தினமும் ஓர் நபிமொழி

குழந்தைகள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ரமலான் 2024 - சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்



கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு.... 

எதிர்வரும் ரமலான் மாதம் நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபயறும் சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & பெரியவர்களுக்கான கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்  கீழ்க்காணும் லிங்க்-ல் உள்ளது. அனைவரும் அதை பதிவிறக்கம் செய்து போட்டிக்கு சிறப்பாக முறையில் தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🔗 Link👇🏻

சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம் & கிராஅத் LINK 👇




பேச்சுப்போட்டி பயான் குறிப்புகள் LINK 👇




பெரியவர்களுக்கான கிராஅத் போட்டி LINK 👇




இப்படிக்கு 

கத்தர் TNTJ
தேதி : 31-01-2024

வியாழன், 9 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - மாணவ,மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி & கிராஅத் போட்டி- 09/052019


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

இன் ஷா அல்லாஹ் 09-05-2019 வியாழன் அன்று QITC மர்கஸில் இரவு 9:15 PM மணிக்கு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி & மாணவ,மாணவிகளுக்கான அறிவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

📣 சிறப்புரை📣


🎤 மாணவ,மாணவிகளின் பேச்சுப் போட்டி

📕 பல்சுவைத் தலைப்புகள்


🎤 மாணவ,மாணவிகளின் கிராஅத் போட்டி

📕 சூரா அல் பகரா


🎤 சகோ.காதர் மீரான்
(மண்டல பேச்சாளர் )

📕 தலைப்பு: ரமலானில் ஏற்படவேண்டிய மாற்றங்கள்


🎤 இஸ்லாத்தை தழுவியவர்களின் உரை


🎤 மவ்லவி. முஹம்மத் அலீ MISc
(மண்டல செயலாளர் )

📘 தலைப்பு: இஸ்லாம் கூறும் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

புனித மிகு ரமலான் மாதத்தில் சிறப்புரை மற்றும் ஸஹரில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக Jazakallahu Khaira👍


குறிப்பு :👇

🖍 இரவுத்தொழுகை 8:00 pm மணிக்கு நடைபெறும்

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

🖍 அறிவுப் போட்டியில் கலந்துள்ள பிள்ளைகளை நன்கு பயிற்சி அளித்து இரவுத்தொழுகைக்கே மர்கஸிற்கு அழைத்து வரவும். தாமதமாக வரும் பிள்ளையின் பெயர்கள் முன்கூட்டியே அழைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

📌 மாதந்தோறும் நடைபெற்று வரும் திருக்குர்ஆன் அறிவுப் போட்டி இந்த மாதம் 23-05-2019 அன்று நடைபெறும்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
07-05-2019

புதன், 16 ஜனவரி, 2019

QITC-யின் திருக்குர்ஆன் அறிவியல் கண்காட்சி 11/01/2019


கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் திருக்குர்ஆன் அறிவியல் கண்காட்சி 11/01/2019 வெள்ளிக்கிழமை மதியம் 3:00 முதல் 9:30 மணிவரை அல்லாஹ்வுடைய அருளால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இக்கண்காட்சியில் 400 மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

1. மழை நீரைப் பற்றி திருக்குர்ஆன்

மழை நீரைப்பற்றிய விளக்கத்தை கொடுப்பவர்கள்

அல் ஹிக்மா மாணவிகள் - ஃபிர்தவ்ஸ், நஜ்லா & ஜொஹ்ரா




2. திருக்குர்ஆன் ஒழித்துக் காட்டிய சமூக தீமைகள்

மதுவினால் ஏற்படும் தீமைகளையும் குர்ஆன் எவ்வாறு மதுவை தடை செய்துள்ளது என்பதையும் விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - ஃபயாஸ்




3. திருக்குர் ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

கொலை, திருட்டு,.... போன்ற குற்றங்களும் அவைகள் குறைய குர்ஆன் கூறும் தீர்வுகளும் என்பதை விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - அப்துர் ரஹ்மான்




