வெள்ளி, 31 ஜூலை, 2009

இலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC

இன்று இரவு வியாழக்கிழமை நடைப்பெற்ற வாராந்திர பயானில் மொளலவி லாபிர் அவர்கள் " பாராத் இரவும் மத்ஹப்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கத்தரில் முக்கிய தொழில் நகரமான ராஸ்லாபான் என்ற இடத்தில பணிபுரியும் திருவாரூரை சேர்ந்த கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.


அவருக்கு,மௌலவி முஹம்மது அலி அவர்கள் , இஸ்லாத்தின் கடவுட் கொள்கைகளை விளக்கி கூறி, கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். பயானில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் " அச் சகோதரர் " தான் ஆறு வருடங்களாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டும் பல்வேறு பொது பயான்களில் கலந்து கொண்டு உரைகளை செவிமடுதிருப்பதாகவும் ," குறிப்பாக பண்டாரவடையில் வரதட்சணை ஒழிப்பு உரைகளை கேட்டதுமுதல் தனது உள்ளம் மாற்றம் கொண்டதையும் கூறினார். இன்ஷா அல்லாஹ் தன்னுடைய குடும்பத்தார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி இத்தூய கொள்கையில் இணைக்க செய்வேன் என்று கூறினார் .
இறுதியாக இலங்கை பேருவளையில் தரீகா கும்பல் தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல சகோதர்களை கண்மூடித்தனமாக தாக்கி , இரண்டு நபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து ஷகீத் ஆக்கபட்டிருகிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் அல்லாஹ்வின் பெயரல்லாமல் வேறு ஒன்றினை அழைக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டிருக்க , இணை கற்பிக்கும் காரியங்களில் மூழ்கிவிட்ட கும்பல் சத்தியத்தை எடுத்துரைத்த சகோதரர்களின் மேல் கொலை வெறி தாக்குதலை நடத்திஇருக்கின்றது. பள்ளிவாயில்குள்ளே இஸ்லாத்தின் எதிரி கூட செய்ய துணியாத இத்தகைய வெறி செயலை முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடத்திக்காண்பித்து இருகிறார்கள். இத்தாக்குதலை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வன்மையாக கண்டிப்பதோடு , நிதானத்தோடும் விவேகத்தோடும் வருங் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நெஞ்சுரத்தோடு தவாவின் வேகத்தை முடிக்கிவிட வேண்டும் என்று மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அகமது கூறினார் .

---------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"

அல்குரான் 3:110

பராஅத்தும் மத்ஹபுகளும்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பதுகிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்

” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3: 110

செவ்வாய், 28 ஜூலை, 2009

ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்

கடந்த வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வருகை பதிவு:
வருகை தந்த அணைத்து செயல் வீரர்களின் பெயர் , கிளை தொடர்பு எண் ஆகியவைகளை துணை செயலாளர்கள் சகோ ஷாஜகான் & சகோ ஜியாவுதீன் பதிவு செய்தார்கள்.
வரவேற்புரை
செயலாளர் மசூத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு பயான்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் "ஏகத்துவாதிகளிடம் இருக்கவேண்டிய இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தலைமை
கத்தர் இந்திய மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார்கள்.
மூத்த தலைவர் உரை
பின்னர் மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்களின் சுருக்க உரையின் வந்திருந்த செயல் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் " நாமெல்லாம் களத்தில் நிக்கிற போராளிகள் " , நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றார் .
நிகழ்ச்சியின் அம்சங்கள்.
துணை செயலாளர் அப்துல் கபூர் அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் அம்சங்களை விளக்கினார் . குறிப்பாக எதிர் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " எப்படி அமைய வேண்டும் என்ற ஒழுங்குகளை எல்லாரும் எளிதாக புரியும் வண்ணம் கூறினார் . வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது . அவையாவன விளம்பர குழுவில் ,இக்குழுவில் 14 செயல் வீரர்கள் இடம்பெற்று இருக்கின்றனர் .வாகன குழுவில் , இக்குழுவில் 4 செயல் வீரர்களும் , உணவு ஏற்பாட்டு குழுவில் 4 பேரும் , ஒலி ஒளி அமைப்பு குழுவில் 6 பேரும் , ஊடகக்குழுவில் மூவரும் செயல் பட முன்வந்து இருக்கின்றார்கள்
இக்குழுக்களை முறையாக துணை பொருளாளர் சகோ பீர் முஹம்மது அவர்கள் பதிவு செய்து க்கொண்டார்கள்.

