தினமும் ஓர் நபிமொழி

சிறப்பு செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மார்ச், 2019

TNTJ கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு 22-03-2019


கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாக தேர்வுப் பொதுக் குழு 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

அதில் கீழ் குறிப்பிட்ட சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக கத்தர் மண்டல பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.!

1) மண்டலத் தலைவர்: தஸ்தக்கீர்- 66316247 (நாகர்கோவில் – கன்னியாகுமரி மாவட்டம்)

2) மண்டலச் செயலாளர்: முஹம்மது அலி MISc- 66579598 (செஞ்சிக் கோட்டை – விழுப்புரம்)

3) மண்டலப் பொருளாளர்: ஷாகுல் ஹமீத்- 66147409, 66793343 (கைலாஸ் நகர் – திருச்சி)

4) மண்டல துணைத் தலைவர்: முஹம்மத் தமீம் MISc - 50111203 (பனைக்குளம் – இராமநாதபுரம்)

மண்டல துணை செயலாளர்கள்:

5) ராவுத்தர் ஹனிஃபா: 66205277, 77210605, (முடச்சிக்காடு – தஞ்சை தெற்கு மாவட்டம்)

6) அப்துர் ரஹ்மான்: 70482146 (வடகீழ்க் குடி – சிவகங்கை மாவட்டம்)

7) தாவூத்: 74787072 (வந்தவாசி – திருவண்ணாமலை)

8) சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி: +97455285428 (கூத்தாநல்லூர் – திருவாரூர் மாவட்டம்)

9) ஜின்தா மதார்: 55509399 (மேலப்பாளையம் – திருநெல்வேலி)

குறிப்பு:
4 அணி செயலாளர்கள்  மண்டல நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு பிறகு  அவர்களின் விவரங்கள் வெளியடப்படும் இன் ஷா அல்லாஹ்....

இப்படிக்கு,

மண்டல நிர்வாகம்
கத்தர் மண்டலம்
நாள்: 24-03-2019



QITC-சுற்றறிக்கை: Q/N-041/ 2019👇
01-04-2019

📓 TNTJ- கத்தர் மண்டல புதிய நிர்வாகிகளும் பணிகளும்

🎒 1) சகோ தஸ்தக்கீர்- மண்டலத் தலைவர்

66316247 (நாகர்கோவில் – கன்னியாகுமரி மாவட்டம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - புகார்கள், கோரிக்கைகள் குழு
(மண்டலத்திற்கு வரும் அனைத்து கடிதங்கள், மனுக்கள் மற்றும் மெயில்களைப் பரிசீலித்து பதிலளித்தல்)
2. மேற்பார்வையாளர் - பெண்கள் பிரச்சாரகர்கள் குழு
3. பொறுப்பாளர் - IQRA மாத இதழ்



🎒 2) சகோ முஹம்மது அலி- மண்டலச் செயலாளர்

66579598 (செஞ்சிக் கோட்டை – விழுப்புரம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - உறுப்பினர் ID கார்ட் (பிரிண்டிங் செய்தல், விநியோகித்தல்)
2. பொறுப்பாளர் - பெண்கள் பிரச்சாரகர்கள் குழு
3. இரத்த தான குழு - பொறுப்பாளர்
4. புகார்கள், கோரிக்கைகள் குழு துணைப் பொறுப்பாளர் (வெளியூர் பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை, முதலாளி பிரச்சினை, வேலை தேடி, பொருளாதாரம் வேண்டி மற்றும் குடும்ப பிரச்சினைகள்)



🎒 3) சகோ ஷாகுல் ஹமீத்- மண்டலப் பொருளாளர்

66147409, 66793343 (கைலாஸ் நகர் – திருச்சி)

கூடுதல் பொறுப்புகள்
1. மண்டல வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்
2. கிளை வரவு செலவு கணக்குகளை பெறுதல்
3. பொறுப்பாளர் - IFL வட்டி இல்லா கடனுதவி திட்டம்
4. மேற்பார்வையாளர் - ABU NAKLA - கிளை



🎒 4) சகோ முஹம்மத் தமீம்- மண்டல துணைத் தலைவர்

50111203 (பனைக்குளம் – இராமநாதபுரம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - பிறமத தாவா குழு
2. பொறுப்பாளர் - கிளைகள் ஒருங்கிணைப்பு, செயல் வீரர்கள் குழு பொறுப்பாளர்
3. மேற்பார்வையாளர் - BIN MAHMUD, ABU HAMUR – கிளைகள்
4. கூடுதல் பொறுப்பாளர் - தர்பியா வகுப்புகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள்



🎒 5) சகோ ராவுத்தர் ஹனிஃபா- மண்டல துணைச் செயலாளர்

66205277, 77210605, (முடச்சிக்காடு – தஞ்சை தெற்கு மாவட்டம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - உணவு குழு
2. பொறுப்பாளர் - வாகன குழு
3. துணைப் பொறுப்பாளர் - மண்டல மர்கஸ் பராமரிப்பு குழு



🎒 6) சகோ அப்துர் ரஹ்மான்- மண்டல துணைச் செயலாளர்

70482146 (வடகீழ்க்குடி – சிவகங்கை மாவட்டம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - பத்திரிகை & புத்தகக் குழு
2. பொறுப்பாளர் - சமூக சேவைக்குழு
3. பிற மத தாவா குழு - துணைப் பொறுப்பாளர்
4. மேற்பார்வையாளர் - NEW SANAYA 52, LAKTHA கிளைகள்



🎒 7) சகோ தாவூத்- மண்டல துணைச் செயலாளர்

74787072 (வந்தவாசி – திருவண்ணாமலை)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - KVMA அறிக்கைகள் & ஒப்பு நோக்குதல் குழு
2. பொறுப்பாளர் - ஒலி & ஒளி மற்றும் அரங்க அமைப்புக் குழு
3. துணை பொறுப்பாளர் - இரத்த தான குழு
4. மேற்பார்வையாளர் - MUAITHER , BALADIYA 38 கிளைகள்



🎒 8) சகோ சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி- மண்டல துணைச் செயலாளர்

 +97455285428 (கூத்தாநல்லூர் – திருவாரூர் மாவட்டம்)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - ஆண்கள் பிரச்சாரகர்கள் குழு
2. கூடுதல் பொறுப்பாளர் - இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் & எளிய மார்க்கம்
3. மேற்பார்வையாளர் LABOR CITY, AIN KHALID கிளைகள்



🎒 9) சகோ ஜிந்தா மதார்- மண்டல துணைச் செயலாளர்

55509399 (மேலப்பாளையம் – திருநெல்வேலி)

கூடுதல் பொறுப்புகள்
1. உதவி பொருளாளர்
2. துணைப் பொறுப்பாளர் - ஒலி & ஒளி மற்றும் அரங்க அமைப்புக் குழு
3. துணைப் பொறுப்பாளர் - சமூக சேவைக்குழு
4. மேற்பார்வையாளர் - SANAYA கிளை



🎒 10) சகோ சாக்ளா - மண்டல அணிச் செயலாளர்

+97455591460 (மதுரை)

கூடுதல் பொறுப்புகள்
1. முதல்வர் - அல் ஹிக்மா கல்வி மையம்
2. பொறுப்பாளர் - அலுவலக IT குழு
3. மேற்பார்வையாளர் - WAKRA கிளை
4. கூடுதல் பொறுப்பாளர் - மண்டல இணையதளம் YOUTUBE செய்திகள் பதிவேற்றம்



🎒 11) சகோ ஹாஜா- மண்டல அணிச் செயலாளர்

+97430568800 (அறந்தாங்கி, புதுக்கோட்டை )

கூடுதல் பொறுப்புகள்

1. பொறுப்பாளர் - மீடியா குழு
2. துணை முதல்வர் - அல் ஹிக்மா கல்வி மையம்
3. உதவி - மண்டல செயலாளர்
4. துணைப் பொறுப்பாளர் - ஊர் கூட்டமைப்புகள் குழு
5. துணைப் பொறுப்பாளர் - வாகன குழு
6. மேற்பார்வையாளர் – NAJMA, MUNTAZA கிளைகள்



🎒 12) சகோ முஹம்மது அலி (தேனி) - மண்டல அணிச் செயலாளர்

+97433765466 (பெரியகுளம் நகரம், தேனி மாவட்டம்)

கூடுதல் பொறுப்புகள்

1. பொறுப்பாளர்- மண்டல மர்கஸ் பராமரிப்பு குழு
2. துணைப் பொறுப்பாளர் - உணவுக் குழு
3. கூடுதல் பொறுப்பாளர் - மண்டல FACE BOOK LIVE
4. மேற்பார்வையாளர் – KARTHIYATH, AL KHOR கிளைகள்



🎒 13) சகோ மனாஸ் பயானி- மண்டல அணிச் செயலாளர்

+97470592826 (முசலி, மன்னார் மாவட்டம், இலங்கை)

கூடுதல் பொறுப்புகள்
1. பொறுப்பாளர் - ஊர் கூட்டமைப்புகள் குழு
2. பொறுப்பாளர் - கல்வி & வேலை வாய்ப்புக் குழு
3. மேற்பார்வையாளர் - HILAL, SALATHA JADEED கிளைகள்



🎒 14) சகோ நிசார்- மண்டல அணிச் செயலாளர்

+97455638213 (பேட்டை மேற்கு – திருநெல்வேலி)

கூடுதல் பொறுப்புகள்
1. துணை பொறுப்பாளர் - மீடியா குழு
2. துணை பொறுப்பாளர் - கல்வி & வேலை வாய்ப்புக் குழு
3. மேற்பார்வையாளர் - GHARAFA கிளை


இப்படிக்கு

மண்டல நிர்வாகம்
கத்தர் மண்டலம்
நாள்: 01-04-2019





ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

TNTJ கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு கூட்டம் - 13/04/2018


ஏக இறைவனின் திருப்பெயரால்...

TNTJ கத்தர் மண்டலத்தின் 
15 வது பொதுக் குழு கூட்டம் - 2018

13/04/2018

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே

பொதுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 👇

📌 முன்னால் இன்னால் நிர்வாகிகள்
📌 மண்டல பேச்சாளர்கள்
📌 கிளை நிர்வாகிகள்
📌 QITC உறுப்பினர்கள்


இன் ஷா அல்லாஹ் !!

🗓 நாள்: வெள்ளிக்கிழமை  13/04/2018

⏰ நேரம்: மதிய உணவுடன் 1:00 PM முதல்

🕌  இடம்: QITC மர்கஸ் - துமாமா 

2018-ம்  ✍ஆண்டிற்கான கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு வெள்ளிக்கிழமை 13-04-2018 அன்று மதிய உணவுடன் 1:00 மணி முதல்  நடைபெற உள்ளது.

இப்பொதுக்குழுவில்  SMS மூலம் அழைப்பு உள்ள அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுமாறு  அன்போடு அழைக்கின்றோம்.

Location Map: goo.gl/99yyFy


❇ சிறப்பு அழைப்பாளர்❇

சகோ அப்துல் கரீம் M.I.Sc 
(மாநில துணைத் தலைவர் - TNTJ)


📌 குறிப்பு:

📚 பொதுக் குழுவிற்கு வருகைதரும் சகோதரர்கள் நுழைவாயிலில் தங்களுக்கு வந்த SMS மற்றும் QITC ID யை காண்பித்து பொதுக்குழு அனுமதி பெறவும்

💵 நுழைவுக் கட்டணம்: 10 QR

🚫 SMS  மூலம் அழைப்பு இல்லாதவர்கள் பொதுக் குழுவில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் 

🚫 SMS மூலம் அழைப்பு வராத சகோதரர்கள் மண்டல செயலாளரை தொடர்பு கொள்ளவும்-66579598

🍱  மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(நேரம்: மதியம்  12:15pm -1:15 pm)

🚶🏻 வருகைக்கான கடைசி நேரம் 1:30 PM,  தாமதமாக வருபவர்கள் பொதுக் குழு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

🤝 “உங்கள் மர்கஸ் சந்தாக்களை பாக்கியில்லாமல் செலுத்தி மண்டல நிர்வாகத்திற்கு  உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”


அன்புடன்

மண்டல நிர்வாகம்
02-04-2018
📞 44315863, 66316247,55532718, 66579598

புதன், 5 ஏப்ரல், 2017

QITC- கத்தர் மண்டல புதிய நிர்வாகம் -2017



ஏக இறைவனின் திருப்பெயரால்...

QITC- கத்தர் மண்டல புதிய நிர்வாகம் -2017

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வின் அருளால், 17-3-2017 வெள்ளிக்கிழமை அன்று சகோ முஹம்மத் யூசுஃப் (மாநில பொதுச் செயலாளர் - TNTJ) அவர்களின் தலைமையில் கத்தர் மண்டல பொதுக் குழு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அதில் பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!. 

புதிய நிர்வாகிகளின் பட்டியல்

☸ மண்டல தலைவர்- சகோ தஸ்தகீர்
(நாகர்கோவில்- குமரி மாவட்டம்)

☸ மண்டல பொதுச் செயலாளர்- சகோ முஹம்மத் அலி MISc
(செஞ்சிக் கோட்டை- விழுப்புரம்)

☸ மண்டல பொருளாளர்- சகோ இலியாஸ்
(நாகை மாவட்டம் வடக்கு- துளசேந்திரபுரம்)

☸ மண்டல துணைத் தலைவர்- சகோ மஸ்வூத்
(லாஸ்பேட்டை- பாண்டிச்சேரி)

மண்டல துணைச் செயலாளர்கள்

☸ சகோ தாவூத்
(வந்தவாசி- திருவண்ணாமலை)

☸ சகோ ஃபக்ருதீன் அலி
(செங்குன்றம்- சென்னை)

☸ சகோ அஹ்மத் ஃபைஸல்
( சித்தார் கோட்டை - இராமநாதபுரம்)

☸ சகோ காதர் மீரான்
(ஈச்சம் பட்டி, சமயபுரம்- திருச்சி )

☸ சகோ முஹம்மத் தமீம் MISc
(பனைக்குளம்- இராமநாதபுரம்)

அணிச் செயலாளர்கள்:

☸ சகோ அப்துர் ரஹ்மான்:
(வடகீழ்க் குடி – சிவகங்கை மாவட்டம்)

☸ சகோ முஸ்தஃபா ரில்வான்:
(நிகம்பு கொட்ராமுள்ளை – இலங்கை)

☸ சகோ ஹனிஃபா ராவுத்தர்:
(முடச்சிக்காடு – தஞ்சை தெற்கு மாவட்டம்)

☸ சகோ ஷாகுல் ஹமீது:
(கைலாஸ் நகர் – திருச்சி)

அன்புடன்

மண்டல நிர்வாகம்
22-03-2017
📞 44315863, 6631 6247, 66579598


ஞாயிறு, 29 மே, 2016

கத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 27-05-2016



"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)

கடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) ‎கத்தர் மண்டலம்‬ சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.

ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ நூற்றி பதினேழு‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.

‪‎கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக குருதி கொடையளித்த‬ சகோதர்களுக்கும்‬, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது‪ இதயம் கனிந்த‬ ‪‎நன்றிகளை‬ தெரிவித்துகொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் படங்களுடன் ஃபேஸ் புக் செய்தி:

சனி, 5 டிசம்பர், 2015

04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு"


04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" நடை பெற்றது.

இம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

"இஸ்லாம் ஓர் அறிமுகம்"
நடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான்

"நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்"
நடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி

"இறைவேதம் எதிர்க்கும் இணைவைப்புக் கொள்கை"
நடத்தியோர்: சகோ: முஹம்மத் அலி MISc & சகோ: மனாஸ் பயானி

"இணைவைப்பின் வகைகளும் அதன் தண்டனைகளும்"
நடத்தியவர்: சகோ: முஹம்மத் தமீம் MISc

மற்றும் ஷிர்க்கிற்கு எதிரான சிறுவர், சிறுமியர்களின் கண்காட்சி மற்றும் நாடகமும் நடைபெற்றது.

புதுமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தரைதளத்தில் புரோஜெக்டருடன் கூடிய நான்கு அரங்கங்களும், முதல் தளத்தில் சிறுவர் சிறுமியர்களின் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 17 அக்டோபர், 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டீஸ் - உருது


பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

அதனை விளக்கும் உருது நோட்டீஸ்:



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?


பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

  • தலைவர்களைப் புகழ்வதற்காக,
  • அரசியல் ஆதாயம் அடைவதற்காக,
  • தங்கள் பலத்தை மற்ற இயக்கத்தினர் அறிந்து கொள்வதற்காக,
  • வாக்குகளைக் கவரும் உத்தியாக,
  • பலத்தைக் காட்டி பதவிகள் பெறுவதற்காக,
  • சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக -
இன்னும் இதுபோன்ற காரணங்களுக்காகவே மாநாடுகள் நடத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதில் பங்கெடுத்தும் இருப்பீர்கள்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இதுபோன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படும் மாநாடுகளைப் போல் இருக்காது.

உலக மக்கள் பார்வையில் முஸ்லிம்களாக இருக்கும் நாம் அல்லாஹ்விடமும் முஸ்லிம்களாகக் கருதப்பட்டு மறுமையில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இஸ்லாத்தில் அதிக ஈடுபாடு உள்ள மக்களாக இருந்தாலும் ஈடுபாடு குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்விடம் அதற்கான பரிசை எதிர்பார்த்தே செய்கிறார்கள். எப்படியாவது சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவே வணக்க வழிபாடுகளைச் செய்கிறார்கள். தான தர்மங்களைச் செய்கிறார்கள்.

செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்காமல் போவதை நாம் விரும்ப மாட்டோம். நல்லறங்கள் செய்த பின்பும், அல்லாஹ் நரகத்தில் போடுவதையும் நாம் விரும்ப மாட்டோம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால், இந்த நிலைதான் ஏற்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். நமது தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், இன்னும் பல நல்லறங்களுக்கான நன்மைகளை நம்மை அறியாமல் இழந்து கொண்டே இருக்கிறோம்.

இதோ அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்!

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'.
(அல்குர்ஆன் 5:72)

'நீர் இணை கற்பித்தால், உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும்,உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65, 66)

இந்த எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியத்தையும் செய்துகொண்டு, அல்லாஹ்வுக்கு வணக்கமும் செலுத்தினால், அது நல்ல உணவை உட்கொண்டபின் உயிர்க் கொல்லி விஷத்தைச் சாப்பிடுவதற்குச் சமமானது என்று தெரியவில்லையா?

நம்மைப் படைத்தவன் அல்லாஹ். நமக்கு உணவளிப்பவன் அல்லாஹ். நம்மைக் காப்பவன் அல்லாஹ். நமக்கு செல்வத்தை வழங்குபவன் அல்லாஹ். குழந்தையைத் தருபவன் அல்லாஹ். இந்த சாதாரணமான அடிப்படையை அறியாமல் மனிதர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுக்க முடியுமா?

அல்லாஹ் தனது அதிகாரத்தை யாருக்காவது கொடுத்துள்ளானா?

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 2:186)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:191 195)

'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!' என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.
(அல்குர்ஆன் 46:6)

முஸ்லிம்கள் நிரந்தர நரகத்துக்குச் செல்லாத வகையில் இந்தக் கொள்கையை உரத்துச் சொல்வது தான் இம்மாநாட்டின் நோக்கம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறும் இஸ்லாத்தின் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும்போது சமுதாயம் எத்தகைய எதிர்ப்பைக் காட்டினாலும் இக்கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிரச்சாரம் செய்து வருவதன் நோக்கம் பிறருக்கு ஆத்திரமூட்டுவதற்காக அல்ல.

மாறாக உங்கள் நல்லறங்களை அழித்து நாசமாக்கும் இணை கற்பிக்கும் கொள்கையை விட்டு நீங்கள் விலகி நரகத்தில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே.

இணை கற்பித்தல் எத்தகைய மாபாதகம் என்பதையும் இணை கற்பித்தலுக்கும் தர்கா வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதையும் தெள்ளத் தெளிவாக இம்மாநாடு உங்களுக்கு விளக்கும்.

தலைவர்களுக்காகவும், கட்சிகளுக்காகவும் ஓடி ஓடி உழைத்தீர்கள். மறுமையில் வெற்றி பெற நாம் கொண்டிருக்கும் கொள்கை சரியா என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக விளக்கும் இம்மாநாட்டுக்கு, உங்களுக்காக உங்களின் மறுமை வெற்றிக்காக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்று பயன் பெறுமாறு அழைக்கிறோம்.

