வியாழன், 20 டிசம்பர், 2018

திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்
எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளை எடுத்துக் காட்டி, மக்களை அமல் செய்வதற்கு ஆர்வமூட்டும் விதமான செய்திகள் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன.

திருக்குர்ஆனை ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும் நன்மைகளை பார்ப்போம்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்

ஓதுபவருக்கு உவமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)

மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

பொறாமைப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர), நூல் : புகாரி (5025)

எழுத்துக்குப் பத்து நன்மை!
“அல்லாஹ்வின் வேதத்திருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அஃப், லாம், மீம் – என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி

சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும்

“அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்

இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா 28/12/2018


திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா

QITC- யின் திருக்குர்ஆன் சம்மந்தமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 28-12-2018 வெள்ளிக் கிழமை 

✍ நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:15 மணிவரை 

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

 ✍ QITC-  யின் கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் இஜ்திமா – 28-12-2018  வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில் 

📌 சிற்றுரைகள் 
📌 கேள்வி பதில் 
📌 சிறப்புரைகள் 

என  திருக்குர்ஆன் சம்மந்தமான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🔖தலைமை🔖

🔖 சகோதரி: ரஹானா சுல்தானா
(5:30 PM - 5:33 PM)

📣 சிறப்புரை:
 
🎤 1. சகோதரி: சுமையா பேகம்
(5:33 PM - 5:40 PM)
📓இளம் வயதினர்களையும் வழி நடத்தும் திருக்குர்ஆன்

🎤 2 . சகோதரி: நிலோஃபர்
(5:40 PM - 5:47 PM)
📔 திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள்.

🎤 3. சகோதரி: பியாரி பேகம்
(5:47 PM - 5:54 PM) 
📕 வழிகாட்டும் வேதமும், வழிமாறும் கூட்டமும்

🎤 4. சகோதரி: ரஸிய்யா சுல்தானா
(5:54 PM - 6:01 PM)
📒 திருமறைக்கு கட்டுப்பட்ட சமுதாயம்

🎤 5. சகோதரி: ஃபாரிஸா பேகம்
(6:01 PM - 6:08 PM)
📗 இழிவுகளை நீக்கும் இறைவேதம்

🎤 6. சகோதரி: முர்ஸிலா
(6:08 PM - 6:15 PM)  
📘 பகைவனையும் ஈர்க்கும் பண்புள்ள வேதம்

🎤 7. சகோதரி: சாபிரா
(6:15 PM - 6:23 PM)
📙சோதனைகள் ஏற்படும் போது குர்ஆன் கூறும் ஆறுதல்.

▪▪▪▪▪▪▪▪▪▪▪
🎤 கேள்வி பதில் நிகழ்ச்சி:
(6:31 PM - 7:31 PM) 
🎁 கேள்வி பதில் & பரிசுகள் 🎁
▪▪▪▪▪▪▪▪▪▪▪

📣 சிறப்புரை: 📣
🔊 8. சகோதரி: ஜுபைதா பேகம்
(7:31 PM  - 7:41 PM)
📕மகப்பேறும் திருக்குர்ஆனும்

🔊 9. சகோதரி: ரஹானா சுல்தானா 
(7:41 PM - 7:51 PM)
📘குர்ஆன் விளக்கும் அல்லாஹ்வின் படைப்பாற்றல்..

🔊 10. சகோதரி: ஷமீனா
(7:51 PM  - 8:06 PM)
📗திருக்குர்ஆனை வாழ்க்கை நெறியாக்குவோம்.

🌻 நன்றியுரை🌻
🔖 சகோதரி: ஜுபைதா பேகம்
(8:06 PM - 8:08 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍 

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு   இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 தேநீர் & 🍛 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
17-12-2018
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்யவும்

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் 14/12/2018


QITC – நன்றி அறிவிப்பு

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 14/12/2018 அன்று

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

🌰 இம்முகாமில் 111 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

 எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰  இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝  குருதிக் கொடை  செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு,  செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட  அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA👆

இம் மகத்தான உயிர்காக்கும்  பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ ஏகனாகிய அல்லாஹ்விற்கு நன்றி கூறி  அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

  குறிப்பு👇

இரத்த தான  முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின்  அல்லாஹ்விற்காக மனம் பொருந்தி பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
6631 6247, 55532718,  66579598,  44315863

தேதி: 16-12-2018


புதன், 24 அக்டோபர், 2018

QITC யின் திருக்குர்ஆன் மண்டல மாநாடு 26-10-2018


QITC- யின் திருக்குர்ஆன் மண்டல மாநாடு  

இன்ஷா அல்லாஹ்! 

🅾 நாள்:   வெள்ளிக்கிழமை  26/10/2018

🅾 நேரம்: மாலை 3:45 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: லக்தாவில் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூலில்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 

இன்ஷா அல்லாஹ்!

QITC-  யின் திருக்குர்ஆன் மாநாடு – 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று லக்தாவில் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அவைகள் 👇

🏮 சிறுவர் சிறுமியர்கள்_ பல்சுவை நிகழ்ச்சி

🏮 திருக்குர்ஆன் கேள்வி பதில் நிகழ்ச்சி

🏮 மண்டல பேச்சாளர்களின் சிற்றுரைகள் 

🏮 மாநில பேச்சாளரின் சிறப்புரை

இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

✍ அனைத்து சகோதர  சகோதரிகளும்

தங்கள் குடும்பத்தினரையும்  தங்களுக்கு தெரிந்தவர்களையும் 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக 

📌 ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

(திருக்குர்ஆன்  2:2)

▪▪▪▪▪▪▪▪▪▪▪
 குறிப்பு:👇

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 சிற்றுண்டி & இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

⏰ உரிய நேரத்திற்க்கு முன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைக்கவும்.

⬛⬛⬛⬛❇❇❇⬛⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம் 
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863

24/10/2018
⬛⬛⬛⬛❇❇❇⬛⬛⬛⬛


திங்கள், 15 அக்டோபர், 2018

QITC- யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 18/10/2018


QITC -அறிவிப்பு 👇
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
QITC- யின்

🔰 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 🔰

- கத்தர் மண்டலம்
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

🅾 நாள்: வியாழக்கிழமை  18/10/2018

🅾 நேரம்: சரியாக இரவு 8:30 மணி முதல் இரவு 9:55 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: QITC-  மர்கஸ்- துமாமா பகுதி

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

18-10-2018 வியாழக்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

📜 தலைமை சகோ தஸ்தகீர் (மண்டலத் தலைவர்)

📣 சிறப்புரை 📣

🔊 சகோதரர்: E. முஹம்மத்
(மாநில பொதுச் செயலாளர்- TNTJ)
📋 தலைப்பு: செயல்களை பாழாக்கி விடாதீர்கள்

🔊 சகோதரர்: M.I சுலைமான்
(மாநிலப் பேச்சாளர்- TNTJ)
📜 தலைப்பு: இறுதி மூச்சு இஸ்லாத்தில்

அனைத்து சகோதர  சகோதரிகளும்

தங்களுக்குத் தெரிந்த சகோதர சகோதரிகளை

மார்க்கத்தை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

📌 வியாழக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.

📌 வெள்ளிக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.

⬛⬛⬛🛄🛄🛄🛄⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
55532718, 66579598, 44315863
தேதி: 14-10-2018
⬛⬛⬛🛄🛄🛄🛄⬛⬛⬛

செவ்வாய், 5 ஜூன், 2018

QITC யின் பிறமத சகோதர சகோதரிகளுக்கான சமூக நல்லிணக்க சிறப்பு சந்திப்பு & கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி - 2018


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

இன்ஷா அல்லாஹ்!


