தினமும் ஓர் நபிமொழி

கட்டுரை போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு - 30/05/2019


QITC- அறிவிப்பு 👇
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
QITC- யின்
🔆 ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி- 2019

🔆 முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு
&
🔆 இரவுத் தொழுகையில்  இணைந்து கொள்வோம்

கத்தர் மண்டலம்
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 30-05-2019 வியாழக் கிழமை இரவு

✍ நேரம்: இரவு 9:00 Pm to 9:45 Pm மணி வரை இஷா 2+2 இரவுத் தொழுகை

9:45 pm to 12:40 am மணி வரை சிறப்பு நிகழ்ச்சி

✍ இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் 30-05-2019 வியாழக்கிழமை அன்று QITC மர்கஸில்  இரவு 9:00 PM முதல் 1:45 AM வரை ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


நிகழ்ச்சி நிரல்👇

👉 9:15pm முதல் 10:00pm வரை : இஷா +2+2 ரக்ஆத்துகள் தொழுவிக்கப்படும்

📣 சிறப்புரை📣
🎤 தலைமை : சகோ.தஸ்தகீர்
(மண்டல தலைவர்)

  10:00 Pm முதல் 10:20 Pm: 👇
🎤 சகோ. தஸ்தகீர்
(மண்டல தலைவர்)
📗 தலைப்பு: சிந்தனை செய் மனமே!

🔵 10:20 Pm முதல் 11:00 Pm : 👇
🎤 மவ்லவி. முஹம்மத் அலி M.I.Sc
(மண்டல செயலாளர்)
📗 தலைப்பு: நபிகளார் கண்கள் சிவந்த தருணங்கள்

🔵 11:00 Pm முதல் 11:30 Pm வரை:👇
🎁 கட்டுரைப் போட்டி & கிராஅத் போட்டிகளுக்கான பரிசு வழங்குதல்
🎁🎁

🔵 11:30 Pm முதல் 11:40 Pm வரை: 👇
🎤 இஸ்லாத்தை தழுவியவரின் உரை

🔵 11:40 am முதல் 12:40 am: 👇
🎤 மவ்லவி. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
(மாநில பேச்சாளர்-TNTJ)
📗 தலைப்பு: கணவன் மனைவி கடமைகள்

👉 12:40 முதல் 12:55 வரை:
இடைவேளை (ஒளூ மற்றும் இயற்கை தேவைகள்)

👉 12:55 முதல் 1:45 வரை:
 4ரக்ஆத்
+வித்ர் தொழுவிக்கப்படும்
+பிரார்த்தனை நேரம்

👉 1:45 முதல்
 ஸஹர் உணவு.

நன்றியுரை : சகோ.ஹாஜா
(மண்டல அணிச் செயலாளர்)

▫▫▫▫▫▫▫▫▫▫

புனித மிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை, சிறப்புரைகளில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
குறிபபு👇

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.

🖍 பிறமத சகோதர, சகோதரிகளுக்களின் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் 31-05-2019 அன்று வழங்கப்படும்.

  கட்டுரைப் போட்டி பரிசளிப்பு பற்றிய தகவல் சம்பந்தப் பட்ட சகோதர சகோதரிகளுக்கு தொலைபேசி மூலம் 29-05-2019 க்குள் SMS அழைப்பு வரும். அழைப்பு வராதவர்கள் உடனே 66579598 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்திற்கு முன் அனைவரும் மர்கஸ் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
26-05-2019
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

புதன், 13 மார்ச், 2019

QITC-யின் முஸ்லிம்களுக்கான ரமலான் கட்டுரைப் போட்டி - 2019

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

📌 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்

📌 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

📌 அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது அவசியம் பார்வையிட்டபின் கட்டுரை எழுதவும்

📌 தலைப்புகள் 👇

1) 📌 பெண் என்பவள் யார்?

2) 📌 நட்பு கொள்ளும் முறைகளை அறிவோம்

3) 📌 பயிரிடப்பட வேண்டிய காலம்

4) 📌 இஸ்லாத்தின் பார்வையில் விவேகம்

(ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டும் கட்டுரை எழுதவும்)

போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

🎁  சிறந்த பரிசுகள் காத்திருக்கிறது

🗓 கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26/04/2019

⏰ *மேலதிக விவரங்களுக்கு: 50111203*


அன்புடன்
மண்டல நிர்வாகம்
13-03-2018
📞 44315863, 66316247,55532718, 66579598

QITC-யின் பிறமத சகோதர சகோதரிகளுக்கான ரமலான் கட்டுரைப் போட்டி - 2019

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

✍ QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் எங்கள் தொப்புள்கொடி உறவாகிய உங்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்

✍ அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

✍ அதற்கான நோட்டீஸ் கீழே வெளியிடப்பட்டுள்ளது அவசியம் பார்வையிடவும்

கட்டுரையின் தலைப்பு 👇

📌 பரவலாகும் ஒழுக்ககேட்டிற்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன.....?

🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடயும் 👇

முதல் பரிசு- I Lite Note Book

இரண்டாம் பரிசு- Micro Oven

மூன்றாம் பரிசு- Food Processor


🗓 கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26/04/2019

⏰ மேலதிக விவரங்களுக்கு: 50111203




அன்புடன்,
மண்டல நிர்வாகம்
13-03-2019
📞 44315863, 66316247,55532718, 66579598

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018


QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

📌 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்

📌 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

📌 அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது

📌 தலைப்புகள் 👇

1) கல்வியின் அவசியம்
2) இஸ்லாமிய இல்லம்
3) இறைவனின் அருட்கொடை

🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

மேலதிக விவரங்களுக்கு: 50111203

அன்புடன்

மண்டல நிர்வாகம்
08-04-2018
📞 44315863, 66316247, 55532718, 66579598

QITC யின் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப் போட்டி - 2018

ஏக இறைவனின் திருப்பெயரால்...



QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018

(இது முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான போட்டி)

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

✍ QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் எங்கள் தொப்புள்கொடி உறவாகிய உங்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.

✍ அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

✍ அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடயும் 👇

1. முதல் பரிசு - I Lite Note Book

2. இரண்டாம் பரிசு - Micro Oven

3. மூன்றாம் பரிசு - Food Processor

🗓 கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03-05-2018

மேலதிக விவரங்களுக்கு: 50111203

அன்புடன்

மண்டல நிர்வாகம்
05-04-2018
📞 44315863, 66316247, 55532718, 66579598

➡ இதை அனைவருக்கும் Forward செய்யவும் ➡

சனி, 17 அக்டோபர், 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டீஸ் - உருது


பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

அதனை விளக்கும் உருது நோட்டீஸ்:



வியாழன், 11 ஜூன், 2015

QITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள் 18/06/2015 வரை நீட்டிப்பு


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு,

QITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் கட்டுரைப் போட்டியை நடத்த இருக்கிறது. இந்த கட்டுரைப் போட்டியில் நீங்களும் பங்குபெற்று, சிறந்த கட்டுரைகளை அனுப்பித்தருமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: கடைசி நாள் 18/06/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு ...

ஞாயிறு, 10 மே, 2015

QITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்பு


QITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு,


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் கட்டுரைப் போட்டியை நடத்த இருக்கிறது. இந்த கட்டுரைப்போட்டியில் நீங்களும் பங்குபெற்று, சிறந்த கட்டுரைகளை அனுப்பித்தருமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


கட்டுரைப்போட்டிக்கான தலைப்புகள் 

ஆண்களுக்கான தலைப்புக்கள்

1. இஸ்லாமிய வளர்ச்சியின் மீதான உலக நாடுகளின் அச்சம்

2. செயல்களால் முன் வைக்கப்படும் அழைப்புப் பணியின் வலிமையும் -அதன் தாக்கங்களும்

3. இஸ்லாத்தைப்பற்றிய ஊடகங்களின் பொய் கட்டமைப்புகளும் – அதை நீக்குவதற்கான தனிமனித வாழ்வியல் உத்திகளும்

4. தடுமாற செய்யும் சோதனைகள்

பெண்களுக்கான தலைப்புக்கள்

1. இன்றைய முஸ்லிம் பெண்கள்

2. ஏகத்துவ கொள்கை இன்னும் நம் வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

3. நபித்தோழர்களும் தியாகங்களும்

4. உயர்த்தப்பட்ட கபுருகள் தரைமட்டமாக்கப்பட வேண்டியதே


திங்கள், 12 மே, 2014

QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 20/7/2014

 

QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2014

 கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இக்கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும். 


கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது . இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம் அதனடிப்படையில்
" திருக் குர்ஆன் என் பார்வையில் "
என்ற தலைப்பில் தாங்கள் அறிந்ததை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .


குறிப்பு ;

1. இதில் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை கவனமாக பார்க்கவும் .

2. இந்த நோட்டீஸ் அல்லது மெயில் தங்கள் கைகளில் கிடைத்ததும் உடனே தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற என்னுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது.

4. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது 

கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 6/6/2014
20/7/2014

கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.

பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் 15/08/2014 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது சகோதரர்கள் இதனை பயன்படுத்தி தங்களின் பிறமத நண்பர்களை ஆர்வமூட்டி 20/07/2014 க்குள் கட்டுரைகளை சமர்பிக்க செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 30 ஜூன், 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைப்பெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28/06/2013

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், 28/06/2013 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில், பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற முதல் மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், அதனையொட்டி வருகை தந்திருந்த பிறமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் செயலாளர் சகோதரர் முஹ்ம்மது அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி, பின் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்களை தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் இஸ்லாம் எப்படி பேணச்சொல்கிறது என்றும் மண்டலத்தலைவர் மஸ்ஊத் அவர்களின் சிறிய அறிமுகத்துடன், கேள்வி பதில் நிகழ்ச்சியை மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் தொடங்கினார்கள்.

மிக விறுவிறுப்பாக இரண்டு மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், இன்றைய கால சூழலுக்குகேற்ப சிறப்பான கேள்விகள் கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சகோதரர் தமீம் அவர்கள் அழகான முறையில், ஆழமான பதிலை புதிய கண்ணோட்டத்துடன் நன்றாக புரியும்படி எடுத்துரைத்தார்கள்.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறையில் தங்களுடைய பொழுதுபோக்கினை ஒதுக்கி வைத்துவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மத சகோதரர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.

அரங்கம் முழுவதும் பிற மத சகோதரர்களால் நிறைந்திருந்தது. நம் சகோதரர்களை அரங்கத்தின் வெளியே அகண்ட திரை அமைக்கப்பட்டு புரோஜக்டர் மூலம் நிகழ்ச்சியை காண எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இருநூறூக்கும் மேல்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். "இஸ்லாம் என் பார்வையில்" கட்டுரையில் முதலாவது பரிசு வென்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் மண்டலத்தலைவர் மஸ்ஊத்.

இரண்டாவது பரிசு வென்ற சகோதரர் அருள் முருகன் அவர்களுக்கு டாபெலெட் பரிசாக வழங்கினார் மண்டல அழைப்பாளர் முஹம்மது தமீம்.

மூன்றாவது பரிசாக சாம்சங் போனை சகோதரர் விஸ்வனாதனுக்கு சகோதரர் கோட்டக்குப்பம் அப்துல் வதூத் அவர்கள் வழங்கினார்கள்.

கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்ற சகோதரர்களுக்கு 16 திருக்குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பல் வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் உணவு பரிமாரப்பட்டது.

துணைச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி பெரும் பொருட் செலவில்லாமல் எளிய முறையில் நடைபெற்றது. எனினும் அல்லாஹுவின் உதவியால் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக உருவெடுத்தது. அல் ஹம்துலில்லாஹ்!









வியாழன், 6 ஜூன், 2013

ரமலான் கட்டுரைப்போட்டி - பெரியவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு ,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் பெரியவர்கள், மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்துகிறது.

இந்த கட்டுரைப்போட்டியில் நீங்களும் பங்குபெற்று, உங்களது குழந்தைச் செல்வங்களையும் பங்கு பெற ஊக்கப்படுத்துங்கள்.

பெரியவர்களுக்கான தலைப்பு:
  • முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி 
  • இஸ்லாத்தின் பார்வையில் நவீன உலகம்
  • அமல்களை பாழ்படுத்தும் செயல்கள்
ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதவேண்டும்.


சிறுவர் சிறுமியர்களுக்கான தலைப்பு:
  • இஸ்லாம் கூறும் லட்சிய வாழ்வு
  • கல்வியின் அவசியம்
ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதவேண்டும்.

கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்:  01/07/2013

மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்க்கவும்.

திங்கள், 20 மே, 2013

QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2013



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இந்த கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதை மெயிலாக மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.

கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !

நம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது. இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம். அதனடிப்படையில் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் தங்கள் மனதில் தோன்றியதை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு :

1. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற எண்ணுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

2. கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-06-2013

3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது

4. கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.

தினமும் ஓர் இறைவசனம்