4. தேனும் தேனீக்களைப்பற்றி திருக்குர்ஆனும்

தேனீக்களைப் பற்றிம், அவைகளில் தேன் எவ்வாறு கிடைக்கிறது...?, ஆண் பெண் தேனீக்களில் எது தேனை தருகிறது என்பதைப் பற்றியும், திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - அஃப்தாப்




5. திருக்குர்ஆன் கூறும் நூஹ் நபி வரலாறு

நூஹ் நபியின் வரலாறு இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - டானீஷ்




6. சின்னசிறு குருவிகள் யானைப்படைகளை அழித்த வரலாற்றினை விளக்குகிறது திருக்குர்ஆன்

கஃபாவை இடிக்க வந்த ஆப்ரஹா என்ற மன்னனின் யானைப்படைகளை சின்னசிறு குருவிகள் அழித்த வரலாற்றினை விளக்குகிறது திருக்குர்ஆன்.....
இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவி - ஃபாதிமா ஹிப்பா




7. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது விளக்குகிறது திருக்குர்ஆன்

பால் வயிற்றில் இரத்தத்திற்க்கும் சானத்திற்க்கும் இடைப்பட்டவற்றிலிருந்து உருவாகிறது என்பதை திருக்குர்ஆன் அழகாக விளக்குகிறது....

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவி - ஹானியா




8. திருக்குர்ஆன் கூறும் மழை நீரும் அதன் சுழற்சியும்

நீர் எவ்வாறு வானில் சேமித்து வைக்கப்படுகிறது, மழையாக மீண்டும் எவ்வாறு பூமிக்கு வருகிறது என்ற சுழற்சி முறையை திருக்குர்ஆன் அழகாக விளக்குகிறது....

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவிகள் - அஃப்ரா ஹனீஃப் & ஸஃபானா யாஸ்மீன்




9. மலைகளை முளைகளாக ஆக்கிஉள்ளோம் என்பது திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை

பூமி அதன் மேல்தட்டுகளில் ஆட்டம் காணாமல் இருக்க மலைகளை முளைகளாக ஆக்கி உள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது இந்த அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் அழகாக விளக்குகிறது....

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - அப்ரார்




10. தேனும் தேனீக்களைப்பற்றி திருக்குர்ஆன்

தேனீக்களைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை விளக்குகிறார்.

அல் ஹிக்மா மாணவன் - (அப்துஸ்) ஸுப்ஹான்




11. இரவு பகல் மாறி மாறி வருவது திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை

இரவு பகல் மாறி மாறி வருவது ஏன்..... ? எப்படி இரவும் பகலும் வருகிறது......? ஏன் நார்வே போன்ற பகுதிகளில் இரவு பகல் பலமாதங்கள் நீடிக்கிறது.....

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - அபீஃப்




12. உலகம் உருவான விதம் விளக்குகிறது திருக்குர்ஆன்

உலகம் உருவான விதம்......, அலங்கரிக்கப்பட்ட பிரபஞ்சம்........ solar system......, என அனைத்தையும் அழகிய முறையில் விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவிகள் - அஃப்ரீன், ஸமீஹா & யுஸ்ரா




13. எரிமலை விளக்குகிறது திருக்குர்ஆன்

எரிமலைகளும் அது தரும் சிந்தனைகளும் விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - முஹம்மத் ஷஹீன்




14. கடல் பிளந்து மூஸா நபி காப்பாற்றப்பட்டதை கூறும் திருக்குர்ஆன்

பிர்அவ்ன் அளிக்கப்பட்டதை விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவன் - முஹம்மத் ஃபகீர்




15. மரத்திலிருந்து இலை உதிர்வது கூட இறைவன் அறிந்ததே

எந்த சிறியதையும் இறைவன் அறிந்து தான் வைத்துள்ளான்.... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவன் - ஷர்வான்




