தினமும் ஓர் நபிமொழி

தர்பியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்பியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2015

கத்தர் மண்டல மர்கஸில் 30-10-2015 நடைபெற்ற "தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி"


ஏக இறைவனின் திருப்பெயரால்...

கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 30-10-2015 வெள்ளிக் கிழமை அன்று “தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி”
மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

இரண்டு நாள் கொண்ட இந்த பயிற்சி முகாமின் முதல் வெள்ளிக் கிழமை நிகழ்ச்சியில்

மௌலவி முஹம்மது தமீம் M.I.Sc. அவர்கள்
“இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பிலும்,

மௌலவி முஹம்மது அலி M.I.Sc. அவர்கள்
“அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் (மஜிதி) அவர்கள் 
“அழைப்பு பணிக்கான தயாரிப்புகள்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அப்துஸ்ஸமது (மதனி) அவர்கள்
“அழைப்பாளர்களின் பண்புகள்” என்ற தலைப்பிலும்
பயிற்சி அளித்தனர்.

இதில் பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட தாயிக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் வரக்கூடிய 06-11-2015 வெள்ளிக் கிழமை கத்தர் மண்டல மர்கஸில் நடைபெறும்.




ஃ பேஸ் புக் செய்தி: 

புதன், 25 மார்ச், 2015

சனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி


சனையா கிளையில் 24-03-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ. முஹம்மத் யூசுஃப் அவர்கள் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.

இதில் சனையா பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். சனையா கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 29 அக்டோபர், 2014

கத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று நடைப்பெற்ற சிறப்பு தர்பியா வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால்...

கத்தர் மண்டல மர்கஸில் 24-10-14 அன்று சிறப்பு தர்பியா வகுப்பு நடைப்பெற்றது. 

சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் சகோதரர் அஷரப் தீன் அவர்கள், "தெரிந்த செய்திகளும் தெரியாத உண்மைகளும்" என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.





கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax: +974 4431 5863
Mobile: 5553 2718, 6657 9598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

திங்கள், 17 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் மூன்று மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு 15-03-2014

 
 
 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் மூன்று மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வகுப்பு 15-03-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்றது. முதல்வகுப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நடத்தினார்கள்

இதில் பேச்சாளர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள், பேச்சின் ஒழுங்குகள், ஆடையின் ஒழுங்குகள், பேச்சு பயிற்சி செய்யும் முறைகள் ஆகியவற்றிற்கான குறிப்புகளை பேச்சாளர்களுக்கு வழங்கினார்கள்.
 
இவ்வகுப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இவ்வகுப்பு இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், பெண்களுக்கு 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் பொது தர்பியா நிகழ்ச்சி 14-03-2014




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஜமாஅத் உறுப்பினர்கள் நிர்வாகிகள், தாயீக்கள் ஆகியோர்களுக்கான பொது தர்பியா நிகழ்ச்சி 14-03-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

மதியம் 2 மணிக்கு தர்பியாவில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சரியாக 2.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தர்பியா நிகழ்ச்சியில் சூனியம் குறித்து மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்கவைத்து அவற்றிற்கான பதில்களை கூறி சூனியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை திருக்குர் ஆன் வழியில் விளக்கி பயிற்சி அளித்தார்.

அடுத்ததாக நபித்தோழர்களை பின்பற்றலாமா ? என்பதற்கு அல்லாஹ்விடம் இருந்து வந்த வஹியை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்பதற்கு திருக்குர் ஆன் மற்றும் நபிவழிகளின் அடிப்படையில் பயிற்சி அளித்தார்.

கலந்துகொண்டவர்களுக்கு சூனியம், நபித்தோழர்களும் நமது நிலைமையும் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. தர்பியா நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு நிறைவுபெற்றது. கலந்துகொண்டவர்களுக்கு மதிய விருந்து பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் மற்றும் தாயீக்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 14-03-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், தாயீக்கள் ஆகியோருக்கான தர்பியா நிகழ்ச்சி 14-03-2014 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு நிர்வாகதின் ஒழுங்குமுறை குறித்தும், பிற இயக்கங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இருக்கும் கொள்கை வேறுபாடுகள் குறித்தும், துண்டு பிரசுரங்கள் ஆகிய தலைப்புகளில் தர்பியா பயிற்சி அளித்தனர்.
 
