தினமும் ஓர் நபிமொழி

பரிசளிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசளிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 அக்டோபர், 2023

மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி 27-10-2023



கத்தர் TNTJ- அறிவிப்பு 👇


மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு....

இன்ஷா அல்லாஹ்!

🗓 நாள் : 27-10-2023 வெள்ளிக்கிழமை

⏱ நேரம்: மாலை 5:30 PM மணி முதல்

🔵 இடம்: அல்-புர்கான் ஸ்கூல், Souq Al Ali பின்புறம், லக்தா.



🎤 மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


🟣 சிறப்புரை

🎤 சகோ. முஹம்மத் தமீம் MISc
(TNTJ கத்தர் மண்டலத் தலைவர்)

📚 தலைப்பு: அல்லாஹ்வே போதுமானவன்


🎤 சகோ. காதர் மீரான்
(TNTJ கத்தர் மண்டலத் து.தலைவர்)

📚 தலைப்பு: பெற்றோர்களின் கடமைகள்


📌Location 👇
https://goo.gl/maps/BJxE7wXsMEFRdPP1A

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌 பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

📌 தாமதம் தவிர்க்கவும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛

இப்படிக்கு

கத்தர் TNTJ

தேதி : 23-10-2023

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛


திங்கள், 3 ஜூன், 2019

QITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு & சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி - 2019


*QITC -அறிவிப்பு* 👇
📦📦📦📦📦
QITC- யின்
🤝 *ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு*
🤝 *சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி*
*கத்தர் மண்டலம்*
📦📦📦📦📦
🅾 *நாள்:* பெருநாள் அன்று
🅾 *நேரம்:* சரியாக காலை 7:00 am மணி முதல் 8:00 am மணி வரை நடைபெறும்.
🅾 *இடம்:* QITC- மர்கஸ்- துமாமா பகுதி
*கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!*
*இன்ஷா அல்லாஹ்!*
 பெருநாள் அன்று காலை 7:00 மணிக்கு தங்களின் பெருநாள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் விதமாக
🤝 *QITC- பெருநாள் சந்திப்பு*🤝
*மண்டல மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*அனைத்து சகோதர, சகோதரிகளும்*
 *இதில் கலந்து கொண்டு நம் கொள்கை உறவுகளை சந்தித்து மகிழ்வுடன் செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*

*பெருநாள் தொழுகை நேரம்* 👇
 பெருநாள் தொழுகை நேரம் - 4:58 am
🛄 அனைவரும் திடலுக்கு காலை 4:30am க்கு முன்னதாக சென்று விடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
📘 தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்
*குறிப்பு:*👇
🛄 *பிறமத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நடைபெறும்*
🚺 *பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது*
🍲 *காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது*
📌 *தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்*
📦📦📦📦📦
*இப்படிக்கு*
*QITC- நிர்வாகம்*
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863
*03/06/2019*
📦📦📦📦📦

புதன், 29 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு - 30/05/2019


QITC- அறிவிப்பு 👇
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
QITC- யின்
🔆 ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி- 2019

🔆 முஸ்லிம் கட்டுரை & கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு
&
🔆 இரவுத் தொழுகையில்  இணைந்து கொள்வோம்

கத்தர் மண்டலம்
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 30-05-2019 வியாழக் கிழமை இரவு

✍ நேரம்: இரவு 9:00 Pm to 9:45 Pm மணி வரை இஷா 2+2 இரவுத் தொழுகை

9:45 pm to 12:40 am மணி வரை சிறப்பு நிகழ்ச்சி

✍ இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் 30-05-2019 வியாழக்கிழமை அன்று QITC மர்கஸில்  இரவு 9:00 PM முதல் 1:45 AM வரை ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


நிகழ்ச்சி நிரல்👇

👉 9:15pm முதல் 10:00pm வரை : இஷா +2+2 ரக்ஆத்துகள் தொழுவிக்கப்படும்

📣 சிறப்புரை📣
🎤 தலைமை : சகோ.தஸ்தகீர்
(மண்டல தலைவர்)

  10:00 Pm முதல் 10:20 Pm: 👇
🎤 சகோ. தஸ்தகீர்
(மண்டல தலைவர்)
📗 தலைப்பு: சிந்தனை செய் மனமே!

