தினமும் ஓர் நபிமொழி

இஸ்லாத்தை ஏற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாத்தை ஏற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 27 & 28/02/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 27 & 28/02/15


நாள்: 26-02-15 
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. ஃபக்ருதீன் அலி
தலைப்பு: "மரணத்தின் பெயரால் அனாச்சாரங்கள்"


நாள்: 27-02-15 
இடம்: கர்த்தியாத் கிளை


நாள்: 27-02-15 
இடம்: சனையா அல் அத்தியா கிளை
உரை: சகோ. ஜிந்தா


நாள்: 27-02-15 
இடம்: மைதர் கிளை
உரை: சகோ. மனாஸ் பயானி


நாள்: 27-02-15 
இடம்: லக்தா கிளை
உரை: சகோ. அன்சார் மஜீதி
தலைப்பு: "தர்மம்"


நாள்: 27-02-15 
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா
தலைப்பு: "இறை நம்பிக்கை"


நாள்: 27-02-15 
இடம்: சலாத்தா ஜதீத் கிளை
உரை: சகோ. அன்வர்


நாள்: 27-02-15 
இடம்: அல் சத் கிளை
உரை: சகோ. அஹமத் இப்ராஹீம்


நாள்: 27-02-15 
இடம்: வக்ரா (2) கிளை
உரை: சகோ. அஹமத் இப்ராஹீம்




நாள்: 28-02-15 
இடம்: சனையா (St.43 EMCO Camp)

பொறுப்பாளர் சகோ. நவாஸ் தலைமையில் சகோ. அப்துல் ரஹ்மான் மற்றும் சகோ. அன்வர் அலி அவர்கள் ப்ரஜெக்டர் மூலம் பிறமத தாவா செய்தார்கள்.

மேலும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் தவாவின் அவசியம் குறித்து சொல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்காவை சேர்ந்த விஸ்ணு என்ற சகோதரர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்லாஹுஅக்பர் .

சனி, 26 அக்டோபர், 2013

அல்நஜாஹ் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட இலங்கையை சேர்ந்த பார்த்திபன்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை 24/10/2013 அன்று கத்தர்மண்டல சனையா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு இலங்கையை சேர்ந்த பார்த்திபன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார்.

அவருக்கு மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாமிய கொள்கை விளக்கத்தை (சஹாதா) சொல்லிகொடுத்தார்கள். அவர் தனது பெயரை இர்சாத் என்று மாற்றி கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அவருக்கு சகோதரர் பீ.ஜே. அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

திங்கள், 16 செப்டம்பர், 2013

இஸ்லாத்தை எற்றுக்கொண்டவர் அறிமுக நிகழ்ச்சி 12-09-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 12-09-2013 வியாழன் இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் கார்த்திகேயன் என்பவரது அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சகோதரர் கார்த்திகேயன் தனது பெயரை அமீர் என்று மாற்றி கொண்டதாக தெரிவித்தார். அவருக்கு மண்டல மூத்த அழைப்பாளர் சகோதரர், அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகோதரர், பீ ஜே அவர்கள் மொழிபெயர்த்த "திருக்குர்ஆன் தமிழாக்கம்" வழங்கினார்கள்.

பின்னர் மண்டல செயலாளர் மவ்லவி, முஹமத் அலி அவர்கள் "மாமனிதர் நபிகள் நாயகம், அய்யமும் தெளிவும், மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


ஞாயிறு, 30 ஜூன், 2013

கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிறமத சகோதரர் 27-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தார் மண்டல மர்கஸில் 27-06-2013 வியாழன் அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பின்னர் கத்தார் சனையா பகுதியில் அலுடெக் என்னும் நிறுவனித்தில் பணிபுரியும் புதுவையைச் சேர்ந்த கார்த்திக் ராமலிங்கம் என்ற இந்து மதத்தை சேர்ந்த சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார். அவருக்கு சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கத்தை சொல்லி கொடுத்தார்கள்.

தன்னுடைய பெயரை முகமத் சலீம் என்று மாற்றிகொல்வதாக அறிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்!




ஞாயிறு, 9 ஜூன், 2013

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுக நிகழ்ச்சி 06-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 06-06-2013 வியாழக்கிழமை புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுகம் வாராந்திர பயானிற்கு பிறகு நடைபெற்றது .

