் மண்டல துணை பொது செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் செயல்  வீரர்கள் தேர்வு பின்னர்   செயல்வீரல்கள் பங்களிப்பு, அவர்களது பொறுப்புக்கள் பற்றியும்,  அதனை அடுத்து மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் நடந்தது என்ன என்பத மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் சில வீடியோ காட்சிகளுன் விலக்கி கூறினார் இறுதியாக அனைவரின் கருத்துக்களும் கேட்டு பதியப்ப்பட்டன், மாலை 6.00 மணிக்கு நன்றி உரையுடன் நிகழ்சிகள் சிறப்பாக முடிந்தது. அல்ஹம்ம்துளில்லாஹ்

வியாழன், 11 ஜூன், 2015

QITC- கிளைகளில் தஃவா / மஷூரா (30/05/15 - 05/06/15)

QITC - பின் மஹ்மூத் கிளையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு



கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று கத்தர் மண்டல பொதுச் செயலாளர் சகோ முஹம்மத் அலி MISc. தலைமையில் மற்றும் மண்டல நிர்வாகிகளான சகோ.தஸ்தகீர், சகோ.அப்துர் ரஹ்மான், சகோ சாக்லா ஆகியோரும் முன்னிலையிலும் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக சகோ முஹம்மத் அலி MISc அவர்கள் “பொறுப்பாளர்கள் எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர், பழைய பொறுப்பாளர்கள் குறை நிறைகள் கேட்டரியப்பட்டு அதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டனர் , கிளைப் பொறுப்பாளர் சகோ. ஷேக் முஹம்மத் , துணைப் பொறுப்பாளர்கள் சகோ. அமானுல்லாஹ், சகோ. அப்துல் ஜலீல், சகோ. அப்துல்லாஹ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிறப்பு பயான் பற்றியும் புதிய பொறுப்பாளர்கள் எப்படி நடந்த்கொள்ள வேண்டும் மற்றும் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.


மேலும் 02-06-2015 அன்று மண்டல நிர்வாகி சகோ. தஸ்தகீர் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள், கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையின் வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கும் சிறப்பு பயானுக்கு அதிக மக்களை திரட்டி சிறப்பாக நடத்துவது போன்ற விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு கிளை மஷூரா

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc. தலைமையில் முந்தஸா கிளை பொறுப்பாளர்களுடன் கிளை மஷூரவும் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் கீழ்க்கண்ட ஆலோசனைகள் செய்யப்பட்டது.
  • கிளைப்போருப்பாளர்கள் வாரம் ஒருமுறையாவது பிரமத தாவா செய்யவேண்டும்
  • முஸ்லிம் சகோதரர்களை தனியாகவும் கேம்ப் களிலும் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கவேண்டும்
  • ஜும்ஆ பயான் பற்றிய தகவலை முந்தஸா பகுதி தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல்
  • கிளை வளர்ச்சிக்கான மாதாந்திர அறிக்கைகள் முறையாக மாதா மாதம் பூர்த்தி செய்து மண்டலத்திற்கு வழங்க வேண்டும்.


QITC - சனையா கிளையில் மஷூரா


கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 31-05-2015 அன்று சகோ. தாவூத் அவர்கள் தலைமையில் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் சனையா அல்நஜா பள்ளியில் மசூரா நடைபெற்றது

இந்த மசூராவில் கீழ்காணும் விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: இன்ஷா அல்லாஹ் 31/01/2016 அன்று நடைபெறவுள்ள "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?" என்பதை பற்றி விளக்கியும்,அதற்கான பொறுப்பாளர்கள் பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிளை தாவா: இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் "ஞாயிறு,செவ்வாய்" தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் தாவாவை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்: இன்ஷா அல்லாஹ் கிளை சார்பில் நடைபெறவுள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கான இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாற்று மத தாவா: இன்ஷா அல்லாஹ் அடுத்து வரக்கூடிய காலங்களில் வாரம் ஒருமுறை சனையா தெரு 47 ல் உள்ள "மார்க்கெட் பகுதி" யில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் மூலமாக மாற்று மத தாவாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பிற கிளையில் பங்களிப்பு: இன்ஷா அல்லாஹ் 05/06/2015 அன்று பின் மஹ்மூத் கிளையில் நடைபெறவுள்ள பயான் நிகழ்ச்சியில் அதிகமானவர்கள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

ரமலான் நிகழ்ச்சி: இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் மற்றும் அந்த நேரத்தில் செய்ய வேண்டிய "உணவு குழு" பொறுப்பையும் மேற்கொள்ளுதல் என மகிழ்ச்சியுடன் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

QITC- சனையா கிளையில் மாற்றுமத தஃவா



கத்தர் மண்டலம் 04-06-2015 அன்று சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், சனையா 47 பகுதியில் சென்று இலங்கையைகச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் என்றால் என்ன? என்பதை விளக்கமாக கூறி இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கினார் , அதனை தொடர்ந்து நேபால் மற்றும் ஹிந்தி மொழி சகோதர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கி தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

வியாழன், 4 ஜூன், 2015

QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)

QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் மர்கசில் கடந்த 29/05/2015 அன்று பெண்கள் சிறப்பு பயான் மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜுபைதா அவர்கள் "ரமலான் சிறப்பு " என்ற தலைப்பிலும்,

சகோதரி ரஹானா அவர்கள் "பிறர் மானம் காப்போம்" என்ற தலைப்பிலும்,

சகோதரி ஷமீனா அவர்கள் "தர்மத்தின் விளைவுகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,

அதனை தொடர்ந்து பெண்களுக்கான தஃவா ஆலோசனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் ...


QITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)

QITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம்

QITC யின் தஃவா ஆலோசனக்கூட்டம் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று QITC மர்கஸில் கத்தர் மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் தலைமையில் 7.15 மணி முதல் 9.45 மணிவரை நடைபெற்றது, இதில்

• வியாழன் மற்றும் வெள்ளி இறுதி செய்யப்பட்ட அட்டவணை

• கடந்த மாத தஃவா பணியின் குறை, நிறைகள்.

• புதிய செயல்பாடுகளுக்கான ஆலோசனைகள், கருத்துக்கள்

• ஷிர்க் ஒழிப்பு மாநாடு

• ரமலானில் விவாத மேடை

போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு சில தீர்மானகள் எடுக்கப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ்..



QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15), தஃவா மற்றும் கிளை மசூரா

QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “சோதனைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் “அல்குரானை ஏற்று நடப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் தமீம் MISc அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “இறை நினைவால் அடையும் பயன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் யூஸுப் அவர்கள் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அலி அவர்கள் “சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.மஸ்ஊத் அவர்கள் “மனிதர்களின் மானம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “ஜும்மாவின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...



QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க் மற்றும் பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.டாக்டர் அஹமது இப்ராஹீம் அவர்கள் “ஷஹ்பான் மாத பித்அத்துகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்..,



QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பராஅத் இரவு ஒரு பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுயமரியாதையை விட்டு யாசகம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “யார் முஸ்லிம் ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் “அலட்சிய தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- கிளைகளில் தனி நபர் தஃவா

QITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 26-05-2015 அன்று சகோ. பக்ருதீன் அலி அவர்கள் நார்டி என்ற இந்தோனேசிய சகோதரருக்கு குரான் ஹதீஸ் தான் மார்க்கம் என்று ஆங்கில மொழியில் தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

(Photo not taken)


QITC- கிளைகளில் மசூரா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..



QITC - சனையா கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் மற்றும் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் எதிர்வரும் வியாழக்கிழமை "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அது தொடர்பாக கிளை சார்பாக பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..  

தினமும் ஓர் இறைவசனம்