நாள்: 08-06-2017 வெள்ளிக் கிழமை

✍ நேரம்: மாலை 4:00 மணி முதல்

✍ இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் 08-6-2018 வெள்ளிக் கிழமை அன்று QITC மர்கஸில் மாலை 4:00PM முதல் 6:30 pm வரை நமது தொப்புள் கொடி உறவுகளான பிறமத சகோதர சகோதரிகளுக்கான சமூக நல்லிணக்க சிறப்பு சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தமக்கு தெரிந்த பிறமத சகோதர சகோதரிகளை அழைத்து வந்து இச்சிறப்பு மிகு சந்திப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


📣 சிறப்புரை📣

📘 சகோதரர்: E. முஹம்மத்

(மாநில செயலாளர்-TNTJ)

📗 சகோதரர்: M.S. சுலைமான்

(தனிக்கைக் குழு தலைவர்-TNTJ)


நிகழ்ச்சி நிரல்👇

📕 4:00pm முதல் 4:30pm வரை :

அழகிய சந்திப்பு

📕 4:30 முதல் 5:00 வரை :

கட்டுரைப் போட்டிக்கான பரிசு வழங்குதல்🎁🎁🎁

📕 5:00 முதல் 6:00 வரை :

சிறப்புரை

▫▫▫▫▫▫▫▫▫▫

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫

குறிப்பு👇

📍 இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

📍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

📍 வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 55856697, 77210605

⬛⬛⬛📙📙📙📙📙⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்

04-06-2018

⬛⬛⬛📙📙📙📙📙⬛⬛⬛

QITC யின் ரமலான் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி & சிறுவர் சிறுமியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி - 2018


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

இன்ஷா அல்லாஹ்!


நாள்: 07-06-2017 வியாழக் கிழமை இரவு

✍ நேரம்: இரவு 9:00pm to 1:30am மணி வரை

✍ இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் 07-6-2018 வியாழன் அன்று QITC மர்கஸில் இரவு 9:00PM முதல் 1:30am வரை ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்👇

👉 9:00pm முதல் 9:45pm வரை :

இஷா + 4 ரக்ஆத்துகள் தொழுவிக்கப்படும்.📣 சிறப்புரை📣

9:45முதல் 10:15 வரை :

📣 சகோ முஹம்மத் இஸ்மாயில் M.I.Sc

(மண்டலப் பேச்சாளர்)

தலைப்பு: அறிந்து கொள் உன் எதிரியை


📗 10:15 முதல் 10 :45 வரை :

அறிவுப் போட்டிக்கான பரிசு வழங்குதல்🏆🏆🏆


10:45 முதல் 11:15 வரை :

📣 சகோ E. முஹம்மத்

(மாநில செயலாளர்-TNTJ)

தலைப்பு: மறுமையை மறந்த மனிதன்


11:15pm முதல் 12:15 am வரை :

📣 M.S சுலைமான்

(தலைவர்- தனிக்கை குழு-TNTJ )

தலைப்பு: இஸ்லாமிய இல்லம்👉 12:15 முதல் 12:35 வரை :

இடைவேளை (ஒளூ மற்றும் இயற்கை தேவைகள்)


👉 12:35 முதல் 1:30 வரை :

4ரக்ஆத் + வித்ர் தொழுவிக்கப்படும் + பிரார்த்தனை


👉 1:30 முதல்

ஸஹர் உணவு.


புனித மிகு ரமலான் மாதத்தில் சிறப்புரை, அறிவுப் போட்டி பரிசளிப்பு & இரவுத் தொழுகையில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக

Jazakallahu Khaira👍


குறிப்பு👇

📍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

📍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

📍 சிறுவர்கள் அறிவுப் போட்டிக்கான பரிசுகள் 07-06-2018 அன்று வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்திற்க்கு முன் அனைவரும் மர்கஸ் வந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்

⬛⬛⬛📗📗📗📗📗⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்

05-06-2018

⬛⬛⬛📗📗📗📗📗⬛⬛⬛

செவ்வாய், 8 மே, 2018

QITC யின் 29 வது மாபெரும் இரத்த தான முகாம் - 11 மே 2018


QITC யின் 29 வது மாபெரும் இரத்த தான முகாம்

(இது ஓர் மனிதநேய முகாம்......)

நாள்: வெள்ளிக்கிழமை 11/05/2018

நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்

இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்ய வரும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 11/05/2018 அன்று கத்தர் மண்டல "QITC-யின் 29-வது மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஒரு பஸ்ஸில் உள்ள 4 பெட்கள் மற்றும் மர்கஸின் உள் அரங்கில் 5 பெட்கள் கொண்ட வசதிகளுடன் ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.QITC - 29 TH MEGA BLOOD DONATION CAMPAIGN

This is a humanitarian camp......