16. ஒட்டகம் நம் காலத்தில் வாழும் அற்புதம் பற்றி திருக்குர்ஆன்

ஒட்டகம் நம் காலத்தில் வாழும் அற்புதமாகும்...... அதன் உடல் அமைப்பு....... ஆற்றல்....... அதில் மனிதன் பெற வேண்டிய படிப்பினை..... விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவி - லரீஃபா




17. கடல்களுக்கு மத்தியில் திரையும் திருக்குர்ஆனும்

இரண்டு கடல்களுக்கு மத்தியில் திரை உள்ளது அதை அவைகள் கடப்பதில்லை..... விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவன் - இப்ரராஹீம்




18. பொய் கூறும் முன்நெற்றி ரோமமும் திருக்குர்ஆனும்

முன்நெற்றி ரோமம் என்றால் என்ன.... மூளையின் செயல் திறன்...... பொய் முன்மூளையில் இருந்து தான் வருகிறது....... விளக்குகிறது திருக்குர்ஆன்......

இது இன்றைய விஞ்ஞானத்தின் சான்றாகும்..... என்பதைப் பற்றி விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவி - ஃபஹீமா




19. பல மொழிகளில் ஒரேமாதிரியான திருக்குர்ஆன்

85 மொழிகளுக்கும் மேலாக திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது....
25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குர்ஆன் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இது இறைவனின் வேதம் என்பதற்கு சான்றாகும்..... விளக்குகிறார்....

QITC- கத்தர் மண்டல இணை செயலாளர் - சகோ.அப்துர் ரஹ்மான்




21. ஜக்காத்தும் திருக்குர்ஆனும்

ஜக்காத்தைப் பற்றி விளக்குகிறார்.... அல் ஹிக்மா மாணவன் - இஸ்மாயில் புஃஹாரி




22. தேனும் தேனீக்களைப்பற்றி திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்

தேனீக்களைப் பற்றிம், அவைகளில் தேன் எவ்வாறு கிடைக்கிறது...?, ஆண் பெண் தேனீக்களில் எது தேனை தருகிறது என்பதைப் பற்றியும், திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை விளக்குகிறார்....

அல் ஹிக்மா மாணவி - ரிஃபானா




23. பெண்களுக்கும் சொத்துப் பங்கிடும் திருக்குர்ஆன்

தாய்க்கு சொத்தில் எவ்வளவு பங்குள்ளது.......
மனைவிக்கு சொத்தில் எவ்வளவு பங்குள்ளது......
சகோதரிக்கு சொத்தில் எவ்வளவு பங்குள்ளது.......
மகளுக்கு சொத்தில் எவ்வளவு பங்குள்ளது......... விளக்குகிறது திருக் குர்ஆன்

அறிவார்ந்த வேதம் திருக்குர்ஆன் என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவர்கள் - ஃபிராஸ் லுத்ஃபி & நதீம்



24. யுனிவர்ஸும் திருக்குர்ஆனும்

சூரியன், பூமி, சந்திரன், ...... இது போன்ற பல கோள்கள்...... துகளும் இல்லாத்திதிலிருந்து வந்தவைகளா....? விளக்குகிறது திருக் குர்ஆன்

அறிவார்ந்த வேதம் திருக்குர்ஆன் என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவர்கள் - முஃபீஸ் & முபினா




25. யுனிவர்ஸும் திருக்குர்ஆனும்

சூரியன், பூமி, சந்திரன், ...... அதன் சுழற்சி... இது போன்ற பல கோள்கள்...... சுழன்றுகொண்டுள்ளது? விளக்குகிறது திருக்குர்ஆன்

அறிவார்ந்த வேதம் திருக்குர்ஆன் என்பதைப் பற்றி விளக்குகிறார்கள்....

அல் ஹிக்மா மாணவர் - ஆரிஸ்





மேலும் போட்டோ & வீடியோ பார்க்க: https://www.facebook.com/qatartntj/

வியாழன், 20 ஏப்ரல், 2017

மார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்


பேச்சுப் போட்டிக்கான குறிப்புகள்:

1. அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

2. உளுவின் சிறப்புகள்

3. புறம் பேசாதீர்!

4. வீண் விரயம் செய்யாதீர்!

5. பொய் பேசாதீர்

6. பிறர் நலம் நாடுவோம்

7. தொழுகையின் சிறப்பு

8. ரமலான் தரும் நன்மைகள்

9. உறவுகளை தகர்கும் ஸ்மார்ட் ஃபோன்

10. தர்மம்

11. அகழ்ப் போர்

12. பெற்றோர்களை பேணுவோம்

13. தீய குணங்கள் மண்மூடிப் போகட்டும்

14. ஏகத்துவத்தில் உறுதி

15. பத்ருப் போர்



அறிவுப்போட்டிக்கான சூராக்கள், ஹதீஸ்கள் மற்றும் துவாக்கள்:

1. KG-1 | 2-3 | 4-5 | 6-7 | 8-9

2. ஹதீஸ்கள் (அரபி உச்சரிப்புடன்)



கண்ணியத்திற்குரிய பெற்றோர்களுக்கு...

✍ QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.

✍ அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

✍ அதற்கான படிவத்தை பதிந்திருக்கிறோம். அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 28-04-2017 க்குள் நமது மர்கஸில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

📌 அறிவுப்போட்டிக்கான விண்ணப்ப படிவம்

📌 பேச்சுப் போட்டிக்கான விண்ணப்ப படிவம்

போட்டிகள்:

📘 ஹதீஸ் மற்றும் துஆ மனனப்போட்டி

📗 குர்ஆன் மற்றும் ஹதீஸ் மனனப்போட்டி

📕 பேச்சுப் போட்டி

குறிப்பு:

1) பேச்சுப்போட்டி, ஹதீஸ்கள் மற்றும் துஆக்களுக்கான குறிப்புகள் மர்கஸில் வழங்கப்படும். (நமது இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான லிங்குகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.)

2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.

3) தகுதிச் சுற்றுப்போட்டிகள் 19-05-2017 அன்று நடைபெறும்.

4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.

5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது.

இப்படிக்கு,
QITC நிர்வாகம்
17-04-2017
தொடர்புக்கு: 6657 3836, 4431 5863




தொடர்புடையவை:

📌 100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)

📌 பேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)

📌 பிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)

திங்கள், 14 டிசம்பர், 2015

சிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோ தொகுப்பு - QITC யின் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" 04-12-2015


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று (தோஹா) மதீனா கலிஃபாவிலுள்ள "ஸவூதி மர்கஸ்" வளாகத்தில் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" (மினியேச்சர்) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2016 ஜனவரி 31 அன்று திருச்சியில் நடக்க இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை" ஒட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாற்று மத சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் இடம்பெற்ற சிறுவர் சிறுமியர்களின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோக்களின் தொகுப்பு:

1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14

செவ்வாய், 23 ஜூன், 2015

QITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015


கத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 18/06/2015 அன்று மண்டல மர்கசில் முதல் சஹர் சிறப்பு நிகழ்ச்சி இரவுத் தொழுகை முடிந்தவுடன் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது , 

இதில் முதலாவது சிறுவர் சிறுமியர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் துஆ மனனம் இறுதிப்போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சு போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது , 

இறுதியாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர் M.M சைபுல்லாஹ் MISc அவர்கள் "பாவமன்னிப்பு அதிகமாக செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் , 

இதில் 340 திறக்கும் அதிகமான சகோதர சகோதரிகள், சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சஹர் உணவும் பரிமாறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.






