திங்கள், 29 செப்டம்பர், 2008

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


சனி, 27 செப்டம்பர், 2008

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு


அஸ்ஸலமு அலைக்கும்

கத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு

இடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி

பள்ளியில்.

தலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)

பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;

சிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ

கத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் !!

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

26-09-2008 அன்று புத்தம்புதிய தலைப்புகளில் புத்தககண்காட்சி மற்றும் மாபெரும் இப்தார் விருந்து.

26-09-2008 அன்று புத்தம் புதிய தலைப்புகளில் புத்தக கண்காட்சி மற்றும் மாபெரும் இப்தார் விருந்து .

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே !
அஸ்ஸலமு அலைக்கும்( வரஹ் )
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை Jaidha Flyover அருகே அமைந்துள்ள அரபிக் பள்ளிவளாகத்தில் கூடை பந்து மைதானத்தில் மாபெரும் இப்தார் விருந்து நடை பெற இருக்கிறது . தாங்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் மற்று மத நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் நீங்கள் வாங்கி படிக்க புத்தம்புதிய தலைப்புகளில் புத்தககண்காட்சி நடைபெற இருக்கிறது. உங்கள் இஸ்லாமிய அறிவு பசி தீர்க்கவும் தாகம் தணிக்கவும் தவறாது வந்து பயனடையுங்கள். மேலதிக விவரங்களுக்கு www.qatartntj.blogspot.com என்ற வலைமனையை வலம் வருக !

திங்கள், 22 செப்டம்பர், 2008

ஸகர் அல்கோர் சிறப்பு நிகழ்ச்சி












கடந்த 18-09-2008 அன்று வியாழக்கிழமை இரவு அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ஸகர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை பொறுப்பாளர் சகோதரர் தேவியா குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதலாவதாக மௌலவி அன்சார் அவர்கள் " நபிகளார் ஏற்படுத்திய ஒற்றுமையும் போலி ஒற்றுமையும் என்ற தலைப்பிலும் , மௌலவி முஹம்மத் அலி M.I.SC; அவர்கள் " சகாபாக்களின் கொள்கை உறுதி " என்ற தலைப்பிலும் , மௌலவி தொவ்பிக் மதனீ அவர்கள் " நபி ஸல்லாஹுஅலைஹிவஸ்ஸலம் அவர்கள் மீது அன்பு வைத்தல் " போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சினிடையே அல்கோர் சமூக கலாச்சார மையத்தின் தலைவர் கானம் அப்துல்லாஹ் அல் மொகநதி அவர்கள் வருகை தந்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில் கத்தர் இந்திய தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் , ஆவலோடு கலந்து கொண்ட சகோதரர்கள் மத்தியில் தன்னுடைய மகிழ்ச்சியயை வெளிபடுத்திக்கொண்டதோடு தன்னாலான ஒத்துழைப்புகளை தருவதாக கூறினார். இறுதியாக இரவு தொழுகை மௌலவி முஹம்மத் அவர்கள் தொழுவித்தார்கள் . மையத்தின் செயலாளர் சகோதரர் மசூத் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.ஸகர் உணவை சிறப்பாக தயாரித்து அனைவர்க்கும் பரிமாறினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் .

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

மைதரில் மார்க்க பயான்



இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25-09-2008 வியாழக்கிழமை அல்மில்லியன் மைத்தர் கேம்ப் அருகே அமைந்துள்ள பள்ளியில் ரமலான் சிறப்பு பயான் ! அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கிறது QITC யின் மைத்தர் கிளை .

வியாழன், 18 செப்டம்பர், 2008

உம்ரா பயணம்











அல்லாஹுவின் பெருங் கிருபையால் கத்தர் இந்தியா தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த உம்ரா பயணம் பஜ்ர் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் இருந்து இரண்டு பஸ்களில் பயணம் மேற்கொண்டார்கள்.
டிராவல்ஸ் பொது மேலாளரும் சலாத்தா ஜதீத் கத்தீப் யூசுப் அல் அவர்கள் வருகை தந்து பயண ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள்.

எல்லா பயணிகளுக்கும் இருக்கை சீட்டு கொடுக்கப்பட்டு முறையாக
அமர்த்தப்பட்டனர் . பின்னர் இரண்டு பஸ்களும் 6:00 மணிக்கு புறப்பட்டது .
பயணம் இனிதாகவும் பாதுகாப்பாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக .

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

வியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புறப்பட இருக்கிறது.