அனைத்து முஸ்லிம் கட்சிகளையும், இயக்கங்களையும் அனைத்து ஜமாஅத்துகளயும் இம்மாநாட்டில் பங்கேற்று மார்க்கத்தை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள அலைகடலெனத் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவண் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெறும் திடல்

Location Map: https://goo.gl/91t11i

ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/06/2015


கடந்த 14/06/2015 அன்று ஹமாத் மெடிக்கல் கார்ப்ரேசன் சார்பில் "The St. Regis Doha" ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கத்தர் நாட்டில் இரத்ததானம் வழங்கியவர்களுக்கான விருது நிகழ்ச்சியில் TNTJ கத்தர் மண்டலம் சார்பாக மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் மற்றும் பொது செயலாளர் சகோ. முஹம்மத் அலி MISc ஆகியோர் அவர்களின் அழைப்பை ஏற்று இன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்,

இதில் கத்தர் மண்டலத்திற்கு இரத்த்தானத்திற்கான கெளரவிப்பு விருதும் சான்றிதழும் மண்டல தலைவர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் விருத்துகள் வழங்கப்பட்டது. பல அமைப்புகளுக்கு மத்தியில் இம்மாதிரியான விருதுகள் பெரும் ஒரே அமைப்பு நாம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்




வியாழன், 2 ஏப்ரல், 2015

கத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

அஸ்ஸலாமு அலைக்கும்

QITC யின் முக்கிய அறிவிப்பு...

கத்தரில் கடும் மணல் புயலும், காற்றும் நிலவுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர். வயாதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே இன்று 02-04-2015 வியாழன் இரவு மர்கஸ் பயான் நிகழ்ச்சிகள், சனயா பயான், அல்கோர் பயான், குழந்தைகள் குர்ஆன் வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த செய்தியை வழக்கம் போல் வரும் அனைத்து சகோதர சகோதிரிகளிடமும் தெரிவிக்கவும்.


திங்கள், 30 மார்ச், 2015

கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)


கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு....

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 27-03-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோ. முஹம்மத் யூசுஃப் (TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்...
  • மஸ்ஊத் : தலைவர்
  • ஷேக் அப்துல்லா  : துணை தலைவர்
  • முஹம்மது அலி : செயலாளர்
  • தஸ்தகீர் : துணை செயலாளர்
  • பக்ரூதீன் : பொருளாளர்
          இணை செயலாளர்கள்
  • முஹம்மது சாக்ளா 
  • காதர் மீரான்
  • பைஸல்
  • அப்துர் ரஹ்மான்
  • ஹனிபா
  • தாவூத்
  • ஹாஜி முஹம்மது
  • ரிபாஸ்
அல்ஹம்துலில்லாஹ்


புதன், 3 டிசம்பர், 2014

கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்களில் 160 யூனிட்டுகள் இரத்ததானம்




"தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" என்ற ஒற்றை அஜெண்டாவில் கத்தர் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்தான முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, 160 இரத்த யூனிட்டுகள் வழங்கினார்கள். 

கத்தர் மண்டலம் நடத்திய இரத்ததான முகாம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

ஹமத் மெடிக்கல் நிறுவனமும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை ஒரு மாத காலம் முழுவதும் நடத்தியது. 

தமிழகம் மற்றும் நாடு தழுவிய அளவிலும், இன்னும் இலங்கை மற்றும் வளைகுடாவிலும் அமைதியான அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து ஒன்று முஸ்லிம் அல்லாத ஏனைய சமுதாய மக்களிடம் பதிவு செயப்பட்டது.

இதற்க்கு காரணம், ஊடகங்களின் அகராதியில் தீவிரவாதத்திற்கு அர்த்தம் முஸ்லிம்கள் என்று பரப்படும் மிகைபடுத்தபட்ட பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகள் மதிப்பளிக்கப்படாமல், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அல்லல்கள், துயரங்கள் முக்கிய ஊடகங்களில் வெளிக்கொணரப்படாமல், அப்படியே செய்திகள் வந்தாலும் சிறிய பெட்டி செய்தியில் அடங்கிவிடுகிறது. இத்தகைய தவறாக சித்தரிக்கும் ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டும், இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதால் நாம் "தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தை" நமது அமைப்பு கையில் எடுத்துள்ளது என்று விளக்கி கூறி, பஞ்சம் பொழைக்க வந்த வளைகுடா நாடுகளில் அண்ணன் தம்பிகளாக பழகும் இக்காலகட்டத்தில், முஸ்லிம்களை பற்றி புரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை நாம் நடத்தும் இரத்ததானம் முகாமிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தோம்.

மாநில பேச்சாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்

தமிழகத்திலிருந்து வருகை தந்த மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப்தீன் பிர்தௌசி அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிவரும் பல் வேறு சமுதாய பணிகளை பற்றியும், தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் அவசியத்தை பற்றியும் அவர்கள் செல்லும் எல்லா சொற்பொழிவுகளிலும் எடுத்துகூறினார்கள்.

வளைகுடாவில் வாழும் இந்திய பெரும்பான்மை மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில், ஹிந்தி, மலையாளம், உருது, தமிழ், ஆங்கில மொழிகளிலும் மற்றும் இலங்கை சிங்கள சகோதர்களுக்கு சிங்கள மொழியிலும் நோட்டீஸ் தயார் செய்து, நான்காயிரம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.

அவ்வகையில் கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின், சனையா கிளையில் முதன் முறையாக இரத்ததான முகாம் தொடங்கப்பட்டது. கொள்கை சகோதரர்கள் பம்பரமாக செயல்பட்டு, பல் வேறு தொழிலாளர் கேம்புகளிலும் மற்றும் பெரிய வணிக வளாகங்களிலும் இரத்தான நோட்டீஸ் வழங்கினார்கள்.