🔵 10:20 Pm முதல் 11:00 Pm : 👇
🎤 மவ்லவி. முஹம்மத் அலி M.I.Sc
(மண்டல செயலாளர்)
📗 தலைப்பு: நபிகளார் கண்கள் சிவந்த தருணங்கள்

🔵 11:00 Pm முதல் 11:30 Pm வரை:👇
🎁 கட்டுரைப் போட்டி & கிராஅத் போட்டிகளுக்கான பரிசு வழங்குதல்
🎁🎁

🔵 11:30 Pm முதல் 11:40 Pm வரை: 👇
🎤 இஸ்லாத்தை தழுவியவரின் உரை

🔵 11:40 am முதல் 12:40 am: 👇
🎤 மவ்லவி. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
(மாநில பேச்சாளர்-TNTJ)
📗 தலைப்பு: கணவன் மனைவி கடமைகள்

👉 12:40 முதல் 12:55 வரை:
இடைவேளை (ஒளூ மற்றும் இயற்கை தேவைகள்)

👉 12:55 முதல் 1:45 வரை:
 4ரக்ஆத்
+வித்ர் தொழுவிக்கப்படும்
+பிரார்த்தனை நேரம்

👉 1:45 முதல்
 ஸஹர் உணவு.

நன்றியுரை : சகோ.ஹாஜா
(மண்டல அணிச் செயலாளர்)

▫▫▫▫▫▫▫▫▫▫

புனித மிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை, சிறப்புரைகளில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
குறிபபு👇

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.

🖍 பிறமத சகோதர, சகோதரிகளுக்களின் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் 31-05-2019 அன்று வழங்கப்படும்.

  கட்டுரைப் போட்டி பரிசளிப்பு பற்றிய தகவல் சம்பந்தப் பட்ட சகோதர சகோதரிகளுக்கு தொலைபேசி மூலம் 29-05-2019 க்குள் SMS அழைப்பு வரும். அழைப்பு வராதவர்கள் உடனே 66579598 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்திற்கு முன் அனைவரும் மர்கஸ் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
26-05-2019
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

புதன், 1 ஜூலை, 2015

சவூதி மர்கசில் QITC யின் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு & சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 02/07/15



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

சவூதி மர்கஸில்
"ஸஹர் சிறப்பு சொற்பொழிவு &
சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி"

நாள்: 02/07/2015 - வியாழன் இரவு 
நேரம்: இரவு 09:30 மணிமுதல் 
இடம்: சவூதி மர்கஸ் 

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!!

தலைமை: சகோ. மஸ்வூத் 
(மண்டல தலைவர் - QITC)

சிறப்புரை:

மவ்லவி: அப்துஸ் ஸமத் மதனி 
(சவூதி மர்கஸ் அழைப்பாளர் )
தலைப்பு: அருள் நிறைந்த மாதமும் அளப்பறியா நன்மைகளும் !

மவ்லவி: முஹம்மத் அலீ MISc
(மண்டல பொதுச் செயலாளர் - QITC )
தலைப்பு: தூற்றப்படும் இடங்களில் போற்றப்படும் இஸ்லாம் !

மவ்லவி: M.M.ஸைஃபுல்லாஹ் MISc
(மாநில பேச்சாளர் - TNTJ )
தலைப்பு: தவ்ஹீத் தாக்கமும் தலைமுறை மாற்றமும் !

எனவே அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு :
1) ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2) பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது

வாகன உதவிக்கு: 
சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் - 6696 3393
(மண்டல துணைத் தலைவர் - QITC)
சகோ. ஹனிஃபா - 7721 0605
(மண்டல துணைச் செயலாளர் - QITC)

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/06/2015


கடந்த 14/06/2015 அன்று ஹமாத் மெடிக்கல் கார்ப்ரேசன் சார்பில் "The St. Regis Doha" ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கத்தர் நாட்டில் இரத்ததானம் வழங்கியவர்களுக்கான விருது நிகழ்ச்சியில் TNTJ கத்தர் மண்டலம் சார்பாக மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் மற்றும் பொது செயலாளர் சகோ. முஹம்மத் அலி MISc ஆகியோர் அவர்களின் அழைப்பை ஏற்று இன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்,