"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜு க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி" . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி) நூல் :புகாரி 1782 ,1863.
ரமலானில் கடைசி பத்து நோன்பு நாட்களில் லைலத்துல் கதர் இரவை அடைவதற்காக இன்ஷா அல்லாஹ் உம்ரா செல்ல 18-09-2008 அதிகாலை இரண்டு பஸ்களில் சகோதர சகோதிரிகள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே சகோதர சகோதரரிகள் ஸகர் செய்து விட்டு சரியாக பஜ்ர் தொழுகைக்கு மர்கசில் வந்து சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். துக்கான் , ரஸ்லாப்பான்,அல்கோர் போன்ற தொலைதூரத்திலிருந்து வரும் சகோதரர்கள் இரவிலே வந்து தங்குவதற்கு மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பஸ்களும் நமது மர்கசிலிருந்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்படும்.
நேரம் தவறாமல் எல்லாரும் சரியான நேரத்தில் வருகை தரவும்.
தங்களுடைய பயணம் இனிதாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

திங்கள், 15 செப்டம்பர், 2008

அல்கோர் ஸகர் நிகழ்ச்சி



இன்ஷா அல்லாஹ் அல்கோரில் வருகின்ற வியாழக்கிழமை ஸகர் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெறும் .

இடம்: அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்

நேரம் : இரவு 9:00 மணி முதல் 1:00 மணி வரை.

பயானுக்கு பின் இரவு தொழுகை நடைபெறும்.

பெண்களுக்கான தனி இட வசதி உண்டு. வாகன வசதி செய்யப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு நோட்டீஸ் காணவும்


வெள்ளி, 12 செப்டம்பர், 2008

சவுதி மர்கஸ் ஸகர் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் !









11-09-2008 அன்று இரவு 10:00 அளவில் மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவூதி மர்கஸில் QITC யின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. QITC யின் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். முதல் சிறப்பு பயானாக " ஏகத்துவ சிந்தனையும் சமுதாய மாற்றமும் " என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் அலி M.I.SC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை ஏற்படுவதற்கு முன்னிருந்த நிலைமைகளையும் ஏகத்துவ பிரச்சாரத்தால் முஸ்லீம் சமுதாயம் கண்டுகொண்ட மாற்றங்களையும் எடுத்து கூறினார். பின்னர் " இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருதல் " என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி தவ்பிக் மதனீ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். "முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி ( ஸல் ) அவர்கள் ஒவொவ்வரு நாளும் பல முறை பாவ மன்னிப்பை இறைவனிடம் கோரியிருக்கிறார்கள் . நித்தமும் பாவத்தில் ஒழன்று கொண்டிருக்கும் நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை தவ்பா செய்துயிருக்கிறோம் ? " என்று தமது உரையினுடே மக்களிடம் வினா எழுப்பி பாவமன்னிப்பை இறைவனிடம் எப்படிச்செய்ய வேண்டும் என்று விளக்கினர்.
அவருடைய கணீர் குரலால் அரங்கத்தை முழுவதுமாக வியாப்பித்திருந்தார். துயில் கொள்ளும் வேளையிலே அவருடைய உரை கண்ணீரை கசிய வைத்தது.
அடுத்ததாக மையத்தின் தலைமை தாயீ சகோதரர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் " ரமலானில் அழைப்பு ப்பணியின் எழுச்சி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள் . ரமலான் மாதம் என்பது சாதனை படைக்க வேண்டிய மாதம். இம்மாதத்தில் இயன்ற அளவு அழைப்பு செய்ய வேண்டும். மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த மிக ப்பெரிய பொறுப்பை பற்றி விசாரிப்பான் .நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் அறப்போர்கள் மேற்க்கொள்வார்கள்.
மேலும் நபி (ஸல் ) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களிடம்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் அழைப்பு பணியில் அக்கறையின்றிருந்ததால் தான் மேற்கத்திய முலாம் பூசப்பட்டு அறப்போர்( ஜிஹாத் ) என்ற அத்தியாயத்தை நீக்கி விட்டு திருக்குர்ஆனை திருத்தி எழதி வெளியிட்டு இருக்கிறது. இதே போல் முஸ்லிம் விரோத ஊடகங்களில் நபி(ஸல்) அவர்களின் கேலி சித்திரம் வரைந்து இஸ்லாத்தின் புனித தன்மைக்கு அவப்பெயர் ஏற்படுத்திருக்கிறது.இதிலிருந்து நாம் படிப்பினை பெறுவது இஸ்லாத்தின் கண்ணியம் காக்க வேண்டுமன்றால் தூய இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்க பாடுபட வேண்டும்.
சூரா ஹதீத்(57:25) என்ற அத்தியாயத்தில் இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வசனத்திற்கு ஆய்வை மேற்கொண்ட ஒரு கிருத்துவ அறிஞர் சொல்கிறார் இது பூமியின் மீது இரும்பாலன எரிகற்கள் வந்து வீழ்ந்ததற்கான அறிவியல் வரலாறு உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் அந்த அறிஞர் சொல்கிறார் " பொக்கிஷத்தின் (குர்ஆனின்) மதிப்பறியாத சமூகத்திடம்(முஸ்லீம்களிடம்) இந்த குர் ஆன் இறக்கியருளப்பட்டிருக்கிறதே?". திருமறையை ஆய்வுச்செய்ய இஸ்லாமிய அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். அழைப்புப்பணி எல்லா முஸ்லீம்களின் மீது கடமையாக உள்ளது. எனவே அழைப்புப்பணி முஸ்லீம்களின் உயிர் மூச்சாக திகழவேண்டும் என்றார்.
அடுத்தாக செயலாளர் மஸ்ஊத் அவர்கள் கத்தர் வாழ் முஸ்லீம்கள் மத்தியிலும் பிற மத தமிழறிந்த மக்களிடமும் கத்தர்இந்திய தவ்ஹீத் மையம் செய்து வருகின்ற அழைப்புப்பணி பற்றி எடுத்து கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் சகோதரர் இராம சுப்பிரமணியன் என்ற மாற்ற மத சகோதரரை மேடைக்கு வருமாறு அழைத்தார்.அவருக்கு மௌலவி நஜ்முல் ஹுசைன் அவர்கள் கலிமாவை சொல்லிக்கொடுத்து இராமசுப்பிரமணியன் இஸ்லாத்தை தழுவினார்.தான் தேர்ந்தெடுத்த பெயரான ரய்யான் அஹ்மத் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.
சகோதரர் ரய்யான் அஹ்மத் அவர்கள் தனக்குள் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டார்.மேலும் தன்னுடன் பணிபுரியும் சக தோழர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாமல் உறுதியாக தான் நின்றதாகவும் 10 நோன்பையும் நிறைவேற்றியிருக்கின்றேன் என்றும் கூறினார். இறுதியாக துணைசெயலாளர் சபீர் அஹ்மத் அவர்களின் நன்றியுரையுடன் ஸகர் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் தோஹாவின் பல பாகங்களிலிருந்தும் ஆண்கள் பெண்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். வருகை தந்த அனைவருக்கும் ஸகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துணை செயலாளர் பீர் முஹம்மத் தலைமையிலான உணவு குழு உணவை தாயாரித்து பரிமாறியது.துணை செயலாளர் அப்துல் கஃபூர் தலைமையிலான வாகன குழு கத்தரின் அணைத்து பகுதிகளுக்கும் வாகன ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அல்லாஹ்வுக்கே நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்.!








நோன்பு திறப்பு நிகழ்ச்சியின்



இன்று மாலை நமது மர்கஸில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது நடந்து வரும் தொடர் பயானின் ஒரு பகுதியாக சகோதரர் மௌலவி நஜுமுல்ஹுசைன் அவர்களின் பயான் இடம் பெற்றது .

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

தொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி








ஒன்பதாவது நாளான இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ( இப்தார் ) நமது மர்கஸில் சிறப்பாக நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் ! ஒவ்வருநாளும் சகோதரர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன் "இறையச்சம்" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகின்றார்கள் . இறைவனோடு மிக நெருக்கமான உள்ளச்சத்துடன் இருக்கும் இத்தருணத்தில் மௌலவியின் பயான் அனைத்து சகோதரர்களையும் கவர்கிறது. நோன்பின் எல்லா நாட்களிலும் 100 க்கு மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து பயன் பெருகின்றனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தர் இந்திய தௌஹீத் மையமும் ஈத் பின் சாரிட்டியும் இணைந்து நடத்திவருகிறது .

வியாழன், 4 செப்டம்பர், 2008

சவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி


அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலமு அலைக்கும் ...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலமு அலைக்கும்இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11-09-2008 அன்று இரவு வியாழக்கிழமை சவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது .அனைவரும் தங்களுடைய சொந்த பந்தங்களுடன் நண்பர்கள் சூழவந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

  • பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
  • ஸகர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தோஹாவின் அனைத்து பகுதிகளுக்கும் வாகன வசதி செய்யப்ப் பட்டுள்ளது .
  • மேலதிக விவரங்களுக்கு நோட்டீஸ் பார்க்கவும்.