வியாழன், 31 ஜனவரி, 2013

வேலை வாய்ப்பு செய்திகள் - 30-01-2013


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

நமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி ஹிண்டு நாளிதழ்கள் (30-01-2013) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Click on image to view bigger size.மேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

திங்கள், 28 ஜனவரி, 2013

"விஸ்வரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல அமைப்பாகிய கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

27-01-2013 ஞாயிறு காலை சுமார் 10:00 மணி அளவில், கத்தர் மண்டல இணைச்செயலாளர் சென்னை சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில், ஆத்தூர் மவ்லவி, அப்துஸ்ஸமத் மதனீ, பண்டாரவாடை சகோதரர். சபீர் அஹ்மத், சமயபுரம் சகோதரர். காதர் மீரான் ஆகியோர் அடங்கிய குழு, கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத் துறை (ஃபனார்) யின் இயக்குநர் - கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஃபஹத் பின் உக்ளா அல்-ருவைலி அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு உரிய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர். ஃபஹத் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு 'இந்த தகவலை நீங்கள் மட்டும் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கூறி, நமக்காக பிரார்த்தனையும்' செய்தார். சந்திப்பின் போது ஃபனாரின் மேற்பார்வையாளர் - ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள் உடனிருந்தார்கள்.

பிறகு, இக்குழு, காலை சுமார் 11:30 மணி அளவில், கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சகம் சென்று, அங்கு ஊடகக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக்கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு 'கத்தர் அரசு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தை' தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர்.ஜாபிர் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எதிர்காலத்தில் இதைப்போல் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் உடன் கொண்டு வாருங்கள் - ஆவண செய்கிறேன் என்று கூறி நமக்காக பிரார்த்தனையும்' செய்தார்.

அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!


25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 25-01-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் 'இஸ்லாமிய புணரமைப்பில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'உலகாசையை உதறித் தள்ளுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சென்ற மாத தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த சகோதரிகளுக்கு 'நபிமொழி தமிழாக்கம்' புத்தகம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


25-01-2013 கத்தர் மண்டல "த'அவாக்குழு கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , "த'அவாக்குழு கூட்டம்", 25-01-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் த'அவா குழு பொறுப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக "ஃபிப்ரவரி -2013 மாத வியாழன்&வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல்" வெளியிடப்பட்டது. 

பின்பு, 'கத்தர் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் நம் முயற்சியால் தடை செய்யப்பட்டது, அல் -நஜாஹ் கிளை சொற்பொழிவு முன்னேற்றம், த'அவாவை விரிவுபடுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு, நேரம் தவறாமை, பேசும் தலைப்புகளை தேர்ந்தெடுத்தல், ஆன்லைன் நிகழ்ச்சி, இருமாதத்திற்கொருமுறை இனிய மார்க்கம்' போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு,முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!
25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி


அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:40 மணி முதல் 6:40 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்து ஆறாவது  வகுப்பு நடைபெற்றது.
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் 'வினைச்சொற்களின் வடிவங்களை கேள்வி-பதில் முறையில்" நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.

25-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 25-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா  பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ  அவர்கள் உரையாற்றினார்கள்.

2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 

3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .முஐதர் பகுதியில் – மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.

6 . அல் ஃஹீஸா பகுதியில் -  சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

7.சலாத்தா ஜதீத் பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

8.ம'அமூரா பகுதியில் – சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில்-மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் -  சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 26 ஜனவரி, 2013

24-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 24-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ்வகுப்பில்,மௌலவி,லாயிக் அவர்கள் "தொழுகை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.24-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "செய்த வினையை சிந்திப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,லாயிக் அவர்கள் "மறுமையில் படைப்பாளனும்-படைப்பினங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் "மவ்லீதை மவ்தாக்குவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து, தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டம் - கரம்பக்காடு என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.சந்திர போஸ் அவர்களுக்கு, இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக "திருக்குர்'ஆன் தமிழாக்கம், திருமறையின் தோற்றுவாய், திருக்குர்'ஆனின் அறிவியல் சான்றுகள், அர்த்தமுள்ள மார்க்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளராகுமாகிய சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மண்டலம் சார்பாக இலவசமாக வழங்கி இஸ்லாத்தைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினார்கள் 

பின்பு, மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து ,தொடர்ந்து இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.
24-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் 'மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் 'மார்க்கத்தின் பார்வையில் மரண தண்டனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

புதிதாக இன்று வந்திருந்த 10 சகோதரர்களுக்கு "ஜமா'அத் காலண்டர்,இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம், வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? என்ற புத்தகம்,ஏகத்துவம் மாத இதழ்,கொள்கை விளக்கம் என்ற சி.டி ,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டி.வீ.டி,ஏழு தலைப்புகளில் உரைகள் அடங்கிய டி.வீ.டி" ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.