ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது .


அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் ஏற்ப்பாடு செய்திருந்த இம்முகாமிற்கு நூறுக்கணக்கான சகோதரர்கள் தோஹா மற்றும் தொலை தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். குருதி கொடையாளிகளின் , பெயர் பதிவும் மற்றும் உடல் பரிசோதனையும் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர் .
சரியாக 2:00 மணிக்கு தொடங்கப்பட்ட முகாம் , 4:00 மணிக்கு
பிறகு களை கட்ட தொடங்கியது . சகோதரர்கள் வரவு அதிகமாகவே , பலர் அமைதியாக நின்று ஒத்துழைப்பு தந்தார்கள். தொலை தூர இடங்களான , அல் கோர் , ராஸ் லாப்பான் , சனையா சகோதரர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு முப்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரிசையில் காத்து நின்றார்கள். பெயர் பதிவு மற்றும் உடல் பரிசோதனை 7:30 மணிக்கே நிறுத்தப்பட்டாலும் பல சகோதரர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .

பெயர் பதிவு செய்த சகோதரர்களுக்கே , 9:00 மணிவரை செல்லும் என்பதால் இரத்த வங்கி ஊழியர்கள் வந்திருந்த பல சகோதரர்களுக்கு அடுத்த முறை , அவசர சிக்கிச்சைகாக தேவை படும் போது அழைக்கிறோம் என்று கூறினார்கள். " உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி நிச்சயம் வழங்குவான் " என்று வருகை தந்து கொடுக்க முடியாமல் போன சகோதரர்களுக்கு நிர்வாகிகள் ஆறுதல் அளித்தனர். மொத்தம் 72 சகோதரர்கள் குருதி கோடை அளித்தார்கள். இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துஸ் சமத் மதனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது .