சனி, 26 பிப்ரவரி, 2011

25-02-2011 அன்று கத்தரில் நடைபெற்ற on-line கேள்வி பதில் நிகழ்ச்சி

بسم الله الرحمن الرحيم


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......


அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் சென்ற வெள்ளிக்கிழமை 25-02-2011 அன்று கத்தர் மர்கசில்  பி .ஜே அவர்களுடைய ஆன் லைன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு மார்க்க ஐயங்களை நேரிடியாக சகோதரர் பி .ஜே அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர். இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள் என்று மாநில தலைவர் சகோதரர் பி .ஜே அவர்கள் சொன்னது அனைவரையும் உற்சாகபடுத்தியது.

             அல்லாஹுவினுடைய அருளலால் கத்தர் மர்கஸ் ஜனவரி 2011 முதல் புத்தம் புதிய விசாலமான கட்டிடத்தில் தனது தாவா பணிகளை தொடங்கியது. அதிமாக மக்கள் வரவை எதிர்பார்த்ததால் , கட்டிடத்தின் வளாகத்தின் உள்ளே இருநூறு பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் போடப்பட்டு , ப்ரொஜெக்டர் மூலம் அகன்ற திரையில் , ஆன் லைன் ஒலி /ஒளி பரப்பு இணைய தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது .பெண்களுக்கு மர்கசின் மெயின் ஹாலில் அறுபது இன்ச்(60 இன்ச்) ஹோம் தியேட்டர் டிவியில் இணைப்பு கொடுக்கப்பட்டு , தனி இட வசதி செய்யப்பட்டது. இதற்க்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் , எல்லா நிர்வாகிகளும் மற்றும் செயல் வீர்களும் சிறந்த முறையில் செய்தார்கள்.

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரர்கள்


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

சென்ற வியாழக்கிழமை 24-02-2011 அன்று கத்தர் மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது பட்டுகோட்டையை சேர்ந்த கலைவாணன் , தஞ்சை சேர்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அச்சகோதரர்களுக்கு துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் கலிமா சொல்லிகொடுத்து , தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு கலைவாணன் என்ற சகோதரர் அப்துல்லாஹ் என்றும் , நாகராஜ் என்ற சகோதரர் அப்துல் காதிர் என்றும் பெயர் சூடிகொண்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ! அவ்விருவருக்கும் மர்கஸ் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கினார்கள்.