திங்கள், 29 ஜூலை, 2013

அல் கோர் கிளையில் ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி 25-07-2013


கடந்த 25-07-2013 அன்று வியாழக்கிழமை, அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல் கோர் கிளையில், ஸகர் நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி அல் கோர் பொருப்பாளர் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் தலைமையில் அல் கோர் உள் விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக மௌலவி முஹம்மது லாயிக் அவர்கள் "நபீலான வணக்கங்களும் நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்ததாக மௌலவி முஹம்மது தமீம் அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக தமிழ் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் "எதிர்ப்புகளை வென்ற ஏகத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர்கள் ஏகத்துவ எழிச்சி பற்றிய சில விசயங்களை செய்முறையின் மூலம் விளக்கிக் காட்டினார்கள்.

மேலும் QITC நடத்திய ரமலான் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் அல் கோர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட தமிழறிந்த இஸ்லாமிய சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ் !

சனி, 27 ஜூலை, 2013

மரண அறிவிப்பு



QITC யின் முன்னாள் தலைவரும், தாவா குழுவின் மூத்த உறுப்பினருமான சகோதரர் லியாகத் அலி அவர்கள் 26/07/2013 காலை தாயகத்தில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


ஞாயிறு, 21 ஜூலை, 2013

அல் கோரில் QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 25/07/2013 வியாழன் இரவு


அல் கோரில் QITC-யின்  ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2013

நாள்    :   25 / 07 / 2013 வியாழன்
நேரம் :   இரவு 09 : 00 மணிக்கு
இடம்  :   அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம்  


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரும்  வியாழன் இரவு 09 : 00 மணிக்கு அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்    உள்ளரங்கத்தில் இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

 எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்  .
 ==================================================================================================
ஏகத்துவ எழிச்சி செய்முறை விளக்கம் :
சிறுவர் சிறுமியர்கள் சில விசயங்களை செய்முறையின் மூலம் விளக்கும் ஓர் நிகழ்ச்சி 

சிறப்புரை :
1 . மவ்லவி முஹம்மத் லாயீக் - நஃபிலான வணக்கங்களும் நமது நிலைமையும்? 

2 . மவ்லவி முஹம்மத் தமீம் M.I.Sc - சமூகத் தீமைகள் !
 
3 . மவ்லவி K.அப்துன் நாஸர் M.I.Sc - எதிர்ப்புகளை வென்ற ஏகத்துவம் !
          
          பரிசளிப்பு நிகழ்ச்சி :
1. QITC-மர்க்சின் ரமலான் கட்டுரைப்போட்டி பரிசு ( பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு )
2. QITC- மர்கஸ் இஸ்லாமிய கல்வி -I ல்  பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் பரிசு  

 ================================================================================================== 
குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .

வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் -70453598

சகோ : ஷேக் அப்துல்லாஹ் - 66963393 

# ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#
"தொலை தூர பயணமாக இருப்பதால் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு நிதானமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருமாறு  உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்"  . 
 ==================================================================================================

18-07-2013 கத்தர் மண்டலம் சவுதி மர்கஸில் ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி



18-07-2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவஹீத் மையம், மதீனா கலிஃபா பகுதியில் அமைந்துள்ள சவுதி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம் என்ற சவுதி மர்கஸில் ஸகர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஷா தொழுகையுடன் இரவு தொழுகையும் நிறைவேற்றிய பின்னர் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மைத்தின் தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் வரவேற்புரை வழங்கி, சவுதி மர்கஸின் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாறு கேட்டுக்கொண்டார்.

1 . மவ்லவி அன்சார் மஜீதி - ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு !

2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி - நபிவழி நடந்தால் நரகமில்லை !

3 . மவ்லவி கே அப்துன் நாஸர் M.I.Sc - கணவன் மனைவி கடமைகள் !

ஆகிய தலைப்புகளில் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குர்ஆன் மனனம், துஆ ஓதுதல், இஸ்லாமிய பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளுக்கான QITC RAMADAN 2013 கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, 500 க்கும் அதிகமான சகோதரர்கள் அல் கோர், துக்கான், சனையா, வக்ரா, உம் சையீத் போன்ற தொலை தூர இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர். மேலும் நூற்றூக்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

கத்தர் இந்திய தவ்ஹீத மையத்தின் செயல் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களுடைய தலைமையில் 10 பேர்க்கொண்ட உணவு குழு முழு வீச்சாக செயல்பட்டு, நமது மர்கசிலியே உணவு தாயாரித்து வருகை தந்திருந்த அனைவர்க்கும் ஸகர் உணவை பரிமாரியது.

இறுதியாக இணைச்செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சி அல்லாஹுவின் அருளால் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது அல் ஹம்துலில்லாஹ்!


19-07-2013 வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு


19-07-2013 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் "வஹி மற்றும் மாநபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்து வந்த சொல் மட்டுமே மார்க்கம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.