இதில் கத்தர் மண்டலத்திற்கு இரத்த்தானத்திற்கான கெளரவிப்பு விருதும் சான்றிதழும் மண்டல தலைவர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் விருத்துகள் வழங்கப்பட்டது. பல அமைப்புகளுக்கு மத்தியில் இம்மாதிரியான விருதுகள் பெரும் ஒரே அமைப்பு நாம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்




ஞாயிறு, 16 மார்ச், 2014

சவுதி மர்கசில் சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14-03-2014



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14/03 l2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 வரை சவுதி மர்க்ஸ் (மர்க்ஸ் தாவா வல் இர்ஷாத்) உள்ளரங்கத்தில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு நவீன உலகப் பிரச்சனைகளும்இஸ்லாம் கூறும் தீர்வும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் மறுமைக்காக வாழ்ந்த மகத்தான மனிதர்கள் என்னும் தலைப்பிலும், மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் மறுமையை மறக்க வைக்கும் மாடலிங் உலகம் என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மர்கசில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் ஷமீனா பக்ருதீன், நசீமா ஹயாத் பாஷா, ஜன்னத்துல் பிர்தௌஸ், பசரியா மற்றும் ராபியத்துல் பஷீரா ஆகியோர்களுக்கு பரிசுகளை மண்டல தலைவர் மஸ்வூத் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் கத்தர் மண்டல கிளைகளில் அதிக தாவா மற்றும் சமுதாயாப் பணிகள் செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தாவா மற்றும் சமுதாயப்பணியில் முதலிடம் பெற்ற அல்வக்ரா 1 மற்றும் 2 கிளைகளுக்கு நூலகம் அமைக்க தேவையான அறு நூறு கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .

இரண்டாவது இடம் பிடித்த சனைய்யா கிளைக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .
மூன்றாம் இடம் பிடித்த அல்கோர் மற்றும் ராஸ் லபான் கிளைகளுக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

புதன், 26 பிப்ரவரி, 2014

தாவா பணியில் கத்தர் மண்டலம் இரண்டாவது இடம்... அல் ஹம்துலில்லாஹ்!



அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், வளைகுடா நாடுகளில் உள்ள மண்டலங்களில், சிறந்த தாவா பணி செய்து வருகின்ற முதல் மூன்று மண்டலங்களை புள்ளிகளின் அடிப்படையில் தலைமை தேர்வு செய்தது. இதில் கத்தர் மண்டலம் இரணடாவது நிலையில் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை ஈரோட்டில் 23-02-2014 நடைபெற்ற பொது குழுவில் வழங்கினார்கள். கத்தர் மண்டலம் சார்பாக, சலத்தா கிளை பொறுப்பாளர் சகோதரர் தாஜுதீன் பெற்றுக் கொண்டார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 21 ஜூலை, 2013

18-07-2013 கத்தர் மண்டலம் சவுதி மர்கஸில் ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி



18-07-2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவஹீத் மையம், மதீனா கலிஃபா பகுதியில் அமைந்துள்ள சவுதி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம் என்ற சவுதி மர்கஸில் ஸகர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஷா தொழுகையுடன் இரவு தொழுகையும் நிறைவேற்றிய பின்னர் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மைத்தின் தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் வரவேற்புரை வழங்கி, சவுதி மர்கஸின் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாறு கேட்டுக்கொண்டார்.

1 . மவ்லவி அன்சார் மஜீதி - ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு !

2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி - நபிவழி நடந்தால் நரகமில்லை !

3 . மவ்லவி கே அப்துன் நாஸர் M.I.Sc - கணவன் மனைவி கடமைகள் !

ஆகிய தலைப்புகளில் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குர்ஆன் மனனம், துஆ ஓதுதல், இஸ்லாமிய பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளுக்கான QITC RAMADAN 2013 கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, 500 க்கும் அதிகமான சகோதரர்கள் அல் கோர், துக்கான், சனையா, வக்ரா, உம் சையீத் போன்ற தொலை தூர இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர். மேலும் நூற்றூக்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

கத்தர் இந்திய தவ்ஹீத மையத்தின் செயல் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களுடைய தலைமையில் 10 பேர்க்கொண்ட உணவு குழு முழு வீச்சாக செயல்பட்டு, நமது மர்கசிலியே உணவு தாயாரித்து வருகை தந்திருந்த அனைவர்க்கும் ஸகர் உணவை பரிமாரியது.

