தினமும் ஓர் நபிமொழி

பெருநாள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருநாள் நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூன், 2019

கத்தர் மண்டலத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க சந்திப்பு (பெருநாள் சிறப்பு சந்திப்பு) 04/06/2019


கத்தர் மண்டலத்தின் சார்பில் ஒவ்வொரு வருட ரமலான் மாதத்தின் இறுதி வார வெள்ளிக்கிழமையில் நமது தொப்புள்கொடி உறவுகளான பிறமத சகோதர, சகோதரிகளை அழைத்து சிறிய அளவிலான கலந்துரையாடலுடன் கூடிய மாஸ் இஃப்தார் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் நாம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியானது சில சூழ்நிலை காரணமாக நடத்த முடியாமல் கடக்க நேறிட்டது. இருந்தபோதிலும் அன்றைய நாளில் ஆர்வத்துடன் மக்கள் நமது மர்கஸை நோக்கி வந்தனர். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இதுபோல் யாரேனும் மக்கள் வந்துவிடுவார்கள் என்பதை நாம் கணித்து அவர்களுக்கு தேவையான உணவுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

மேலும் இஃப்தார் நிகழ்வில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரையில் கவர்ந்திழுக்கப்பட்டு அந்த உரையின் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள், மார்க்கம் பற்றி கருத்து பரிமாற்றம் மூலம் விளக்கப்பட்டு, ஆங்கில திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பேராவலை ஏற்படுத்திய பெருநாள் சந்திப்பு

அடுத்ததாக தொப்புள்கொடி உறவுகளுடன் நாம் மகிழ்ச்சிகளை அவசியம் பறிமாரிக்கொள்ள வேண்டும் என்கிற தலைமையின் சுற்றறிக்கையும், மண்டலத்தின் வழமையான நடைமுறையும் அவசியம் பேண வேண்டும் என்கிற பேராவலோடு முஸ்லிம்களின் மகிழ்ச்சி தருணமான நோன்பு பெருநாளின் அதிகாலையில் அவர்களுடனான கலந்துரையாடலை மேன்மைபடுத்தும் வகையில் சமூக நல்லிணக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ரமலானை முன்னிட்டு நாம் வருடா வருடம் நடத்திவரும் முஸ்லிம் & பிறமதத்தவர்களுக்கான கட்டுரை போட்டியின் பரிசளிப்பு நிகழ்வை குறிப்பாக பிறமத மக்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கான கட்டுரைகளின் பரிசளிப்பை அந்த இனிய சந்திப்பில் நாம் வைத்தது அவர்களுக்கு உற்சாகத்தை பெருக்கோட செய்தது. மேலும் பெருநாள் உரையில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தீண்டாமை இல்லை என்பதையும், சகோதரத்துவத்தை பேணச் சொல்லும் மார்க்கம் என்பதையும், தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாம் போதிக்கும் ஆழமான செய்திகளை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்த பெருநாள் சந்திப்பு பிறமத மக்களுக்கும், நமது மக்களுக்கும் பேராவலையும், சமய நல்லிணக்கத்தையும் வேரூன்ற செய்தது என்றால் அது மிகையில்லை.

அல்ஹம்துலில்லாஹ்..

அன்புடன்
கத்தர் மண்டலம்

திங்கள், 3 ஜூன், 2019

QITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு & சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி - 2019


*QITC -அறிவிப்பு* 👇
📦📦📦📦📦
QITC- யின்
🤝 *ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு*
🤝 *சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி*
*கத்தர் மண்டலம்*
📦📦📦📦📦
🅾 *நாள்:* பெருநாள் அன்று
🅾 *நேரம்:* சரியாக காலை 7:00 am மணி முதல் 8:00 am மணி வரை நடைபெறும்.
🅾 *இடம்:* QITC- மர்கஸ்- துமாமா பகுதி
*கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!*
*இன்ஷா அல்லாஹ்!*
 பெருநாள் அன்று காலை 7:00 மணிக்கு தங்களின் பெருநாள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் விதமாக
🤝 *QITC- பெருநாள் சந்திப்பு*🤝
*மண்டல மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*அனைத்து சகோதர, சகோதரிகளும்*
 *இதில் கலந்து கொண்டு நம் கொள்கை உறவுகளை சந்தித்து மகிழ்வுடன் செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*