  





ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டி தேர்வு 11/06/2015







கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 11/06/2015 வியாழக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டியின் துஆ  மனனம் மற்றும் குர்ஆன் மனனப்போட்டியின் இறுதிப்போட்டிக்கான தேர்வு 
மண்டல துணை செயலாளர் சகோ தஸ்தகீர் தலைமையில் மவ்லவிகள் சகோ முஹம்மத் அலி MISc, சகோ அன்சார் மஜ்தி, சகோ அப்துஸ் ஸமத் மதானி, சகோ முஹம்மத் தமீம் MISc, சகோ மனாஸ் பயானி, சகோ ரிஸ்கான் அவர்களின்  கண்காணிப்பில்  நடைபெற்றது இதில் 50 கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் 


இறுதியாக மவ்லவி முஹம்மது தமீம் MISc. அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ், 

சனி, 15 பிப்ரவரி, 2014

14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா



14-02-2014 கத்தர் மண்டல அல் கோர் கம்யுனிடி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா நடைபெற்றது. அல் கிளை பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் தலைமையில், மண்டல செயலாளர் முஹம்மத் அலி தொடங்கி வைத்தார்கள். இறையச்சம் பேணுவோம் என்ற தலைப்பில் மௌலவி அப்துஸ் சமது மதனீ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் அல் கோர் கம்யுனிட்டி வளாகத்தில் சிறுவர் களுக்கான குர் அன் ஓதும் பயிற்சி வகுப்பை, கத்தர் மண்டல தாயி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகிறார்கள். குர் ஆன் பயிற்சியுடன், து ஆக்கள் மனனம் செய்வது, பயான் செய்ய பழகுவது, மற்றும் தொழுகை பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவன் உகஷா "தொழுகை செயல் முறை பயிற்சியையும்", மாணவன் அம்மார் "அரபு எழுத்துகள் உச்சரிப்பு" பற்றியும், மாணவன் அஷரப் "தூங்குவது ஒழுங்குகள்" பற்றியும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மாணவன் முஸ்தாக், மாணவிகள் ரசீனா, வாஜிதா உரையாற்றினார்கள். பின்பு போட்டியில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மௌலவி மனாஸ் பயானி அவர்களும், "குர் ஆனும் ஹதீசும்" என்ற தலைப்பில் மௌலவி தமீம் அவர்களும் உரையாற்றினார்கள்.
மண்டல தலைவர் மஸ் ஊத் அவர்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நஸீர் அவர்ககள் அறிவிப்புகள் செய்தார்கள். இறுதியாக சகோதரர் இப்ராஹீம் நன்றி உரையாற்றினார்கள். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ் !






مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 14 ஜூலை, 2013

2013 ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் - குர்ஆன் மனன போட்டி மற்றும் பேச்சு போட்டி 11/07/2013

அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கடந்த 11/07/2013 வியாழன் அன்று ரமலான் 2013 சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு 10.00 மணிக்கு மர்கசில் தொடங்கியது. முதலாவதாக சிறுவர்களுக்கான குர்ஆன் மனனபோட்டி மற்றும் பேச்சு போட்டி நடைப்பெற்றது.

உள்ளம் கவர்ந்த மழலைகள் மனனம்

திருக்குர்ஆனில் உள்ள இரண்டு சிறு சிறு அத்தியாயங்களை ஒதி காண்பிக்குமாறு சொல்லப்பட்டது. அதை அழகான முறையில் அம்மழலைகள் ஓதி காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது.

முலையிலேயே கொள்கை உறுதியூட்டப்பட்ட இளம்சிறார்கள் பேச்சு

ஆறு முதல் ஏழாம் வகுப்பு வரையில் உள்ள சிறுவர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றார்கள்.

இப்போட்டிகளில் 35 சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொண்டார்கள். போட்டியின் நடுவர்களாக சகோதரர் அப்துஸ்ஸமது மதனி, சகோதரர் மவ்லவி முஹம்மது லாயிக், சகோதரர் அப்துன் நாசர் ஆகிய மூவர் அடங்கிய குழு செயல்பட்டது.

இரவு சரியாக 12:00 மணிக்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியாக, தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் "மறுமையை நோக்கி முஸ்லீம்களின் இலக்கு" என்ற தலைப்பில் உரை இடம் பெற்றது.

அரங்கம் முழுவதும் நிரம்பி, வெளியே இருக்கைகள் போடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஸகர் உணவு பரிமாறப்பட்டது. தமிழறிந்த சகோதர சகோதரிகள் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 350 பேர் கலந்து கொண்ட பயனடைந்தார்கள். சரியாக 2:00 மணிக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹுவின் பெருங்கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.





புதன், 10 ஜூலை, 2013

QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013 வியாழன் இரவு 8:30 மணிக்கு



QITC மர்கஸில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -  11/07/2013
 மற்றும் 
QITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி  
நாள்    :    11 / 07 / 2013 வியாழன்
நேரம் :   இரவு 8 : 30 மணிக்கு
இடம்  :   QITC மர்கஸ்
அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வியாழன்  இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் (foot  ball) உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து  சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப்  போட்டி ஆரம்பமாகும். எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை  அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்.

  
 தலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன் 

சிறப்புரை : 

கே அப்துந் நாஸர்   M.I.Sc
மறுமையை நோக்கி முஸ்லிம் களின் இலக்கு !

நன்றியுரை :  கிளைப்பொறுப்பாளர் 



குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது.
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய  சிறுவர்களின்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.
3 . ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 66963393 
 இத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடாதீர்கள் !

கூடுதல் விவரங்களுக்கு  : 55532718, 66579598

முக்கிய அறிவிப்பு:
இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது!!

வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி QITC மர்கசிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஜூன், 2013

QITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் மார்க்க அறிவுப்போட்டி 2013 விண்ணப்ப படிவம்

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வருடாவருடம் ரமலான் மாதத்தில் வக்ராவில் நடத்தும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கான  மார்க்க அறிவுப்போட்டியை நடத்துவது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது. இதில்  குழந்தைகளை அவர்கள் பயிலும் வகுப்பு பிரகாரம்  பிரித்து போட்டியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளை கலந்துகொள்ள செய்ய ஊக்கப்படுத்துமாறும், அதற்காக அவர்களை தயார் படுத்துமாறும் தங்களை கேட்டுகொள்கிறோம்.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மார்க்கப் போட்டிக்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம்செய்து  தங்கள் பிள்ளைகளுக்கான போட்டியை தேர்வு செய்து  அதனை பூர்த்தி செய்து மர்கசில் சமர்பிக்கும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு நமது மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்களை 66579598 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். 
 
மார்க்க அறிவுப் போட்டிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. ஆகையால் தவறாமல் தங்கள் பிள்ளைகளை பயிற்சி வகுப்பிற்கு அழைத்து வரும்படி கேட்டுகொள்கிறோம்.


வகுப்பு நாட்களும் அதன் ஆசிரியர்களும் 

1. குர் ஆன்  மனனம்  - 20/6/2013, 21/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை 
ஆசிரியர்கள் : தமீம், லாயிக், அன்சார், அப்துஸ் சமத் மதனி  

2. துஆ மனனம் - 27/6/2013, 28/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : ரிள்வான், தமீம், லாயிக், மனாஸ் 

3.பேச்சுப் போட்டி - 29/6/2013, 30/6/2013 இரவு 8 மணிமுதல் 10மணிவரை (முதலிலேயே பெற்றோர்கள் பயிற்சி கொடுத்து விடலாம் ) 
ஆசிரியர்கள் : மனாஸ்,  தமீம், அன்சார்  

4. நாடகம் - 1/7/2013, 2/7/2013  இரவு 8 மணிமுதல் 10மணிவரை
ஆசிரியர்கள் : தமீம், ரிள்வான், அன்சார்

திங்கள், 30 ஜூலை, 2012

வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி - 26/07/2012

ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியான அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்க சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 26/07/2012 வியாழக்கிழமை இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்து இரவு 9:30 மணி முதல் அதிகாலை 4:௦௦ மணிவரை மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சகோதரர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க, மண்டல செயலாளர் சகோதரர். முகமத் அலி Misc அவர்கள் "சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி"யினை நடத்தினார்கள், நடுவர்களாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ்ஸமத் மதனீ,அவர்களும் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்களும் இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