சிறுச்சிறு குழுவாக பிற மத சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாம் அமைதியை போதிக்கின்றது என்றும், அதனையொட்டி கத்தர் மண்டலம் சார்பாக நடைபெறும் இரத்ததான முகாம் பற்றியும் சொன்னார்கள்

சனையா கிளை சகோதரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துக்கொண்டார்கள், இவர்களில் 35 யூனிட்டுகள் இரத்ததானம் அளித்தார்கள்.

சனையா கிளை பொருப்பாளர்கள் சகோதரர் தாவூத் அவர்களும், சகோதரர் ரபீக் அவர்களும் சனையாவின் அனைத்து பகுதிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய நான்கு மொழிகளிலும் விநியோகம் செய்தார்கள்.

அக்டோபர் 31 ஆம் தேதி, லக்தா கிளை, மைதர் கிளை, கரபா கிளை ஆகிய சகோதர்கள் 22 பேர் இரத்ததானம் செய்தார்கள்.

பின்னர் நவம்பர் 6 ஆம் தேதி அபூஹமூர் பலதியா முனிசிபாலிடி கேம்பில், 78 சகோதரர்கள் கலந்துகொண்டார்கள், இதில் 38 யூனிட்tuகள் இரத்ததானம் அளிக்கபட்டது. அபூஹமூர் கிளை பொருப்பாளர் சகோதரர் சம்சுதீன் அனைத்து ஊழியர் குடியிருப்புகளிலும் நான்கு மொழிகளில் நோட்டிஸ் வினயோகித்தார்கள்.

இறுதியாக நவம்பர் 14ஆம் தேதி துமமாவில், 150க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தன்னார்வத்துடன் ஜும்மா தொழுகைக்கு பிறகு மர்கசில் வந்து குவிந்தார்கள். அனைவருக்கும் மதியம் உணவு உபசரிப்புடன், பெயர் பதிவு நடத்தப்பட்டது. சரியாக 3 மணிக்கு ஹமத் மருத்துவ மனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10பேர் கொண்டு குழு இரத்ததானத்திற்கு முன், கொடையளிகளிடம் உடல் பரிசோதனைகள் செய்தார்கள். உடல் ஆரோக்கியம், இரத்த கொதிப்பு, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்ற உடல் பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்களை மட்டும் இரத்ததானம் கொடுக்க தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். 68 சகோதர்கள் குருதி கொடையளித்தார்கள்.

ஹமத் மெடிக்கல் நிறுவனம் பாராட்டு

கத்தரில் தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் இது போன்ற இரத்ததான முகாமை வெளிநாட்டு அமைப்பினர் யாரும் செய்யவில்லை என்று ஹமத் இரத்த வங்கி மருத்துவர்கள் பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...  எல்லா புகழும் ஏக இறைவனுக்கே... 







தமிழகத்தில் TNTJ நடத்திய தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் 2014 - ஒரு தொகுப்பு


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் - மார்ச் 2014


கத்தர் மண்டல நிர்வாகம் கிளைகளின் செயல்பாட்டை கொண்டு புள்ளிகள் வழங்கி வருகிறது. 

அதனடிப்படையில் அதிக தஃவா பணிகள் செய்து முதல் 3 இடங்களைப் பெற்ற கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் இங்கு தரப்படுகிறது.

மார்ச் 2014 - புள்ளிகள் தரவரிசை

முதல் இடம் : சனையா கிளை

இரண்டாம் இடம்: லக்தா கிளை

மூன்றாம் இடம் : அபூஹமூர் கிளை


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

புதன், 9 ஏப்ரல், 2014

கர்த்தியத் கிளையில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் மார்க்க விளக்க நூல்கள், ஆடியோ, வீடியோ வடிவிலானா குறுந்தகடுகள் கொண்ட நூலகம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 
அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

புதன், 26 பிப்ரவரி, 2014

தாவா பணியில் கத்தர் மண்டலம் இரண்டாவது இடம்... அல் ஹம்துலில்லாஹ்!



அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், வளைகுடா நாடுகளில் உள்ள மண்டலங்களில், சிறந்த தாவா பணி செய்து வருகின்ற முதல் மூன்று மண்டலங்களை புள்ளிகளின் அடிப்படையில் தலைமை தேர்வு செய்தது. இதில் கத்தர் மண்டலம் இரணடாவது நிலையில் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை ஈரோட்டில் 23-02-2014 நடைபெற்ற பொது குழுவில் வழங்கினார்கள். கத்தர் மண்டலம் சார்பாக, சலத்தா கிளை பொறுப்பாளர் சகோதரர் தாஜுதீன் பெற்றுக் கொண்டார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 21 டிசம்பர், 2013

20-12-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை பிற மத சகோதரர்களிடம் தாவா




20-12-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை, முஸ்லிம் அல்லாத சகோதர்கள் சநதிப்பு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
கலந்து கொண்ட பிற மத சகோதரர்களிடம் "இஸ்லாம் கூறும் இறைகோட்பாடு" பற்றிய அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.
 
உரையிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான பதில் அளித்தவர்களுக்கு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் தாளாளர் சகோதரர் அலி அல் சாதா அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.

துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்கள். மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி நன்றியுரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 27 ஜூலை, 2013

மரண அறிவிப்பு



QITC யின் முன்னாள் தலைவரும், தாவா குழுவின் மூத்த உறுப்பினருமான சகோதரர் லியாகத் அலி அவர்கள் 26/07/2013 காலை தாயகத்தில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


செவ்வாய், 26 மார்ச், 2013

QITC யின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு - 22-03-2013

அல்லாஹ்வின் பேரருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் 22-03-2013 வெள்ளிக்கிழமை மதியம் 2:15 மணிக்கு QITC - மர்கஸில் நடைபெற்றது.

முதலில் கடந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டது,

பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோதரர். முஹம்மத் ஷேக் (TNTJ அபுதாபி மண்டல தலைவர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களால் 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகளின் பெயர் பட்டியல்:
  1. தலைவர் - J.A.மஸ்ஊத்
  2. பொதுச்செயலாளர் - M. முஹம்மத் அலி
  3. பொருளாளர் - A. முஹம்மத் இலியாஸ்
  4. துணைத்தலைவர் - M.S. ஃபக்ருத்தீன்
  5. துணைப்பொதுச்செயலாளர் - சேக் அப்துல்லாஹ்
  6. துணைப்பொருளாளர் - S. காதர் மீரான்
  7. துணைச்செயலாளர் - S. தஸ்தகீர்
  8. துணைச்செயலாளர் - ரிஃபாய்தீன்
  9. துணைச்செயலாளர் - U.L.அன்சார்
  10. துணைச்செயலாளர் - A. சாக்ளா
  11. துணைச்செயலாளர் - M. அப்துர்ரஹ்மான்
  12. துணைச்செயலாளர் - இப்ராஹிம் (ETA)
  13. துணைச்செயலாளர் - ஹயாத் பாஷா
இறுதியாக புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு நன்றியுரையடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் 116 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

அல்ஹம்துலில்லாஹ்.





வியாழன், 21 மார்ச், 2013

QITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013

بسم الله الرحمن الرحيم
QITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013

நாள் : வெள்ளிக்கிழமை 22/03/2013
நேரம் :2.15 மணிக்கு
வருகைப்பதிவு நேரம் : 2.00 மதியம்
இடம் : QITC மர்கஸ்


கண்ணியத்திற்குரிய QITC உறுப்பினர்களுக்கு !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

வருகிற வெள்ளிக்கிழமை 22/03/2013 அன்று QITC யின் பொதுக்குழு நடைபெற உள்ளது , இப்பொதுக்குழு இன்ஷா அல்லாஹ சரியாக மதியம் 2.00 மணிக்கு வருகைப்பதிவுடன் ஆரம்பமாகும் எனவே அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்தில் மர்க்சிற்கு வந்து சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

சிறப்புப் பேச்சாளர் : மவ்லவி M.I.சுலைமான்
( TNTJ - மாநில செயல் தலைவர் )

சிறப்பு பொதுக்குழு அதிகாரி : சகோ ஷைக் முஹம்மத்
( TNTJ -அபுதாபி மண்டல தலைவர் )

குறிப்பு :
1. பொதுக்குழு அன்று நமது மர்கஸ் சார்பாக நடத்தப்படும் ஜூம்மா தொழுகைக்குப்பின் உள்ள பயான் எங்கும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
2. பொதுக்குழுவிற்கு வரக்கூடியவர்கள் ஜூம்மா தொழுகையை நமது மர்க்ஸ் அருகே உள்ள பள்ளியில்தொழுதுவிட்டு உடனே மர்க்சிற்கு வந்து விடவும்.
3.உங்களுக்கான மதிய உணவு நமது மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12.30 மணிமுதல் உணவு பரிமாறப்படும் தாமதிக்காமல் வரவும்.

அன்புடன்,
எம்.முஹம்மத் அலி MISC
மண்டல செயலாளர்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

திங்கள், 28 ஜனவரி, 2013

"விஸ்வரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல அமைப்பாகிய கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

27-01-2013 ஞாயிறு காலை சுமார் 10:00 மணி அளவில், கத்தர் மண்டல இணைச்செயலாளர் சென்னை சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில், ஆத்தூர் மவ்லவி, அப்துஸ்ஸமத் மதனீ, பண்டாரவாடை சகோதரர். சபீர் அஹ்மத், சமயபுரம் சகோதரர். காதர் மீரான் ஆகியோர் அடங்கிய குழு, கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத் துறை (ஃபனார்) யின் இயக்குநர் - கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஃபஹத் பின் உக்ளா அல்-ருவைலி அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு உரிய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர். ஃபஹத் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு 'இந்த தகவலை நீங்கள் மட்டும் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கூறி, நமக்காக பிரார்த்தனையும்' செய்தார். சந்திப்பின் போது ஃபனாரின் மேற்பார்வையாளர் - ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள் உடனிருந்தார்கள்.

பிறகு, இக்குழு, காலை சுமார் 11:30 மணி அளவில், கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சகம் சென்று, அங்கு ஊடகக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக்கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு 'கத்தர் அரசு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தை' தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர்.ஜாபிர் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எதிர்காலத்தில் இதைப்போல் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் உடன் கொண்டு வாருங்கள் - ஆவண செய்கிறேன் என்று கூறி நமக்காக பிரார்த்தனையும்' செய்தார்.

அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!


வியாழன், 24 ஜனவரி, 2013

கத்தரில் விஸ்வரூபம் படத்திற்கு தடை! Viswaroopam Movie banned in Qatar!



இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தை தடை விதிக்க கோரி கத்தர் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - QITC) மேற்கொண்ட முயற்சியால், 24-01-2013 அன்று கத்தரில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்! 

மற்ற நாடுகளைப் போலவே, கத்தர் நாட்டிலும் கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படம் வெளியிட அனுமதிக்கப்படமாட்டாது என நினைத்திருந்தோம். அதற்கான நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.

இதற்கிடையில், 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு நம் சகோதரர். தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல அலுவலகம் மற்றும் நிர்வாகிகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு, "இன்று மாலை தோஹாவிலுள்ள தியேட்டரில் விஸ்வ(விஷம)ரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்று இன்றைய 'கல்ஃப் டைம்ஸ்' நாளிதழில் செய்தி போடப்பட்டிருக்கிறது” என்று தகவல் கூறினார்.

உடனே மண்டல நிர்வாகிகள், தத்தமது அலுவலக வேலையில் இருந்த காரணத்தினால்,கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை (ஃபனார்) அலுவலர்களை டெலிஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். அவர்களோ, மொபைலை/தொலைபேசியை எடுக்கவில்லை.

பின்பு, சரியாக காலை 10:43 மணிக்கு, ஃபனார் மேற்பார்வையாளரான,  ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள், மண்டல தலைவராகிய சாத்தான்குளம் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களை மொபைலில் அழைத்து "என்ன விஷயம், பலமுறை எனக்கு ஃபோன் செய்துள்ளீர்களே!மீட்டிங்கில் இருந்ததால், மொபைலை எடுக்கவில்லை" என்று கூறியிருக்கிறார். அதற்கு டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், 'இந்திய வரலாற்றில் "விஸ்வ(விஷம)ரூபம்" என்ற திரைப்படம் போல், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை' என்று கூறிவிட்டு, நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி, அதை உடனடியாக கத்தரில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் படி கூறியிருக்கிறார். அதிர்ச்சிக்குள்ளான, டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள், ஸூடான் நாட்டைச் சார்ந்த சகோதரர். அபூ உபைதா என்ற அலுவலரை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், சகோதரர். அபூ உபைதாஅவர்களை சரியாக காலை 11:04 மணிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியிருக்கிறார்.அதிர்ந்து போன சகோதரர்.அபூ உபைதா அவர்கள்,அதற்காக நன்றி தெரிவித்து விட்டு, 'படத்தின் பெயர்-மொழி-திரையிடப்பட இருக்கின்ற தியேட்டர்' ஆகிய விவரங்களை தனது மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் மூலம் அனுப்புமாறு கூறியிருக்கிறார். அவ்வாறே, சரியாக காலை 11:19 மணிக்கு மெசெஜை, டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அனுப்பியிருக்கிறார். பிறகு, சரியாக காலை 11:56 மணிக்கு சகோதரர். அபூ உபைதா அவர்களே டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்களுக்கு ஃபோன் செய்து 'நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது; படம் தடை செய்யப்பட்டுவிட்டது; வெளியிடப்படமாட்டாது' என்று கூறி, 'இந்த தகவலை இதுவரை யாரும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், தவ்ஹீத் ஜமா'அத் ஆகிய நீங்கள் தான் கொண்டு வந்துள்ளீர்கள்' என்றும் கூறிவிட்டு, அதற்காக பிரார்த்தனையும் செய்தார்.

அவர் பேசி முடித்ததும், ஃபனாரின் மலையாள மொழிப்பிரிவு அழைப்பாளர் கேரள மாநிலத்தைச் சார்ந்த சகோதரர். அப்துர்ரஷீத் அவர்கள் 'என்ன விஷயம் என்று மலையாள மொழியில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களிடம் கேட்க ,அவரும் மேற்படி விவரங்களை மலையாள மொழியில் கூறியிருக்கிறார். அதுவரை இந்த விஷயம் தெரியாததால் தான் சகோதரர். அப்துர்ரஷீத் அவர்கள் இந்த விஷயத்தை கேட்டிருக்கிறார். தனக்கு தெரியாமல் போனது வியப்பாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்திற்காக, இதே காரியத்தை, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் ஆத்தூர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இதே தினத்தில் காலை சுமார் 10:30 மணிக்கு கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் துறைக்கு தொடர்பு கொண்டு செய்தார்கள்.அவரிடம், சகோதரர்.ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள் .அவ்வாறே, மதனீ அவர்கள், சகோதரர். ஜாபிர் அவர்களை தொடர்பு கொண்டு, சுமார் 20 நிமிடங்கள் அரபி மொழியில் படம் குறித்த விவரங்களை கூறியிருக்கிறார்கள். பின்பு, சுமார் 12:40 மணிக்கு சகோதரர். ஜாபிர் அவர்களே, மதனீ அவர்களை தொடர்பு கொண்டு 'கத்தர் அரசு கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, படம் தடை செய்யப்பட்டு விட்டது' என்று தகவல் சொல்லியுள்ளார்.

இருப்பினும், நாங்கள் விடவில்லை. சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு நம் சகோதரர்களாகிய கீரமங்கலம் தாஹா, துளசேந்திரபுரம் இலியாஸ் மற்றும் வடகீழ்குடி அப்துர்ரஹ்மான் ஆகியோரை பல்வேறு நேரங்களில் அனுப்பி, படம் தடை செய்யப்பட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டோம்.

அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!

தினமும் ஓர் இறைவசனம்