Date: 11/05/2018

Timing: 8:00 am to 4:00 pm for Registration

Venue: QITC- MARKAS,THUMAMA (Behind Ansar Gallery)


Dear Brothers and Sisters,

Peace be up on you.

You are Cordially Invited to attend our Life Saving Program "QITC-29Th Mega Blood Donation Campaign".

Give blood Save Lifes.குறிப்பு: 👇

Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 5 படுக்கை_ வசதி கொண்ட பெட்கள்🛏 மர்கஸ் உள்ளரங்கிலும் 4 படுக்கை_ வசதி கொண்ட பஸ் 🚑 மர்கஸிற்கு முன்புமாக மொத்தம் 9 பெட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 5585 6697, 66205277

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location: 25.241697,51.564800

https://goo.gl/99yyFyQITC மர்கசில் இரத்த தானம் செவ்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள் 👇

📌 QID CARD, LICENSE, HEALTH CARD அல்லது ID NO இருக்க வேண்டும்

📌 (காலாவதி ஆகி இருந்தால் பிரச்சினை இல்லை)

📌 இலங்கைக்கு சென்று வந்தவர்களுக்கு எந்த கால நிபந்தனையும் இல்லை

📌 இந்தியா, நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன், பங்களாதேஷ் பேன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கத்தரில் ENTRY ஆனது முதல் 6 மாதங்கள் கழிந்து இருக்க வேண்டும்

📌 குறைந்தது 6 மணிநேரமாவது தூங்கி இருக்க வேண்டும்

📌 இரவு வேலை செய்தவர்களுக்கு இரத்தம் எடுக்கப் படாது

📌 குறைந்தது 50 KG இருத்தல் வேண்டும், 50 KG குறைவான எடை உள்ளவர்களுக்கு இரத்தம் எடுக்கப் படமாட்டது

📌 ஏற்கனவே இரத்தம் கொடுத்தவர்கள் இரத்தம் கொடுத்த நாளிலிருந்து இரண்டு மாதம் கழித்தருந்தால் மறுபடியும் இரத்தம் கொடுக்கலாம்

* Rare அரிதான இரத்த வகைகளும் எடுக்கப்படாது


இப்படிக்கு,

QITC- நிர்வாகம்

தொடர்புக்கு: 6631 6247, 55532718, 66579598, 44315863

தேதி: 06-05-2018

➡ இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும் ➡


செவ்வாய், 17 ஏப்ரல், 2018

முஸ்லிமல்லாதவர்கள் குறித்து திருக்குர்ஆன்!


பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய இஸ்லாம் கட்டளையிட்டதாகவும் முஸ்லிமல்லாதவர்களில் சிலர் தவறாக நம்புகிறார்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கருதுவது போல் திருக்குர்ஆன் கூறுகிறதா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

திருக்குர்ஆனின் சில வசனங்களில் முஸ்லிமல்லாதவர்களை உற்ற நண்பர்களாக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இது யாரைக் குறித்து எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் திருக்குர்ஆனிலேயே உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து இஸ்லாம் என்ற கொள்கையைச் சொன்ன காரணத்தால் மக்காவில் இருந்து விரட்டப்பட்டார்கள். இதனால் மதீனா எனும் நகருக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள். அங்குள்ள மக்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்று முஸ்லிம்களாக ஆனதால் அவர்களே ஆட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பகுதியைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிமல்லாதவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

ஒரு சாரார் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி போருக்கு வந்து கொண்டு இருந்தவர்கள்.

இன்னொரு சாரார் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் இஸ்லாமிய நாடாகிய மதீனா மீது தாக்குதல் ஏதும் நடத்தாமல் அவர் மார்க்கம் அவருக்கு நமது மார்க்கம் நமக்கு என்று வாழ்ந்தவர்கள்.

உற்ற நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்ற கட்டளை முதல் சாராரைப் பற்றி சொல்லப்பட்டதாகும். உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும் தன்னை அழிக்க வரும் எதிரிகளுடன் நட்பு பாராட்ட மாட்டார்கள். இது தான் இயற்கை நியதியாகும்.