19-07-2013 அன்று கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவுக்கு பின் பயான்


19-07-2013  அன்று கத்தர் மண்டல கீழ் கண்ட கிளைகளில் ஜும்மாவுக்கு பின் பயான் நடைப்பெற்றது.

சகோதரர் அப்துஸ் ஸமது மதனி - சனையா அல் அத்திய்யா பள்ளியிலும்
சகோதரர் மவ்லவி ரிள்வான் – மைதர் கிளையிலும்
சகோதரர் மவ்லவி அன்ஸார் – லக்தா கிளையிலும்
சகோதரர் டாக்டர் அஹமது இப்றாஹீம் – அல் சத் கிளையிலும் உரையாற்றினார்கள்.

12-07-2013 அன்று நஜ்மா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்குபின் சிறப்பு பயான்


12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று நஜ்மா கிளை சார்பாக ஜும்மா தொழுகைக்குபின் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில அழைப்பாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் 'ரமலான் எனும் பயிற்சிக்களம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள்.

12-07-2013 அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி


12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று சனையா கிளை சார்பாக இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சனையா 45 வது தெருவில் அமைந்துள்ள ஷானான் இன்ஜினியரிங் கம்பெனி  வளாகத்தில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்த வருகை தந்துள்ள சகோதரர் மவ்லவி அப்துன் நாஸர் அவர்கள் "நேர்வழி ஏது?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

இதில் 150க்கும் மேற்ப்பட்ட தமிழறிந்த சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


ஞாயிறு, 14 ஜூலை, 2013

சவூதி மர்கஸில் QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 18/07/2013 இரவு 8:30 மணிக்கு

சவுதி மர்கஸில் QITC -யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2013
மற்றும் இரவுத்தொழுகை   

நாள்    :   18/ 07 / 2013 வியாழன்
நேரம் :  இரவு 8:30  மணிக்கு
இடம்  :   சவூதி மர்கஸ் உள்ளரங்கம்

கண்ணியத்திற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வியாழன் இரவு 8 : 30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகை நடைபெறும் அதைத் தொடர்ந்து  ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து மவ்லவி கே அப்துன் நாஸர MISc அவர்கள்  வருகை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
  
தலைமை : சகோ முஹம்மத் யூசுப்

1 . மவ்லவி அன்சார் மஜீதி   -  ஏகத்துவம் எங்கள் உயிர் மூச்சு ? 

2 . மவ்லவி அப்துஸ் சமத் மதனி       - நபிவழி நடந்தால் நரகமில்லை !
                                                                                         

3 . மவ்லவி கே அப்துன் நாஸர்  M.I.Sc  - கணவன் மனைவி கடமைகள் !
              

 நன்றியுரை -  சகோ தஸ்தகீர் 



குறிப்பு: 
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது .
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி  பெற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் . 

வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393
ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 



2013 ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் - குர்ஆன் மனன போட்டி மற்றும் பேச்சு போட்டி 11/07/2013

அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கடந்த 11/07/2013 வியாழன் அன்று ரமலான் 2013 சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு 10.00 மணிக்கு மர்கசில் தொடங்கியது. முதலாவதாக சிறுவர்களுக்கான குர்ஆன் மனனபோட்டி மற்றும் பேச்சு போட்டி நடைப்பெற்றது.

உள்ளம் கவர்ந்த மழலைகள் மனனம்

திருக்குர்ஆனில் உள்ள இரண்டு சிறு சிறு அத்தியாயங்களை ஒதி காண்பிக்குமாறு சொல்லப்பட்டது. அதை அழகான முறையில் அம்மழலைகள் ஓதி காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது.

முலையிலேயே கொள்கை உறுதியூட்டப்பட்ட இளம்சிறார்கள் பேச்சு

ஆறு முதல் ஏழாம் வகுப்பு வரையில் உள்ள சிறுவர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றார்கள்.

இப்போட்டிகளில் 35 சிறுவர் சிறுமிகள் கலந்துக்கொண்டார்கள். போட்டியின் நடுவர்களாக சகோதரர் அப்துஸ்ஸமது மதனி, சகோதரர் மவ்லவி முஹம்மது லாயிக், சகோதரர் அப்துன் நாசர் ஆகிய மூவர் அடங்கிய குழு செயல்பட்டது.

இரவு சரியாக 12:00 மணிக்கு மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியாக, தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள் "மறுமையை நோக்கி முஸ்லீம்களின் இலக்கு" என்ற தலைப்பில் உரை இடம் பெற்றது.

அரங்கம் முழுவதும் நிரம்பி, வெளியே இருக்கைகள் போடப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் ஸகர் உணவு பரிமாறப்பட்டது. தமிழறிந்த சகோதர சகோதரிகள் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 350 பேர் கலந்து கொண்ட பயனடைந்தார்கள். சரியாக 2:00 மணிக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹுவின் பெருங்கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.