இதில் மண்டல நிர்வாகிகள், பல்வேறு கிளை பொறுப்பாளர்கள், யீக்கள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு நிர்வாக ஒழுங்குமுறை, பிற இயக்கங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகிய தலைப்புகளில் கையேடுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 




 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 15 பிப்ரவரி, 2014

14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா



14-02-2014 கத்தர் மண்டல அல் கோர் கம்யுனிடி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா நடைபெற்றது. அல் கிளை பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் தலைமையில், மண்டல செயலாளர் முஹம்மத் அலி தொடங்கி வைத்தார்கள். இறையச்சம் பேணுவோம் என்ற தலைப்பில் மௌலவி அப்துஸ் சமது மதனீ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் அல் கோர் கம்யுனிட்டி வளாகத்தில் சிறுவர் களுக்கான குர் அன் ஓதும் பயிற்சி வகுப்பை, கத்தர் மண்டல தாயி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகிறார்கள். குர் ஆன் பயிற்சியுடன், து ஆக்கள் மனனம் செய்வது, பயான் செய்ய பழகுவது, மற்றும் தொழுகை பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவன் உகஷா "தொழுகை செயல் முறை பயிற்சியையும்", மாணவன் அம்மார் "அரபு எழுத்துகள் உச்சரிப்பு" பற்றியும், மாணவன் அஷரப் "தூங்குவது ஒழுங்குகள்" பற்றியும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மாணவன் முஸ்தாக், மாணவிகள் ரசீனா, வாஜிதா உரையாற்றினார்கள். பின்பு போட்டியில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மௌலவி மனாஸ் பயானி அவர்களும், "குர் ஆனும் ஹதீசும்" என்ற தலைப்பில் மௌலவி தமீம் அவர்களும் உரையாற்றினார்கள்.
மண்டல தலைவர் மஸ் ஊத் அவர்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நஸீர் அவர்ககள் அறிவிப்புகள் செய்தார்கள். இறுதியாக சகோதரர் இப்ராஹீம் நன்றி உரையாற்றினார்கள். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ் !






مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சனையா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர தர்பியா பயிற்சி 07/11/2013



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனையா அல்நஜாஹ் கிளையில் 07/11/2013 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை வாராந்திர தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் துஆக்கள் என்ற தலைப்பில் துஆக்கள் மனன பயிற்சி அளித்தார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

சனி, 25 மே, 2013

கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி 24-05-2013

அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி, 24-05-2013 அன்று ஜும்மா தொழுகைக்குப்பின் கத்தர் மண்ட தலமையகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியை மண்டலத் துணைச்செயலாளர் சகோ ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பது பற்றியும் புதிய நிர்வாகிகள் அறிமுகத்தையும் செய்து வைத்தார்கள்,

அதன் பின்பு மண்டல பேச்சாளர் சகோ முஹம்மது தமீம் MISc அவர்கள் 'நாம் ஏன் இந்த ஜமாத்தில் இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மற்ற இயக்கங்களுக்கும் நம் ஜமாத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து கூறி, கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசி செயல் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார்.

அடுத்ததாக துணைச் செயலாளர் சகோ காதர் மீரான் அவர்கள் சென்ற நிகழ்சிகள் பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை வழங்கினார்கள். அதன் பிறகு அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவெளி 15 நிமிடங்கள் விடப்பட்டது.

பின்னர் மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் செயல்வீரர்கள் செயல்திட்டங்களை விளக்கி பேசினார்கள். தாவா களத்தில் பின் பற்ற படவேண்டிய நுணூக்கங்களை பட்டியலிட்டு, கிளை பொறூப்பாளர்கள் அனுதினமும் மார்க்க அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றி கூறினார்கள். நேரத்தை திட்டமிடுவதிலும், மக்கள் தொடர்பு எற்படுத்துவதிலும், தாவாவிற்காக நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்து கூறினார்கள்.

மேலும் கிளைகளிடம் இருந்து தலைமை எதிர்பார்ப்பது என்ன? என்பது பற்றியும், ஒவ்வொரு கிளைகள் திட்டமிட்டிருக்கும் எதிர்கால தாவா பணிகள் என்ன என்பதை கேட்டறிந்தார்.

வக்ரா, அல்ஹீஸா, கர்த்தியாத், நஜ்மா, சனைய்யா, மாமுரா, பின் மெஹ்மூத், லக்தா, அல்சத் ஆகிய கிளைகளிலிருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் காலங்களில் செய்ய இருக்கும் தாவாபணிகளை கூறினார்கள்.

அடுத்த மண்டலச் செயலாளர் சகோ முஹம்மது அலி MISc அவர்கள் இந்த ஜமாத்தின் பொறுப்பாளர்களிடம் காணப்பட்ட வேண்டிய பண்புகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலும் நபிகளாரின் வாழ்வில் ஏற்பட்ட நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். அதில் குறிப்பாக தவிர்க்க வேண்டிய பண்புகளைப் பற்றியும், இந்த ஜமாத்துடன் முரண்படும் செயல்களையும், மற்ற இயக்கங்களிடம் இருக்கும் பலகீனங்களையும், நிர்வாகிகளாக இருப்போர் கத்தர் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கிளை நிர்வாகிகளுக்கு தெள்ளத் தெளிவாக உதாரணங்களுடன் கூறி விளங்கப்படுத்தினார்கள்.

அதன் பிறகு மண்டலத் துணைத் தலைவர் சகோ பக்ருதீன் அவர்கள் நம் ஜமாத்தின் வெளியீடான உணர்வு தீன்குலப் பெண், ஏகத்துவம் இதழ்களின் கத்தர் மண்டத்தின் நிலைகளைக் கூறி இந்த இதழ்கள் எந்த அளவிற்கு செய்திகளைத் தாங்கி வருகிறது, இதன் மூலம் நம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பயன் கிடைக்கிறது, இதன் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றியும், இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து என்பது பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி கிளை உறுப்பினர்களிடம் இதன் வளர்ச்சிக்குக்கும் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக சகோ முஹம்மது அலி MISc எதிர்வரும் நிகழ்ச்சிகள் என்னென்ன? என்பது பற்றியும் தலைமையில் இருந்து செய்திகள் வரும் போது கிளை உறுப்பினர்களும் செயல் வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார்கள்.

அத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நிகழ்சிகளாக பின்வரும் நிகழ்சிகளை பட்டியலிட்டார்கள்:

1. பிற மதக் கட்டுரைப் போட்டி
2. முஸ்லீம்களுக்கான கட்டுரைப் போட்டி
3. சிறுவர்களுக்கான கட்டுரைப் போட்டி
4. தாயிக்கள் பயிற்சி வகுப்பு
5. 31-05-2013 அன்று இரத்த தானம் 
6. 14-06-2013 அன்று ரமலான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 
7. இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்
8. ரமலான் நிகழ்சிகள்

இறுதியாக மண்டலப் பொருலாளர் சகோ இலியாஸ் நன்றியுரை கூறி இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


திங்கள், 29 அக்டோபர், 2012

24-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் "தாயீக்கள் தர்பியா"

அல்லாஹுவின் அருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் சார்பாக, மண்டல QITC மர்கஸில், 24-10-2012 புதன்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை, தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்  சகோ.முஹம்மத் அல்தாஃபி  அவர்களால் "தாயீக்கள் தர்பியா"  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்-தாயீக்கள்-பொறுப்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களை, மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதில், இந்நாள்-முன்னாள் நிர்வாகிகள், கிளைப் பொறுப்பாளர்கள், மண்டல பேச்சாளர்கள் மற்றும் தஅ'வாக்குழு உறுப்பினர்கள் 51 பேர் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.



வியாழன், 23 பிப்ரவரி, 2012

QITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012

بسم الله الرحمن الرحيم

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா பயிற்சி முகாம் 17/02/2012 வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை QITC மர்கசில் சகோதரர், Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

"இறைவனை பயந்து வாழ்வோம்" என்ற தலைப்பில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்.

"மாற்றப்பட்ட சட்டங்கள் ஜமாத்தின் மறு ஆய்வுகள்" என்ற தலைப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் மவ்லவி அப்துன் நாசிர் M.I.Sc அவர்கள் தாயகத்திலிருந்து ஆன்-லைன் மூலம் உரையாற்றினார்கள்.

"தொழுகை ஓர் விளக்கப்பாடம்" என்ற தலைப்பில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.

QITC பொதுச்செயலாளர் மற்றும் தாவா குழு தலைவர் மவ்லவி முஹம்மத் அலீ அவர்கள் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு” குறித்து விளக்கம் அளித்தார்கள்.

இறுதியாக QITC துணைத் தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமும் ஓர் இறைவசனம்