இதில் இராமநாதபுர மாவட்டம் இடைக்காட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த இந்து மதம் சேர்வார் பிரிவைச் சேர்ந்த சகோதரர் சிவக்குமரன் சில தினங்களுக்கு முன்பு தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டதாகவும், தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றிகொண்டதாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக, இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்து ரெட்டியார் பிரிவைச் சேர்ந்த சகோதரர் வீரமணி மாணிக்கம் சில தினங்களுக்கு முன்பு தன்னை இஸ்லாமிய மார்கத்தில் இணைத்துக்கொண்டு தன்னுடைய பெயரை முஹமத் என்று மாற்றிகொண்டதாக கூறினார். அவருக்கும் திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

QITC- நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அதில் சகோதரர் ஜீவன் இஸ்லாத்தை ஏற்றார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 17/08/2012 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய மாபெரும் "இப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர். A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். M. முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் "ஏழை ஆகிவிடாதே!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

பின்னர் இலங்கை சகோதரர் ஜீவன் அவர்களுக்கு சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் M.I.Sc அவர்கள் இஸ்லாமிய கொள்ளையை விளக்கினார்கள். அவர் இஸ்லாத்தை தான் வாலவியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது ஜீவன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார் வந்திருந்தநோன்பாளிகளுக்கு இது நெகிழ்வை ஏற்படுத்தியது.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இப்தார் செய்வதற்கான சிற்றுண்டி வழங்கப்பட்டு மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்டது.

மண்டல துணை பொருளாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். துணை செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குளுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!




ஞாயிறு, 8 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும்  கிருபையால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கத்தர் மண்டல கிளையில் 05-07-2012 வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு  இராமநாதபுரம் மாவட்டம்   இந்து ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த வீரமணி மாணிக்கம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.

அவருக்கு சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கத்தை சொல்லிகொடுத்தார்கள்  தனது பெயரை முஹமத் என்று மாற்றிகொள்வதாக அறிவித்தார். அவர்  பணியாற்றும் வீட்டின் முதலாளி அவரை நம்முடைய மர்கசிற்கு அவரை அழைத்து வந்தார். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே, அல்ஹம்துலில்லாஹ்!



ஞாயிறு, 24 ஜூன், 2012

21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21 -06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா .ஃ பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "பாதிக்கப்பட்டவன் நடந்துகொள்ளும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி.லாயிக் அவர்கள் "உள்ளம் சீர்பட இஸ்லாம் கூறும் சில விதிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சிறிய வேலை பெரிய கூலி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு என்ற ஊரைச் சேர்ந்த இரத்தினவேல் என்ற சகோதரர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இணைய விருப்பம் தெரிவித்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவருக்கு, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகாதா கலிமாசொல்லிகொடுத்தார்கள். இரத்தினவேல் என்ற தனது பெயரை முகமது அப்ஸல் என்று மாற்றிக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


திங்கள், 21 மே, 2012

18-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 18-05-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:40 மணி முதல் 7:40 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பனிரெண்டாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "வருங்கால வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 
இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு நான்கு வார  இடைவெளிக்குப் பிறகு, 22-06-2012 முதல் இம்மர்கஸில், மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.

இஸ்லாத்தை ஏற்றல்
சிறப்பம்சமாகஇந்நிகழ்ச்சியின் இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சார்ந்த சகோதரர். சிவானந்தம்இஸ்லாத்தில் நுழைந்துரியாஸ் என மாறினார். அவருக்குமௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் 'ஏகத்துவ உறுதிமொழியைவிளக்கிக் கூறினார்கள்.

 
மேலும் அவருக்கு பின்மஹ்மூத் கிளை பொறுப்பாளர். வழுத்தூர் ஜஹீர் அஹ்மத் அவர்கள் மார்க்க விளக்க புத்தகங்களை வழங்கினார்கள்.

சனி, 10 மார்ச், 2012

08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் "அஞ்ச வேண்டிய பிரார்த்தனைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "விருந்தோம்பல் " என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "இறுதிப்பயணம் " என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து,இந்தியாவில் திருச்சி-லால்குடியைச் சார்ந்த கிறித்தவ மத சகோதரர் ,மார்ட்டின் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தனது பெயரை முஹம்மத் என மாற்றிக் கொண்டார்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

தினமும் ஓர் இறைவசனம்