இந்த முதல் சாரார் குறித்துத் தான் மேற்கண்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இது இஸ்லாத்துக்கு நற்பெயர் கிடைக்க நாம் சுயமாக அளிக்கும் விளக்கம் அல்ல. திருக்குர்ஆனே இதைத் தெளிவாகக் கூறுகிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 60:8,9

ஒட்டு மொத்தமாக முஸ்லிம் அல்லாதவர்களைப் பகைக்குமாறு இஸ்லாம் கூறவில்லை என்பதற்கும், அவர்களுக்கு நீதி செலுத்த வேண்டும்; உதவிகள் செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இவ்வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றதா?

முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு குர்ஆன் கூறுகிறது எனவும் வாதிட்டு சில வசனங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

உதாரணமாக

சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

திருக்குர்ஆன் 2:191

முஸ்லிமல்லாதவர்களைச் சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுவதாகச் சொல்லி தவறான பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல்லில் அவர்கள் என்பது யாரைக் குறிக்கிறது என்பதை முன் வசனத்தில் காணலாம். இவர்கள் எடுத்துக் காட்டும் வசனம் இரண்டாம் அத்தியாயம் 191 வது வசனம். ஆனால் 190 வனத்தைப் பார்த்தால் இது யாரைக் குறித்து சொல்லப்பட்டது என்பது விளங்கும்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 2:190

முஸ்லிம்கள் அமைதியாக இருக்கும் போது எதிரி நாட்டவர் படை திரட்டி வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள் என்று இவ்வசனம் கூறி விட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன? போருக்கு வரும் எதிரி நாட்டவரைத் தானே குறிக்கும்? முஸ்லிமல்லாதவரைக் கொல்லுங்கள் என்ற பொருள் இதில் உண்டா என்று நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும். அப்போது கூட வரம்பு மீறாதீர்கள் என்ற எச்சரிக்கையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளவும்.

மேலும் முஸ்லிமல்லாத மக்கள் நபிகள் நாயகம் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்டார்களா என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இணை கற்பிப்போரில் (முஸ்லிமல்லாதவர்களில்) யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 9:6

சொந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டு முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு உடனே அடைக்கலம் வழங்கி அவருக்கு பாதுகாப்பான இடம் அமையும் வரை அவரைப் பாதுகாக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெரும் எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள்.

(பார்க்க : புகாரீ 1356)

ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகத்திடம் மனிதநேயம் மிகைத்திருந்தது.

இதனால்தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர்.

பார்க்க : புகாரீ 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386, 2916)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர். அப்படி இருந்தும் அவர்களிடம் நபிகள் நாயகம் அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு பொருளாதாரச் செழிப்பை பெற்று இருந்தனர்.

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரீ 2617

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்‘ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.

நூல் : புகாரீ 1313, 1311

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளனர்.

(பார்க்க : புகாரீ 2412, 2417)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாத மக்கள் எந்த அளவு கண்ணியத்துடன் நடத்தப்பட்டனர் என்பதற்கு இவை போதிய சான்றுகளாகும்.

பிறமதக் கடவுள்களை ஏசலாமா?

அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.

ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன் : 6:108

முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பலசமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.

பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கலாமா? 

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை திருக்குர்ஆன் கூறுகிறது.

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான்.

இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது எதிர்மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துகளை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும்போது அது போன்ற எதிர்த்தாக்குதலில் இறங்குகிறார்கள்.

எனவே, பிறமத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நாமே நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.

‘உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளிவாசல்கள் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்‘ என்ற அறிவுபூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.

கோவில்களோ, சர்ச்களோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாதபோதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

புதன், 11 ஏப்ரல், 2018

QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018


QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018

நாள்: வெள்ளிக்கிழமை  20/04/2018

நேரம்: சரியாக மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இடம்: QITC  மர்கஸ் - துமாமா பகுதி

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

20/04/2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.