இறுதியாக இணைச்செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சி அல்லாஹுவின் அருளால் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது அல் ஹம்துலில்லாஹ்!


ஞாயிறு, 30 ஜூன், 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைப்பெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28/06/2013

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், 28/06/2013 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில், பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற முதல் மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், அதனையொட்டி வருகை தந்திருந்த பிறமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் செயலாளர் சகோதரர் முஹ்ம்மது அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி, பின் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்களை தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் இஸ்லாம் எப்படி பேணச்சொல்கிறது என்றும் மண்டலத்தலைவர் மஸ்ஊத் அவர்களின் சிறிய அறிமுகத்துடன், கேள்வி பதில் நிகழ்ச்சியை மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் தொடங்கினார்கள்.

மிக விறுவிறுப்பாக இரண்டு மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், இன்றைய கால சூழலுக்குகேற்ப சிறப்பான கேள்விகள் கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சகோதரர் தமீம் அவர்கள் அழகான முறையில், ஆழமான பதிலை புதிய கண்ணோட்டத்துடன் நன்றாக புரியும்படி எடுத்துரைத்தார்கள்.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறையில் தங்களுடைய பொழுதுபோக்கினை ஒதுக்கி வைத்துவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மத சகோதரர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.

அரங்கம் முழுவதும் பிற மத சகோதரர்களால் நிறைந்திருந்தது. நம் சகோதரர்களை அரங்கத்தின் வெளியே அகண்ட திரை அமைக்கப்பட்டு புரோஜக்டர் மூலம் நிகழ்ச்சியை காண எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இருநூறூக்கும் மேல்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். "இஸ்லாம் என் பார்வையில்" கட்டுரையில் முதலாவது பரிசு வென்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் மண்டலத்தலைவர் மஸ்ஊத்.

இரண்டாவது பரிசு வென்ற சகோதரர் அருள் முருகன் அவர்களுக்கு டாபெலெட் பரிசாக வழங்கினார் மண்டல அழைப்பாளர் முஹம்மது தமீம்.

மூன்றாவது பரிசாக சாம்சங் போனை சகோதரர் விஸ்வனாதனுக்கு சகோதரர் கோட்டக்குப்பம் அப்துல் வதூத் அவர்கள் வழங்கினார்கள்.

கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்ற சகோதரர்களுக்கு 16 திருக்குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பல் வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் உணவு பரிமாரப்பட்டது.

துணைச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி பெரும் பொருட் செலவில்லாமல் எளிய முறையில் நடைபெற்றது. எனினும் அல்லாஹுவின் உதவியால் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக உருவெடுத்தது. அல் ஹம்துலில்லாஹ்!









திங்கள், 24 ஜூன், 2013

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 28/6/2013

 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி

நாள் : 28/6/2013 மாலை 6 மணிக்கு

இடம் : QITC மர்கஸ்



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி வரும் 28/6/2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
அனைத்து  சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் இந்த தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வரவும் மற்றும் இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் மறந்து விடவேண்டாம் !

====================================================================================================

கண்ணியத்திற்குரிய பிறமத சகோதர சகோதரிகளே !

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ, மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் இஸ்லாம் என் பார்வையில் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை நாம் அறிவித்திருந்தோம்.
அதற்கு பிறமத சகோதரர்களிடமிருந்து 15க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன.
அச்சகோதரர்களை கண்ணியப்படுத்தும் விதமாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி வரும் 28/6/2013வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிறமத சகோதர சகோதரிகளையும் QITC மர்கஸ் மனமகிழ்ந்து அழைக்கிறது.

குறிப்பு :

1.வாகனம் தேவைப்படும் சகோதரர்கள் மண்டல துணை செயலாளர்கள் ஷேய்க் அப்துல்லாஹ், காதர் மீரான் அவர்களை தொடர்பு கொள்ளவும் 66963393,70453598

 2. போட்டியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்படும்

கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : 55532718, 66579598

======================================================================================================


சனி, 11 ஆகஸ்ட், 2012

அல்கோர் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 09/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்  உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30  மணி  முதல் அதிகாலை 3.30 மணிவரைமண்டல துணைத் தலைவர் சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான்  அவர்கள் "அழைப்போம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை  புரிந்துள்ள  சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.   அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைப்படி தான் நம்முடைய வாழ்க்கை அமைத்திருக்கிறதா என்பதை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சில உதாரணங்களாக நபி ஸல் அவர்கள் தாடி வைப்பதை வலியுறித்தினார்கள் ஆனால் இன்று நம்மில் பலர் அந்த தாடி வைப்பதை மனைவியரின்  திருப்திக்காக அதை செய்வதில்லை என்பதையும் வட்டியை அல்லாஹ் தடுத்துள்ளதை இன்று சர்வ சாதரணமாக மீறுவதையும்  தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள் (வீடியோ).

