அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி, 24-05-2013 அன்று ஜும்மா தொழுகைக்குப்பின் கத்தர் மண்ட தலமையகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை மண்டலத் துணைச்செயலாளர் சகோ ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்
மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பது பற்றியும் புதிய நிர்வாகிகள் அறிமுகத்தையும் செய்து வைத்தார்கள்,
அதன் பின்பு மண்டல பேச்சாளர் சகோ முஹம்மது தமீம் MISc அவர்கள் 'நாம் ஏன் இந்த ஜமாத்தில் இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மற்ற இயக்கங்களுக்கும் நம் ஜமாத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து கூறி, கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசி செயல் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார்.
அடுத்ததாக துணைச் செயலாளர் சகோ காதர் மீரான் அவர்கள் சென்ற நிகழ்சிகள் பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை வழங்கினார்கள். அதன் பிறகு அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவெளி 15 நிமிடங்கள் விடப்பட்டது.
பின்னர் மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் செயல்வீரர்கள் செயல்திட்டங்களை விளக்கி பேசினார்கள். தாவா களத்தில் பின் பற்ற படவேண்டிய நுணூக்கங்களை பட்டியலிட்டு, கிளை பொறூப்பாளர்கள் அனுதினமும் மார்க்க அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றி கூறினார்கள். நேரத்தை திட்டமிடுவதிலும், மக்கள் தொடர்பு எற்படுத்துவதிலும், தாவாவிற்காக நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்து கூறினார்கள்.
மேலும் கிளைகளிடம் இருந்து தலைமை எதிர்பார்ப்பது என்ன? என்பது பற்றியும், ஒவ்வொரு கிளைகள் திட்டமிட்டிருக்கும் எதிர்கால தாவா பணிகள் என்ன என்பதை கேட்டறிந்தார்.
வக்ரா, அல்ஹீஸா, கர்த்தியாத், நஜ்மா, சனைய்யா, மாமுரா, பின் மெஹ்மூத், லக்தா, அல்சத் ஆகிய கிளைகளிலிருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் காலங்களில் செய்ய இருக்கும் தாவாபணிகளை கூறினார்கள்.
அடுத்த மண்டலச் செயலாளர் சகோ முஹம்மது அலி MISc அவர்கள் இந்த ஜமாத்தின் பொறுப்பாளர்களிடம் காணப்பட்ட வேண்டிய பண்புகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலும் நபிகளாரின் வாழ்வில் ஏற்பட்ட நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். அதில் குறிப்பாக தவிர்க்க வேண்டிய பண்புகளைப் பற்றியும், இந்த ஜமாத்துடன் முரண்படும் செயல்களையும், மற்ற இயக்கங்களிடம் இருக்கும் பலகீனங்களையும், நிர்வாகிகளாக இருப்போர் கத்தர் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கிளை நிர்வாகிகளுக்கு தெள்ளத் தெளிவாக உதாரணங்களுடன் கூறி விளங்கப்படுத்தினார்கள்.
அதன் பிறகு மண்டலத் துணைத் தலைவர் சகோ பக்ருதீன் அவர்கள் நம் ஜமாத்தின் வெளியீடான உணர்வு தீன்குலப் பெண், ஏகத்துவம் இதழ்களின் கத்தர் மண்டத்தின் நிலைகளைக் கூறி இந்த இதழ்கள் எந்த அளவிற்கு செய்திகளைத் தாங்கி வருகிறது, இதன் மூலம் நம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பயன் கிடைக்கிறது, இதன் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றியும், இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து என்பது பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி கிளை உறுப்பினர்களிடம் இதன் வளர்ச்சிக்குக்கும் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக சகோ முஹம்மது அலி MISc எதிர்வரும் நிகழ்ச்சிகள் என்னென்ன? என்பது பற்றியும் தலைமையில் இருந்து செய்திகள் வரும் போது கிளை உறுப்பினர்களும் செயல் வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார்கள்.
அத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நிகழ்சிகளாக பின்வரும் நிகழ்சிகளை பட்டியலிட்டார்கள்:
1. பிற மதக் கட்டுரைப் போட்டி
2. முஸ்லீம்களுக்கான கட்டுரைப் போட்டி
3. சிறுவர்களுக்கான கட்டுரைப் போட்டி
4. தாயிக்கள் பயிற்சி வகுப்பு
5. 31-05-2013 அன்று இரத்த தானம்
6. 14-06-2013 அன்று ரமலான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
7. இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்
8. ரமலான் நிகழ்சிகள்
இறுதியாக மண்டலப் பொருலாளர் சகோ இலியாஸ் நன்றியுரை கூறி இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.