📣 பதில் அளிப்பவர்: 📣

சகோதரர்: R. அப்துல் கரீம் MISc

(மாநில துணைத் தலைவர்-TNTJ)

அனைத்து சகோதர  சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத  சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚎 வாகனம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 6620 5277, 7721 0605

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 03-04-2018 முதல் பெற்றுக் கொள்ளவும்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 6657 9598, 4431 5863
02/04/2018

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

QITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018QITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018

நாள்: 19-04-2018 வியாழக் கிழமை

நேரம்: இரவு 8:40 முதல்- 10:00 வரை

இடம்: QITC- மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு

இன் ஷா அல்லாஹ்!

19-04-2018 வியாழக் கிழமை இரவு 8:40 -10:00 மணிவரை மண்டல சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிறப்புரை:

சகோ அப்துல் கரீம் M.I.Sc
(TNTJ மாநில துணைத் தலைவர்)

📜 தலைப்பு: உலகளாவிய முஸ்லிம்களும் சந்திக்கும் பிரச்சினைகளும்

இதில் அனைத்து சகோதர சகோதரிகளும், தங்களின் குடும்பத்தார் மற்றும் நன்பர்களுடன்  கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டக் கொள்கிறோம்.

குறிப்பு:

📌 பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
15-04-2018

தொடர்புக்கு:
44315863, 66316247, 55532718, 66579598

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

TNTJ கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு கூட்டம் - 13/04/2018


ஏக இறைவனின் திருப்பெயரால்...

TNTJ கத்தர் மண்டலத்தின் 
15 வது பொதுக் குழு கூட்டம் - 2018

13/04/2018

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே

பொதுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 👇

📌 முன்னால் இன்னால் நிர்வாகிகள்
📌 மண்டல பேச்சாளர்கள்
📌 கிளை நிர்வாகிகள்
📌 QITC உறுப்பினர்கள்


இன் ஷா அல்லாஹ் !!

🗓 நாள்: வெள்ளிக்கிழமை  13/04/2018

⏰ நேரம்: மதிய உணவுடன் 1:00 PM முதல்

🕌  இடம்: QITC மர்கஸ் - துமாமா 

2018-ம்  ✍ஆண்டிற்கான கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு வெள்ளிக்கிழமை 13-04-2018 அன்று மதிய உணவுடன் 1:00 மணி முதல்  நடைபெற உள்ளது.

இப்பொதுக்குழுவில்  SMS மூலம் அழைப்பு உள்ள அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுமாறு  அன்போடு அழைக்கின்றோம்.

Location Map: goo.gl/99yyFy


❇ சிறப்பு அழைப்பாளர்❇

சகோ அப்துல் கரீம் M.I.Sc 
(மாநில துணைத் தலைவர் - TNTJ)


📌 குறிப்பு:

📚 பொதுக் குழுவிற்கு வருகைதரும் சகோதரர்கள் நுழைவாயிலில் தங்களுக்கு வந்த SMS மற்றும் QITC ID யை காண்பித்து பொதுக்குழு அனுமதி பெறவும்

💵 நுழைவுக் கட்டணம்: 10 QR

🚫 SMS  மூலம் அழைப்பு இல்லாதவர்கள் பொதுக் குழுவில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் 

🚫 SMS மூலம் அழைப்பு வராத சகோதரர்கள் மண்டல செயலாளரை தொடர்பு கொள்ளவும்-66579598

🍱  மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(நேரம்: மதியம்  12:15pm -1:15 pm)

🚶🏻 வருகைக்கான கடைசி நேரம் 1:30 PM,  தாமதமாக வருபவர்கள் பொதுக் குழு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

🤝 “உங்கள் மர்கஸ் சந்தாக்களை பாக்கியில்லாமல் செலுத்தி மண்டல நிர்வாகத்திற்கு  உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”


அன்புடன்

மண்டல நிர்வாகம்
02-04-2018
📞 44315863, 66316247,55532718, 66579598

QITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 12/04/2018


QITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

இடம்: QITC மர்கஸ்

நாள்: வியாழக்கிழமை 12/04/2018

நேரம்: இரவு 8:30 மணி முதல் இரவு 9:50 மணிவரை

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்- கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 ✍ பதில் அளிப்பவர்:👇

சிறப்பு அழைப்பாளர்

📣 சகோதரர்: அப்துல் கரீம் M.I.Sc
 (மாநில துணைத் தலைவர்-TNTJ)