*பெருநாள் தொழுகை நேரம்* 👇
 பெருநாள் தொழுகை நேரம் - 4:58 am
🛄 அனைவரும் திடலுக்கு காலை 4:30am க்கு முன்னதாக சென்று விடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
📘 தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்
*குறிப்பு:*👇
🛄 *பிறமத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நடைபெறும்*
🚺 *பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது*
🍲 *காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது*
📌 *தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்*
📦📦📦📦📦
*இப்படிக்கு*
*QITC- நிர்வாகம்*
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863
*03/06/2019*
📦📦📦📦📦

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கத்தரில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24-09-2015


QITC- கத்தர் மண்டலத்தின் நபிவழி பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24/09/2015 இன்று காலை 5:38 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது, இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஃபனார் (FANAR) உள்ளரங்கில் காலை 7:15 மணிக்கு மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

இதில் ஆரம்பமாக மௌலவி அப்துஸ்சமது மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு பேச்சாளர் சகோதரர் K.M. அப்துந் நாஸிர் MISc அவர்கள் "ஷிர்க் ஓர் பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

புதன், 23 செப்டம்பர், 2015

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்



நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 5:15 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.



ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 7:15 மணிக்கு சூக் ஃபலாஹ் அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கத்தில்  ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/15






ஃபனாரில் QITC -யின் ஈதுல் ஃபித்ர் -பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2015

பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும்
குத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார்
உள்ளரங்கில் QITC-யின்  ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் மவ்லவி: M.T.M. ஃபர்ஸான் (SLTJ மண்டல துணைத் தலைவர் & அழைப்பு ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஃபனாரில் கத்தர் மண்டல ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி 04-10-14


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-10-214 அன்று ஹஜ் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பெருநாள் தொழுகைக்குப்பிறகு காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கத்தர் மண்டலம் ஃபனார் உள்ளரங்கில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமயில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு அழைப்பாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் "மனிதனை வாழ வைக்கும் மார்க்கம் இஸ்லாம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் இன்று உலகம் முழுவதும் மீடியாக்களால் இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், இஸ்லாமியர்கள் செய்யும் மனித நேய பணிகளையும், தாயகத்தில் ஒருமாத காலம் நாம் செய்யவிருக்கின்ற தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்த தகவல்களையும், கத்தர் மண்டலம் முழுவதும் 6 இடங்களில் நடத்த உள்ள ஒரு மாத கால சிறப்பு இரத்த தானம் குறித்த தகவல்களையும் சுட்டி காட்டி இஸ்லாம் மனிதனை வாழ வைக்கின்ற மார்க்கம்தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அக்டோபர் 15முதல் நவம்பர் 16 ஒருமாத கால இரத்த தானம் நடைபெற உள்ள இடங்கள் குறித்த தகவல்களை மண்டல செயலாளர் மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் அறிவிப்பு செய்து நன்றி உரை ஆற்றினார்கள்.

இதில் 600 க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


















مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஃபனாரில் QITC -ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி-04/10/2014

بسم الله الرحمن الرحيم

ஃபனாரில் QITC -யின் ஹஜ்ஜுப் -பெருநாள்
சிறப்பு நிகழ்ச்சி -2014

நாள் : 4/10/2014 நாளை சனிக்கிழமை பெருநாள்
நேரம் : பெருநாள் தொழுகைக்குப்பின் 7:00 மணிக்கு
இடம் : FANAR உள்ளரங்கம் - சூக் ஃபாலா அருகில்
தொழுகை நேரம் : காலை5:00 மணிக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ....

அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே !!!

நாளை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும் குத்துபாவிற்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள FANAR ஃபனார் உள்ளரங்கில் QITC –யின் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது .

அனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையை ஆங்காங்கே திடல்களில் தொழுதுவிட்டு ஃபனாருக்கு வந்துவிடவும்.

சிறப்புரை:

சிறப்பு விருந்தினர்

மவ்லவி : 
அஷ்ரப் தீன் ஃபிர்தெளஸி
(மாநிலப் பேச்சாளர் -TNTJ)