சிறுவர், சிறுமியர், அவர்களின் வயது அடிப்படையில் மூன்று பிரிவாக பிரித்து போட்டி நடைபெற்றது. குர்ஆன் சிறிய சூராக்கள் ஓதுதல், துஆ, மற்றும் பேச்சுப்போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 25 க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மார்க்க அறிவுப்போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் பங்கெடுத்ததற்கான பரிசுகள் வழங்கப்பட்டது, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அடுத்த ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியான சவூதி மர்கஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது (பரிசளிப்பு நிகழ்ச்சி). 

அடுத்ததாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் "அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இருமனம் இணைந்த நறுமணம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் திருமணம் எதற்காக முடிக்கவேண்டும் திருமணம் முடிக்க எப்படிப்பட்ட பெண்ணை தேடவேண்டும், எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள்.

மண்டல துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். வக்ரா கிளையின் பொறுப்பாளர் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 350 க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக அமைய தொண்டரணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றினார்கள்.திருக்குர்ஆன், ஹதீஸ்கிரந்தங்கள், மார்க்கவிளக்க நூல்கள், குறுந்தகடுகள், உணர்வு, தீன்குலப்பென்மணி, ஏகத்துவம் அடங்கிய புத்தக அரங்கம் அமைக்கப்படிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.













செவ்வாய், 24 ஜூலை, 2012

வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி - 26/07/2012


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ரமலான் மாதத்தில் பல சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகளை ஒவ்வொருவருடமும் நடத்தி வருகின்றது.இந்த சிறப்பு நிகழ்சிகளுக்கு வருடந்தோறும் தாயகத்திலிருந்து சிறப்பு பேச்சாளர்களை தலைமை கத்தர் மண்டலத்திற்கு அனுப்பி தருகிறது.இந்த வருடம் ரமலான் மாதம் முழுவதிற்கும் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்களை தலைமை நமக்கு வழங்கி இருந்தது.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC ரமலான் மாதம் முழுவதும் பின் வரும் நிகழ்சிகளை இன்ஷாஅல்லாஹ் நடத்த இருக்கிறது .
  1. அல்வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 26 /07 /2012
  2. சவுதி மர்கஸ் அரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 02 /08 /2012
  3. அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 09 /08 /2012
  4. கத்தாரா கலாச்சார நகரத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 16 /08 /2012
  5. அல்சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் சிறப்பு இப்தார் நிகழ்ச்சி 17 /08 /2012
  6. கத்தார் இஸ்லாமிய கலாச்சார மைய அரங்கத்தில் FANAAR ஈத் பெருநாள் சிறப்பு நிகச்சி பெருநாள் அன்று
இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் கத்தர் அரசாங்கம், மற்றும் காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.



வக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -  26/07/2012
 மற்றும் 
QITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி  
நாள்    :   26 / 07 / 2012 வியாழன்
நேரம் :   இரவு 8 : 30 மணிக்கு
இடம்  :   வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம்
அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வியாழன் இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும்  , இரவுத் தொழுகையைத் தொடர்ந்து  சிறுவர்களுக்கான போட்டி ஆரம்பமாகும் . எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை  அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்  .
===========================================================
  
 தலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன் 


சிறப்புரை : 

1.  மவ்லவி அப்துஸ் சமத் மதனி       -      அச்சத்தில் ஆழ்ந்த மனிதர்கள்! 


2 . மவ்லவி M.M சை
புல்லாஹ் MISc  -   இருமனம் இணைந்த நறுமணம் !



நன்றியுரை :  கிளைப்பொறுப்பாளர் 



===========================================================

குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய  சிறுவர்களின்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.
3 .ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : ஹயாத் பாஷா -66228419
சகோ : காதர்  மீரான் - 55384932
சகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 55553263 
 இத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடவேண்டாம்  !!! 
===========================================================


தினமும் ஓர் இறைவசனம்