தினமும் ஓர் நபிமொழி

உம்ரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உம்ரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் உம்ரா பயிற்சி வகுப்பு 13-07-2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில் வெள்ளிக்கிழமை 13-07-2012  மாலை 7 மணி முதல் 8.30  மணிவரை  உம்ரா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
"நபி வழியில் நமது உம்ரா" என்ற தலைப்பில்  சவூதி மர்கஸ் அழைப்பாளர்  சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் நபி வழியில் எவ்வாறு உம்ரா செய்வது என்பது பற்றி  விளக்கப்படங்களுடன்  பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.
பின்னர் கலந்துகொண்ட சகோதர ,சகோதரிகள் தங்களுக்கு உம்ரா செய்வது குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் (QITC) சார்பாக "உம்ரா கையேடு" வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460

செவ்வாய், 27 மார்ச், 2012

"உம்ரா" வழிகாட்டி


உம்ரா பற்றிய நபி வழி சட்டங்களும், குறிப்பிட்ட இடங்களில் ஓத வேண்டிய துஆக்களும் அடங்கிய "உம்ரா கையேடு".










நன்றி: துபை TNTJ

புதன், 1 செப்டம்பர், 2010

QITC UMRA 2010



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

சனி, 12 செப்டம்பர், 2009

உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்



அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ,கத்தர் இந்திய மையத்தின் மார்க்க பேச்சாளார் சகோதரர் முஹம்மது அலீ அவர்கள் வழிக்காட்டுதலுடன் ஐம்பது பேர் கொண்ட உம்ரா பயணக்குழு கத்தாரிலிருந்து சென்றது. உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன் இருப்பதை க்காணலாம் . நபி வழிப்படி உம்ராவில் செய்ய வேண்டிய எல்லா கிரியைகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.
--------------------------------------------------------------------------------------
மக்காவிலிருந்து MMS மூலமாக தகவல் அளித்தவர் சகோதரர் முஹம்மது அலீ. 11-09-2009

புதன், 17 ஜூன், 2009

உம்ரா 2009


"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் "

என்பது நபிமொழி .

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் : புகாரி 1782 ,1863

இன்ஷாஅல்லாஹ் ! ரமலான் இறுதி பத்தில் மார்க்க அறிஞர் வழிகாட்டுதலில் செய் முறை பயிற்சியுடன் கூடிய நபி (ஸல் ) அவர்களின் காட்டித்தந்த வழியில் உம்ரா பயணம் மேற்க்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.

புனித மக்காவில் பத்துநாட்கள் .......

மதீனாவில் இரண்டு நாட்கள் ......
சிறந்த தங்குமிட வசதி .....

தினமும் இஸ்லாமிய நல்லொழக்க பயிற்சி வகுப்புகள் ....

என இஸ்லாத்தை பற்றி ஆழமாக அறிந்து க்கொள்ளும் அரிய வாய்ப்புகளுடன் இப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. உம்ரா செல்ல எண்ணமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் விவரங்களுக்கு உடன் தொடர்பு க்கொள்ளவும்
விண்ணப்ப படிவம்
Phone :4315863

e-mail:qitcdoha@gmail.com

-----------------------------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல்குரான் 3:110

------------------------------------------------------------------------------------------

சனி, 6 ஜூன், 2009

QITC உம்ரா 2009




வியாழன், 18 செப்டம்பர், 2008

உம்ரா பயணம்











அல்லாஹுவின் பெருங் கிருபையால் கத்தர் இந்தியா தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த உம்ரா பயணம் பஜ்ர் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் இருந்து இரண்டு பஸ்களில் பயணம் மேற்கொண்டார்கள்.
டிராவல்ஸ் பொது மேலாளரும் சலாத்தா ஜதீத் கத்தீப் யூசுப் அல் அவர்கள் வருகை தந்து பயண ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள்.

எல்லா பயணிகளுக்கும் இருக்கை சீட்டு கொடுக்கப்பட்டு முறையாக
அமர்த்தப்பட்டனர் . பின்னர் இரண்டு பஸ்களும் 6:00 மணிக்கு புறப்பட்டது .
பயணம் இனிதாகவும் பாதுகாப்பாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக .

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

வியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புறப்பட இருக்கிறது.

"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜு க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி" . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி) நூல் :புகாரி 1782 ,1863.
ரமலானில் கடைசி பத்து நோன்பு நாட்களில் லைலத்துல் கதர் இரவை அடைவதற்காக இன்ஷா அல்லாஹ் உம்ரா செல்ல 18-09-2008 அதிகாலை இரண்டு பஸ்களில் சகோதர சகோதிரிகள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே சகோதர சகோதரரிகள் ஸகர் செய்து விட்டு சரியாக பஜ்ர் தொழுகைக்கு மர்கசில் வந்து சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். துக்கான் , ரஸ்லாப்பான்,அல்கோர் போன்ற தொலைதூரத்திலிருந்து வரும் சகோதரர்கள் இரவிலே வந்து தங்குவதற்கு மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பஸ்களும் நமது மர்கசிலிருந்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்படும்.
நேரம் தவறாமல் எல்லாரும் சரியான நேரத்தில் வருகை தரவும்.
தங்களுடைய பயணம் இனிதாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

ரமலானில் உம்ரா

ஏக இறைவன் திரு பெயரால்
இன்ஷா அல்லா ஹ் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ் வருடம் ரமலான் கடைசி பத்தில் உம்ரா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது . எனவே சகோதர சகோதரிகள் உம்ரா பயணம் மேற்கொள்ள நிய்யத் உள்ளவர்கள் உடன் தொடர்ப்பு கொள்ளவும் . போன் : 4315863.ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ் க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி .
அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் புஹாரி :1782, ௧௮௬௩.
உம்ரா படிவம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யுங்கள்

தினமும் ஓர் இறைவசனம்