அனைத்து சகோதர சகோதரிகளும் மார்க்க சம்மந்தமான சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ள தங்கள் குடும்பத்தினரையும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:👇

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு,

QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863

10/04/2018

QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018


QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

📌 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்

📌 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

📌 அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது

📌 தலைப்புகள் 👇

1) கல்வியின் அவசியம்
2) இஸ்லாமிய இல்லம்
3) இறைவனின் அருட்கொடை

🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

மேலதிக விவரங்களுக்கு: 50111203

அன்புடன்

மண்டல நிர்வாகம்
08-04-2018
📞 44315863, 66316247, 55532718, 66579598

QITC யின் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப் போட்டி - 2018

ஏக இறைவனின் திருப்பெயரால்...QITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018

(இது முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான போட்டி)

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே...

✍ QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் எங்கள் தொப்புள்கொடி உறவாகிய உங்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.

✍ அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

✍ அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடயும் 👇

1. முதல் பரிசு - I Lite Note Book

2. இரண்டாம் பரிசு - Micro Oven

3. மூன்றாம் பரிசு - Food Processor

🗓 கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03-05-2018

மேலதிக விவரங்களுக்கு: 50111203

அன்புடன்

மண்டல நிர்வாகம்
05-04-2018
📞 44315863, 66316247, 55532718, 66579598

➡ இதை அனைவருக்கும் Forward செய்யவும் ➡

QITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி - 2018ஏக இறைவனின் திருப்பெயரால்...

QITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2018

🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 08/04/2018

🕌  அனுப்ப வேண்டிய முகவரி: QITC மர்கஸ்- துமாமா அல்லது qitcdoha@gmail.com

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே

🔰 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.

🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

🔰 அதற்கான படிவத்தை பதிந்திருக்கிறோம். அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 08-04-2018 இரவுக்குள் நமது மர்கஸில் நேரடியாகவோ அல்லது qitcdoha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பப் படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது👇

📌 அறிவுப்போட்டிக்கான விண்ணப்ப படிவம் (Download PDF copy)

📌 பேச்சுப் போட்டிக்கான விண்ணப்ப படிவம் (Download PDF copy)

போட்டிகள்: 👇

📘 ஹதீஸ் மற்றும் துஆ மனனப்போட்டி

📕 பேச்சுப் போட்டி

குறிப்பு:👇

1) பேச்சுப்போட்டி, ஹதீஸ்கள் மற்றும் துஆக்களுக்கான குறிப்புகள் மர்கஸில் வழங்கப்படும். (நமது இணையதளத்திலும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.)

2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.

3) தகுதிச் சுற்றுப்போட்டிகள் 10-05-2018 அன்று நடைபெறும்.

4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.

5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது.

📍 பேச்சுப் போட்டிக்கான பயிற்ச்சி வகுப்பு 27-04-2018 & 04-05-2018 ஆகிய இரண்டு தேதிகளில் மாலை 4:00 - 8:00 வரை நடைபெறும்

அன்புடன்

மண்டல நிர்வாகம்
08-04-2018
📞 44315863, 66316247,55532718, 66579598ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்


இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்து செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பென்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.

பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் யாரும் விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.

அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.

ஆண்களும் பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.

திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.

விவாகரத்து செய்ய முடியாது என்று வலியுறுத்தினால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.

கள்ள உறவு வேண்டாம்; முறையாக இன்னொருத்தியை திருமணம் செய்து வாழலாம் என்று அவன் நினைத்தால் முதல் மனைவி அதற்குத் தடையாக நிற்கிறாள் என்பதால் மனைவியை தந்திரமான வழிகளில் கொலை செய்து விடுகிறான். இப்படி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கணவனால் கொல்லப்படுகிறார்கள். அல்லது கணவன் இருந்தும் வாழாவெட்டியாக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இதற்கான ஒரே தீர்வு எளிதான விவாகரத்து தான்.

இது ஆணுக்கு மட்டுமல்ல; மனைவிக்கு கணவனைப் பிடிக்காமல் போனால் அவள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடிப் போகிறாள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் காட்டுகிறாள்.

இது போன்ற சம்பவங்களும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கில் நடக்கின்றன.

மிகப் பெரிய தீமைகள் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் விவாகரத்து சட்டம் உள்ளது. இதனால் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க சிறிய பாதிப்புகளைச் சகித்துக் கொள்வது தான் அறிவுடமை.

இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன. விவாகரத்துச் சட்டம் இல்லாத ஒரு நாடு கூட உலகில் இல்லை.

தலாக் கூறுவதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறி முஸ்லிம் கணவனைச் சிறையில் தள்ளும் சட்டம் இயற்றுவோர், அதை ஆதரிப்போர் தமது மதத்துப் பெண்கள் விவாகரத்தினால் பாதிக்கப்படுவது பற்றி கவலைப்படவில்லை. இந்துப் பெண்கள் இந்துக் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டும், விவாகரத்து செய்யாமல் கைவிடப்பட்டும் அல்லல் படுகின்றனர். அவர்களின் கணவன்மார்களைச் சிறையில் தள்ளும் சட்டம் ஏன் இல்லை?

இது நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டியதாகும்.


தலாக், விவாகரத்து வேறுபாடு

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்துக்கும், முஸ்லிமல்லாத மக்களின் விவாகரத்துக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றங்கள் பல அமர்வுகள் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும்.

இப்படி விவாகரத்து நடந்து விட்டால் தம்பதியர் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் தலாக் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜமாஅத்தார் முன்னிலையில் விசாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விவாகரத்து வழக்கை விசாரிக்கும் விசாரிக்கும் நீதிபதிகள் சட்ட வாசகங்களை மட்டும் தான் கவனிப்பார்கள். வழக்கு தொடுத்த தம்பதிகளின் குடும்பம் பற்றியோ இன்ன பிற சூழல் பற்றியோ அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தார்கள் அந்த தம்பதிகளுக்கு உறவினராக இருப்பார்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் நீதிமன்றங்களை விட உள்ளூர் ஜமாஅத்தார்களுக்குத் தான் அதிக அக்கறையும், இந்த விஷயத்தில் அதிக ஞானமும் இருக்கும்.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


தலாக்கின் விதிமுறைகள்

ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.

பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.

இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.

இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.

இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள்.

தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்து திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:34

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:35

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.


மூன்று வாய்ப்புகள்:

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும்.

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.

இது குறித்து திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!

228. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:228

229. இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:229

230. (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

231. பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:231

232. பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:233

முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.

இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.

தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் வாய்ப்பைப் பயன் படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்படி தலாக் கூறிய பின் உடனே மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ளமாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

1. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.

முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர் ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.

உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்து சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாக ரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.

எஸ் எம் எஸ் மூலம் தபால் மூலம், போன் மூலம் வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்து செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் சொல்ல வேண்டும்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

2. அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைபிடித்துள்ளானா என்பதையெல்லாம் அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.

எல்லா முயற்சிகளையும் கடைபிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும்போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.

அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.

எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாக ரத்து செய்கின்றனர். அந்த சட்டங்களை விட பெண்களுக்கு அதிக நன்மை இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.

இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


முத்தலாக் – ஒரு விளக்கம்:

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.

தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.

ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்;

உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். அல்லது மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.

நீக்கி விட்டு பின்னர் சேர்த்து பின்னர் நீக்கி பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.

ஒரு தலாக் சொன்னவுடன் அவள் மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),   நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691

மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பெண்களின் விவாகரத்து உரிமை:-

ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),   நூல்: புகாரி 5273, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

உலகில் உள்ள எந்த விவாகரத்து சட்டங்களையும் விட பெண்களுக்கு அதிக நன்மை பயக்கும் இஸ்லாமிய தலாக் சட்டத்தை உலக நாடுகள் தமது விவாகரத்து சட்டமாக ஆக்கலாம் என்ற அளவுக்கு சிறந்து விளங்குகிறது.

காழ்ப்புணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற விவாகரத்துச் சட்டங்களுடன் இஸ்லாத்தின் தலாக் சட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் யாராலும் தலாக் சட்டத்தைக் குறை கூற முடியாது.