புதன், 10 ஜூலை, 2013

QITC யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 11/07/2013 வியாழன் இரவு 8:30 மணிக்கு



QITC மர்கஸில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -  11/07/2013
 மற்றும் 
QITC - ன் சிறுவர்களுக்கான அறிவுப்போட்டி  
நாள்    :    11 / 07 / 2013 வியாழன்
நேரம் :   இரவு 8 : 30 மணிக்கு
இடம்  :   QITC மர்கஸ்
அன்பிற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வியாழன்  இரவு 8 : 30 மணிக்கு வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் (foot  ball) உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகையைத் தொடர்ந்து  சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப்  போட்டி ஆரம்பமாகும். எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை  அன்போடு  கேட்டுக்கொள்கிறோம்.

  
 தலைமை : சகோ வக்ரா M . S பக்ருதீன் 

சிறப்புரை : 

கே அப்துந் நாஸர்   M.I.Sc
மறுமையை நோக்கி முஸ்லிம் களின் இலக்கு !

நன்றியுரை :  கிளைப்பொறுப்பாளர் 



குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது.
2 . அறிவுப்போட்டியில் கலந்துகொள்ளக்கூடிய  சிறுவர்களின்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிக்கு உட்படுத்தி தயார் நிலையில் தாமதம் மில்லாமல் முன்கூட்டியே அழைத்து வரவும்.
3 . ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேய்க் அப்துல்லாஹ் - 66963393 
 இத்தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்க மறந்துவிடாதீர்கள் !

கூடுதல் விவரங்களுக்கு  : 55532718, 66579598

முக்கிய அறிவிப்பு:
இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது!!

வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி QITC மர்கசிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 8 ஜூலை, 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 05-07-2013 வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி மற்றும் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் பேச்சுபோட்டி 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை சகோதரி பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலாவதாக சகோதரி ஹாஜரா அவர்கள் ஷைத்தானின் வலைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் திருக்குர்ஆன் ஓதும் முறை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் மாத பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் அர்ஷதா மர்யம் என்ற சகோதரி உறவுகளை பேணுவோம் என்ற தலைப்பில் பேசினார்கள்.

இதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




கத்தர் மண்டல மர்கசில் நிர்வாக கூட்டம் 05-07-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் எதிர்வரும் ரமலான் நிகழ்சிகளின் நிலை மற்றும் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் ஆகிய முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




 

கத்தர் மண்டல கிளைகளில் 05-07-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 05-07-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் ,சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் , அஹ்மத் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.

3 . நஜ்மா பகுதியில்- மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் –டாக்டர் ,அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில்மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

7.அல் ஃஹீஸா பகுதியில்சகோதரர் ,முஹமத் யூஸு ஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

8.சலாத்தா ஜதீத் பகுதியில்-மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் மவ்லவி இஸ்சத்தின்ரிள்வான் சலஃபி -அவர்கள் உரையாற்றினார்கள்.

10.கரஃப்ஃபா பகுதியில் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் சகோதரர்,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !




ஞாயிறு, 7 ஜூலை, 2013

சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் ரமலான் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013


அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில் 04-07-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "ரமலானை வரவேற்போம்" என்னும் தலைப்பில் ரமலான் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு ரமலான் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றுகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

QITC மர்கஸில் "ரமலானை வரவேற்போம்" கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் "ரமலானை வரவேற்போம்" எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி 04-07-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:15 மணி வரை மண்டல துணைச்செயலாளர் சகோதரர் சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் ரமலான் தொடர்பான மக்களிடம் சந்தேகங்களுக்குரிய கேள்விகளை கேட்டு மக்கள் பதில் சொல்லும் விதமாக நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் எதிர்வரும் ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளையும் செய்தார்கள். இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!




QITC மர்கஸில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி பயிற்சி வகுப்பு 04-07-2013


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 04-07-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.30 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான ரமலான் மார்க்க அறிவுப் போட்டிக்கு தயார் படுத்தும் விதமாக குர் ஆன் ஓதுதல், துஆ மனனம், பேச்சுபோட்டி மற்றும் ஏகத்துவத்தை விளக்கும் நாடகம் ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ, மவ்லவி மனாஸ் பயானி, மவ்லவி முஹமத் அலி Misc, மவ்லவி லாயிக். மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள் .

இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ!

புதன், 3 ஜூலை, 2013

QITC மர்கஸில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி! 04/07/2013


QITC மர்கஸில் ரமலானை வரவேற்போம் - சிறப்பு நிகழ்ச்சி 

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!!! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ...

இன்ஷா அல்லாஹ் !
ரமலானை ஒட்டி வருகிற 04 /07 /2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் நமது மர்கஸில் ரமலானை வரவேற்போம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
கேள்வி பதில் நிகழ்ச்சி
நடத்துபவர் : எம்.முஹம்மத் அலி misc    

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.