மண்டல மர்கசில் சகோதரர் .அன்ஸார் .மௌலவி அவர்கள் நடத்திய அரபி ஆரம்பநிலை  பாட வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்ற சகோதர, சகோதரிகள், சிறுவர் சிறுமியருக்கான சான்றிதழ்களை  சகோதரர் அப்துஸ்ஸமத்மதனீ,சகோதரர்.சைபுல்லாஹ் ஹாஜா Misc . ஆகியோர் வழங்கினார்கள்.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் மண்டல செயல்பாடுகள் மற்றும்  எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். அல்கோர்  கிளையின் பொறுப்பாளர் சகோதரர். நைனாமுஹமத் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 250    க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக் குழுவினர்  சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர்  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.






திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சவூதி மர்கஸ் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 02/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய  "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30 மணி  முதல் அதிகாலை 3.30   மணிவரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சகோதரர் .அப்துர்ரஹ்மான்    அவர்கள் வரவேற்புரை வழங்க  .அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் மௌலவி .இஸ்ஸத்தின் ரில்வான் ஸலஃபி அவர்கள் "இஸ்லாத்தில் எது நாகரீகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

அடுத்ததாக  சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.அப்துஸ் சமத் மதனீ அவர்கள்  "உலக மோகத்தில் உயர்ந்தோனின் திருப்பிதியா?" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் .எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "இஸ்லாம் கூறும் சுயமரியாதை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் தனது சகாபாக்களை எவ்வாறு சுயமரியாதையோடு வாழ வழிகாட்டினார்கள். அல்லாஹ்வை தவிர யாருக்கும் சிரம் பணியக்க்கூடாது என்று சுய மாரியாதையோடு வாழ பழக்கினார்கள் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் மூலம் விளக்கினார்கள் (வீடியோ).

வக்ரா ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின்    மார்க்கஅறிவுப்போட்டியில்முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் இடம் பிடித்த    சிறுவர் சிறுமியருக்கு முன்னாள் நிர்வாகிகள்,மற்றும்  சகோதரர்  அப்துஸ்ஸமத் மதனீ, சகோதரர். சைபுல்லாஹ் ஹாஜா  Misc ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். லக்தா கிளையின் பொறுப்பாளர் சகோதரர்  .ஜலால்  அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 450க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது .உணவுக்கான ஏற்பாட்டினை  உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெக்கையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியது நிகழ்ச்சிக்கு  வந்திருந்த  மக்களின்  பாராட்டை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.






ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

13-04-2012 கத்தரில் "சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் பேரருளால்,


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், கத்தர் மண்டலம் "மாபெரும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி" யை 13-04-2012 வெள்ளியன்று மாலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை ,கத்தர் அரசு இஸ்லாமிய அழைப்புத் துறை அலுவலக [ஃபனார்] உள்ளரங்கத்தில், ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்குமண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

துவக்கமாக மண்டல தலைவர், டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் 'வரவேற்புரை' நல்கிவிட்டு, "நல்லறங்களில் பால் விரையுங்கள்!" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் மஜீதி அவர்கள் "மன அமைதி தரும் வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதற்கடுத்து,QITC அழைப்பாளர் மௌலவிதமீம்M.I.Sc., அவர்கள் "அல்குர்'ஆனும் - உலக அதிசயங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்போர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் 'கத்தர் மண்டல ஜமாஅத்தின் செயல்பாடுகளை' விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.


அடுத்து, 'அரபி ஆரம்ப நிலை வகுப்பு' தேர்விலும், 'இஸ்லாமிய அறிவுப்' போட்டியிலும் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக,கத்தர் மண்டல துணைத் தலைவர், சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் 'நன்றியுரை' ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.



தினமும் ஓர் இறைவசனம்