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்

குறிப்பு :
1 .பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
2 . தங்களின் வாகனங்களை ஃபனாரின் அடித்தளத்தில் நிறுத்தும் வசதி உள்ளது
3 .காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கத்தரில் 15-10-2013 அன்று நடைபெற்ற தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தரில் 15-10-2013 அன்று தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சிறப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்றை ஃபனார் உள்ளரங்கத்தில் பெருநாள் தொழுகைக்கு பின் காலை 7:00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கத்தர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் அனைவரையும் வரவேற்று, சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை  தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் "வீரத்தின் விளைநிலம் நபி இப்றாஹீம் அவர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தனியொரு மனிதனாக நின்று ஏகத்துவ பிரச்சாரத்தை வீரத்துடனும் விவேகத்துடனும் சத்தியத்தை எடுத்துரைத்த விதம், இறை கட்டளைக்கு கீழ்படிதல், தியாகத்தில் உயர்ந்தவர்களாக திகழ்ந்தார்கள். இன்றும் அத்தியாகத்தை நினைவு கூர்ந்தவர்களாக நாம் கொண்டாடி கொண்டிருந்தாலும், நம் உள்ளத்தில் ஏகத்துவ உறுதியில்லாமல் இருக்கிறோம். ஆதலால் இன்றை தினத்தில் கொள்கை உறுதிபாட்டுடன் உண்மையான தவ்ஹீத்வாதிகளாக ஒவ்வொருவரும் திகழவேண்டும் என்று உறுதிமொழி எடுத்தவர்களாக கலையவேண்டும் என்று கூறினார்.

இதில் 600க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துக்கொண்டு பயனைடைந்தார்கள். இறுதியாக கத்தர் மண்டல் செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



திங்கள், 12 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 08/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 08 /08 /2013 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல அழைப்பாளர் சகோதரர். மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் தலைமையில்நடைபெற்றது.

துவக்கமாக சகோதரர். தஸ்தகீர் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள் ,பின்னர் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். கே. அப்துன் நாஸர் Misc அவர்கள் "ரமலான் ஏற்படுத்திய மாற்றம்!" என்ற தலைப்பில் அல்லாஹ்வை சஹாபாக்கள் எப்படி பயந்தார்கள் நாம் எப்படி பயப்படுகிறோம் என்ற இறையச்ச மிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் பெற்றோர்களை பேணுவதின் முக்கியத்துவம், இறைவனை வணங்குவதின் முக்கியத்துவம் என்று பலதுணுக்குகளை கூறி பேசியது மக்களின் மனங்களை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது.

பின்னர் மண்டல செயலாளர் எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் மர்க்சின் வாரந்திர நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் வாரத்திலிருந்து QITC மர்கசில் தொடரும் என அறிவிப்பு செய்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறி நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 600 -க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!! பின்னர் வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டது.







புதன், 7 ஆகஸ்ட், 2013

பனாரில் QITC யின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 2013




ஃபனாரில்  QITC யின் ஈதுல் பித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2013


நாள் : பெருநாள் அன்று 
நேரம் : பெருநாள் தொழுகைக்குப்பின் 7:00  மணிக்கு 
இடம் : FANAR உள்ளரங்கம் - சூக் பாலா  அருகில் 
தொழுகை நேரம் : காலை5:30 மணிக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ...
அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே !!!
 பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும் குத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கில்  QITC நடத்தும் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது .
அனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையை ஆங்காங்கே திடல்களில் தொழுதுவிட்டு ஃபனாருக்கு வந்துவிடவும்.
சிறப்புரை:
சிறப்பு விருந்தினர்
மவ்லவி கே. அப்துன் நாஸர்  M.I .Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர் -TNTJ) 
எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம் 
===============================================================================
குறிப்பு :
1 .பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
2 . தங்களின் வாகனங்களை ஃபனாரின் அடித்தளத்தில் நிறுத்தும் வசதி உள்ளது. 
3 .காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
=============================================================================== 


திங்கள், 29 அக்டோபர், 2012

26-10-2012 கத்தர் மண்டல "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி 26-10-2012 வெள்ளி  காலை  7 மணி முதல் 8  மணி வரை  "கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை [ஃபனார்]" அலுவலக  கட்டிடத்தில்  உள்ள கேட்போர் கூடத்தில், மண்டல  தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தியாகத்திற்கு தயாராகுங்கள்" என்ற தலைப்பில் இப்ராஹீம் (அலை), நபி(ஸல்) மற்றும் சஹாபாப்பெருமக்கள் ஆகியோர் செய்த தியாகங்களை தெளிவாக எடுத்துரைத்து, நாமும் தியாகம் தொடர்ந்து செய்ய சபதம் எடுப்போம் என வலியுறுத்தி சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

மண்டல இணைச் செயலாளர் சகோதரர். எம்.எஸ்.ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கிவிட்டு,பின்னர் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம்   மற்றும் நண்பர்களோடு  கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.






தினமும் ஓர் இறைவசனம்