புதன், 30 செப்டம்பர், 2015

QITC மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழச்சி 01-10-2015


இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வியாழன் மாலை (01/10/2015) QITC மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" எனும் இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழச்சி நடைபெற உள்ளது.

உங்கள் கேள்விகளுக்கு தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள 
மவ்லவி.K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
பதிலளிக்கவிருக்கிறார்கள் .

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு :
# பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .
# முதலில் வருபவருக்கே முன்னுரிமை (first come first serve) என்ற அடிப்படையில் கேள்வி கேட்க அனுமதிக்கப்படும்.
# எண்கள் (டோக்கன்) வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் கேள்வி கேட்க அனுமதிக்கப்படும்.
# நேரத்தை கணக்கில் கொண்டு கேள்விகளின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படும்.
# இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கத்தரில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24-09-2015


QITC- கத்தர் மண்டலத்தின் நபிவழி பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி 24/09/2015 இன்று காலை 5:38 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது, இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஃபனார் (FANAR) உள்ளரங்கில் காலை 7:15 மணிக்கு மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

இதில் ஆரம்பமாக மௌலவி அப்துஸ்சமது மதனீ அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு பேச்சாளர் சகோதரர் K.M. அப்துந் நாஸிர் MISc அவர்கள் "ஷிர்க் ஓர் பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

புதன், 23 செப்டம்பர், 2015

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்



நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 5:15 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.



ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 7:15 மணிக்கு சூக் ஃபலாஹ் அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கத்தில்  ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

QITC யின் வியாழன் சிறப்பு நிகழ்ச்சி 17-09-2015



QITC மர்கஸில் 17-09-2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மவ்லவி: K. அப்துந் நாஸிர் MISc (மாநில பேச்சாளர் - TNTJ)
அவர்கள் "இஸ்லாம் கூறும் மானுடவியல்!" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஃபேஸ்புக் செய்தி: