வியாழன், 20 டிசம்பர், 2018

திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்



திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்
எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளை எடுத்துக் காட்டி, மக்களை அமல் செய்வதற்கு ஆர்வமூட்டும் விதமான செய்திகள் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன.

திருக்குர்ஆனை ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும் நன்மைகளை பார்ப்போம்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்

ஓதுபவருக்கு உவமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)

மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

பொறாமைப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர), நூல் : புகாரி (5025)

எழுத்துக்குப் பத்து நன்மை!
“அல்லாஹ்வின் வேதத்திருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அஃப், லாம், மீம் – என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி

சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும்

“அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்

இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா 28/12/2018


திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா

QITC- யின் திருக்குர்ஆன் சம்மந்தமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 28-12-2018 வெள்ளிக் கிழமை 

✍ நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:15 மணிவரை 

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

 ✍ QITC-  யின் கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் இஜ்திமா – 28-12-2018  வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில் 

📌 சிற்றுரைகள் 
📌 கேள்வி பதில் 
📌 சிறப்புரைகள் 

என  திருக்குர்ஆன் சம்மந்தமான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🔖தலைமை🔖

🔖 சகோதரி: ரஹானா சுல்தானா
(5:30 PM - 5:33 PM)

📣 சிறப்புரை:
 
🎤 1. சகோதரி: சுமையா பேகம்
(5:33 PM - 5:40 PM)
📓இளம் வயதினர்களையும் வழி நடத்தும் திருக்குர்ஆன்

🎤 2 . சகோதரி: நிலோஃபர்
(5:40 PM - 5:47 PM)
📔 திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள்.

🎤 3. சகோதரி: பியாரி பேகம்
(5:47 PM - 5:54 PM) 
📕 வழிகாட்டும் வேதமும், வழிமாறும் கூட்டமும்

🎤 4. சகோதரி: ரஸிய்யா சுல்தானா
(5:54 PM - 6:01 PM)
📒 திருமறைக்கு கட்டுப்பட்ட சமுதாயம்

🎤 5. சகோதரி: ஃபாரிஸா பேகம்
(6:01 PM - 6:08 PM)
📗 இழிவுகளை நீக்கும் இறைவேதம்

🎤 6. சகோதரி: முர்ஸிலா
(6:08 PM - 6:15 PM)  
📘 பகைவனையும் ஈர்க்கும் பண்புள்ள வேதம்

🎤 7. சகோதரி: சாபிரா
(6:15 PM - 6:23 PM)
📙சோதனைகள் ஏற்படும் போது குர்ஆன் கூறும் ஆறுதல்.

▪▪▪▪▪▪▪▪▪▪▪
🎤 கேள்வி பதில் நிகழ்ச்சி:
(6:31 PM - 7:31 PM) 
🎁 கேள்வி பதில் & பரிசுகள் 🎁
▪▪▪▪▪▪▪▪▪▪▪

📣 சிறப்புரை: 📣
🔊 8. சகோதரி: ஜுபைதா பேகம்
(7:31 PM  - 7:41 PM)
📕மகப்பேறும் திருக்குர்ஆனும்

🔊 9. சகோதரி: ரஹானா சுல்தானா 
(7:41 PM - 7:51 PM)
📘குர்ஆன் விளக்கும் அல்லாஹ்வின் படைப்பாற்றல்..

🔊 10. சகோதரி: ஷமீனா
(7:51 PM  - 8:06 PM)
📗திருக்குர்ஆனை வாழ்க்கை நெறியாக்குவோம்.

🌻 நன்றியுரை🌻
🔖 சகோதரி: ஜுபைதா பேகம்
(8:06 PM - 8:08 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍 

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு   இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 தேநீர் & 🍛 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
17-12-2018
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்யவும்

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் 14/12/2018


QITC – நன்றி அறிவிப்பு

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 14/12/2018 அன்று

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

🌰 இம்முகாமில் 111 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

 எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰  இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝  குருதிக் கொடை  செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு,  செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட  அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA👆

இம் மகத்தான உயிர்காக்கும்  பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ ஏகனாகிய அல்லாஹ்விற்கு நன்றி கூறி  அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

  குறிப்பு👇

இரத்த தான  முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின்  அல்லாஹ்விற்காக மனம் பொருந்தி பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
6631 6247, 55532718,  66579598,  44315863

தேதி: 16-12-2018