வியாழன், 28 ஜனவரி, 2021

TNTJ கத்தர் மண்டலம் நடத்திய 34-வது இரத்ததான முகாம் 22.01.2021

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) மற்றும் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் (HMC) இணைந்து, 72-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 22.01.2021 வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 34வது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 144 நபர்கள் கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு 99 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.

கொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இம்முகாமில் “கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சித்துளிகள்  

  மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெற்றது.

  வழமையாக மர்கஸில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி இம்முறை நேரடியாக HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.

  குருதிக் கொடையாளர்களின் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

*என்றும் சமுதாய மனிதநேயப் பணியில்...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
கத்தர் மண்டலம்
22.01.2021

*QATAR | QITC | TNTJ | BLOOD | CAMPAIGN | HMC | EMERGENCY | HUMANITIES | TAKE VACCINE | SAVE LIVES*

வியாழன், 21 ஜனவரி, 2021

QITC- யின் 34-வது மாபெரும் இரத்த தான முகாம் - 22 ஜனவரி 2021

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு QITC- யின்

34-வது மாபெரும் இரத்த தான முகாம்- 22-ஜனவரி-2021

(இது ஓர் மனிதநேய முகாம்......)

🎒 நாள்: வெள்ளிக்கிழமை  22/01/2021

🎒 நேரம்: நண்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.

🎒 இடம்: HMC இரத்த தான பிரிவு

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

 ✍  இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 22/01/2021 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டல "QITC-யின் 34-வது மாபெரும் இரத்த தான முகாம்" நண்பகல் 1:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

 🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒

குறிப்பு: 👇

🚌 வாகன வசதி: ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு: 7721 0605

🚺 பெண்களுக்கு தனியிட வசதி: செய்யப்பட்டுள்ளது

🌐 Facebook: 

https://www.facebook.com/183091025358360/posts/1455641951436588/

🌔 Location :

https://maps.app.goo.gl/Wt13Esto3XR314rt6

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம்

தொடர்புக்கு: 5011 1203, 6657 9598, 44315863

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

➡ இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்  ➡

-----------------------------------------------------------------------------------------------------------

QITC- Blood Donation Campaign -2021-01-22

Video Version: English

இரத்த தான முகாம்- 22-01-2021 மதியம் 1 மணிக்கு

வீடியோ ஆங்கிலத்தில்
-----------------------------------------------------------------------------------------------------------

QITC- மாபெரும் இரத்த தான முகாம் -2021-01-22

Video Version: Tamil

இரத்த தான முகாம்- 22-01-2021 மதியம் 1 மணிக்கு

வீடியோ தமிழ் மொழியில்
-----------------------------------------------------------------------------------------------------------

QITC- 34 वां विशाल रक्तदान शिविर -2021-01-22

Video Version: Hindi

இரத்த தான முகாம்- 22-01-2021 மதியம் 1 மணிக்கு

வீடியோ இந்தி மொழியில்
-----------------------------------------------------------------------------------------------------------

🟠 Video-01 👇

QITC - 34வது மாபெரும் இரத்த தான முகாம் அழைப்பு -22-01-2021

-----------------------------------------------------------------------------------------------------------
🔵 Video-02 👇

QITC - 34 वां विशाल रक्तदान शिविर Invitation-22-01-2021

-----------------------------------------------------------------------------------------------------------
🟣 Video-03 👇

QITC - 34th Mega Blood Donation Campaign-22-01-2021

-----------------------------------------------------------------------------------------------------------
🟢 Video-04 👇

QITC- 34 മത് മെഗാ രക്തദാന ക്യാമ്പ് 22-01-2021

Contact: 5011 1203, 66579598, 44315863