A1. தூங்கி எழுந்ததும் ஓதும் துஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
பொருள்:
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6314
A2. தொழுகை முடிந்ததும் ஓதும் துஆ
அஸ்தஃபிருல்லாஹ் , அஸ்தஃபிருல்லாஹ் ,அஸ்தஃபிருல்லாஹ்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்
பொருள்:
இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று கூறுவார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 1037
A3. சபையை முடிக்கும் போது ஓதும் துஆ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.
பொருள் :
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: திர்மிதீ 3355
B1.பாங்கு முடிந்தவுடன ஓத வேண்டிய துஆ
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
அல்லாஹும்ம ரப்ப(B] ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப[F]ளீல(த்)த வப்(B]அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் :
இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614
B2. இருப்பில் ஓத வேண்டியவை ஸலவாத்து
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
பொருள்:
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.
ஆதாரம்: புகாரி 3370
B3. நோயாளியை விசாரிக்கச் சென்றால் ஓதும் துஆ
அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.
பொருள் :
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5742
C1. வித்ரு குனூத் துஆ
அல்லாஹும்மஹ்தினி ஃபீமன் ஹதைத்த, வஆஃபீனி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனீ ஃபீமன் தவல்லைத்த, வபரிக்லீ ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ரமா களைத்த, ஃபஇன்னக்க தக்னீ வலா யுக்ளா அலைக்க, இன்னஹு லாயதில்லுமன் வாலைத்த தபாரக்த ரப்பனா வ தஆலைத்த.
பொருள்:
இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் பரகத் செய்வாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன், உன் மீது எதையும் விதிக்க முடியாது. நிச்சயமாக நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது, உன் மகத்துவம் மேலானது
ஆதாரம்: திர்மிதீ 426
C2. தொழுகையை துவக்கியதும் ஓத வேண்டிய துஆ
அல்லாஹும்ம பா(B]யித் பைனீ வபைன கதாயாய கமா பா(B]அத்த பை(B]னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி[B], அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு[B]ல் அப்[B]யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி[B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப[B]ரதி
பொருள் :
இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.
ஆதாரம்: புகாரி 744
C3. இருப்பில் ஓத வேண்டிய துஆ
பொருள் :
எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
D1. கப்ருகளை ஸியாரத் செய்யும் போது
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.
பொருள் :
இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.
ஆதாரம்: முஸ்லிம் 367
D2. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த
பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி 6309
D3. அனைத்து வகையான துன்பங்களின் போதும் ஓத வேண்டிய துஆ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் அளீம்.
பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: புகாரி 6345
E1. ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ (1)
அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி
பொருள் :
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
E2. ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ (2)
அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி அல்லாஹும்ம ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்
பொருள்:
இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2787