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் , கலந்து கொள்ளும் மாற்று மத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் மொழியாக்கத்தை அன்பளிப்பாக வழங்க அவையினர் பலர் ஆர்வமுடன் முன்வந்து பெயர் கொடுத்தனர். மாற்றுமத சகோதரர்கள் கேட்டுக்கும் தலைப்பில் புத்தகங்கள் வழங்கவும் ,DVD, CD க்கள் வழங்கவும் பல சகோதரர்கள் தங்களுடைய பங்களிப்பை பதிவு செய்தனர்.
நன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் நிறைவு பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் !
அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௰
----------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 ஜூலை, 2009

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல சவுதி அரசாங்கம் கெடுபிடி செய்துள்ளது என்று வெளிவந்த செய்தியை கத்தர் ஹஜ் கமிட்டி வன்மையாக மறுத்துள்ளது. இதனை கத்தர் ஹஜ் கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் கத்தர் நாளிதழில் தெரிவித்தார். மேலும் கத்தர் கமிட்டியின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் கூறினார். கத்தர் ஹஜ் கமிட்டியின் துணை மேலாளர் ஜாஸ்சிம் அல் குபெயசி கூறுகையில் " இது சம்பந்தமாக ஹஜ் உம்ரா டிராவல் ஏஜண்டுகளுக்கு கட்டளைகளையும் எதையும் பிறபிக்கபடவில்லை என்று கூறினார். ஆனால் சவுதி அரசு ஹஜ்ஜுக்கு வரும் பயணிகளிடம் இக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தாமும் உட்படுவோம் என்று கூறினார். இந்த ஆண்டு ஹஜ் உம்ரா ஏற்பாடுகளின் போது எதிர் கொள்ளவேண்டிய விசயங்களை , விரைவில் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் . இக்கமிட்டியில் கத்தர் செம்பிறை சங்கம் , உள்துறை அமைச்சகம் , அவ்கப் மற்றும் இஸ்லாமிய துறை அங்கம் வகிக்கும் என்று கூறினார் . இக்கிருமி கத்தெரிலிருந்து செல்லும் பயணிகளிடம் பரவாமல் தடுக்க எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். இக்கிருமி பரவாமல் தடுக்க , தகுந்த தற்காப்பு மூலமாக தான் வெல்ல முடியும்.அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதோ அல்லது அதே நேரத்தில் முழுமையாக அலட்சியம் செய்யவோ கூடாது. தொடக்கத்தில் நாம் எண்ணிய அளவிற்கு பீதியடை அவசியம் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உம்ரா செல்பவர்கள் குறைந்துவிட்டனவே என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார் அந்த அதிகாரி . வழக்கம் போல இந்த வருடமும் அதே அளவு எண்ணிக்கையில் பெயர் பதிவுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார். உண்மையில், இக்கிருமியால் பதிக்கப்பட்ட நாடுகளிருந்து புனித பயணிகள் ஒதுக்கீடு ( quota) குறைக்கப்பட்டுள்ளதால் , கத்தர் போன்ற அரபு நாடுகளின் ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல ஏஜண்டுகள் நம்பிக்கை தெரிவித்தனர். இக்க்காயச்ச்சல் ஏற்படுத்தியுள்ள பீதியால் ஓமான் , பஹ்ரைன் போன்ற நாடுகள் ஹஜ் செல்ல தடை விதித்துள்ள நிலையில் ,தொற்றும் அபாயம் உள்ளதால் ஹஜ் செய்ய தடை விதிப்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கிறது.

நன்றி : Gulf times 12july2009

------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:110

-------------------------------------------------------------------------------------

சனி, 11 ஜூலை, 2009

ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்


கடந்த 2008 டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தொடர் குண்டு மழை பொழிந்து எராளமான பொருள் நாசத்தையும் உயிர் சேதத்தையும் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்தது உலக உயிர் கொல்லியான இஸ்ரேல். பாலஸ்தீனியர்கள் வசமுள்ள காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1450 க்கும் மேல்பட்டோர் என்று காசாவில் நிலை கொண்டிருக்கும் உலக மனித உரிமை கழகம் தெரிவித்திருக்கிறது. 22 நாட்கள் நடைபெற்ற இஸ்ரேலின் இராணுவ வெறியாட்டத்தால் நூற்றுக்கும் மேல்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர் , குழந்தை அநாதைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பாதிகப்பட்டவர்களை பராமரிக்கவும் அவர்கள் வாழ்வில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவும் இஸ்லாம் காட்டிதந்த பெண்கள் மறுவாழ்வு திட்டத்தை கையில் எடுத்தது ஹமாஸ் போராளி இயக்கம். சென்ற வாரம் காசாவில் ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம் நடத்தி வைத்தது ஹமாஸ் இயக்கம். நூறு விதவைகளும் மணப்பெண் கோலம் பூண்டு தங்களுடைய இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். அந்த நூறு பெண்களில் பெரும்பான்மையினர் 25 வயது கடந்தவர்கள். சுற்றாரும் உறவினரும் சூழ கலந்து கொண்டு அவர்கள் பிள்ளைகளுடன் மனபந்தலில் காணப்பட்டனர். விதவைக்கு வாழ்வளிக்க முன் வந்த நூறு மாப்பிளைகளுக்கு 2800 டாலர்களை ஊக்கதொகையாக வழங்கியது ஹமாஸ்.

----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல் - குர்ஆன் 3:110
-------------------------------------------------------------------------------------------------