ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

அல்கோர் கம்யூனிட்டி தாருல் அர்கம் மையத்தில் 27-10-2011 வியாழன் இரவு வாரம் விட்டு வாரம் நடத்தப்படும் குடும்பத்தினர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.QITC அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISC அவர்கள், "இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 14-10-2011 அன்று நடைபெற்ற மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் 1.ரஹ்மத்துன்னிஷா, 2.ஆயிஷா பானு, 3.ரஹ்மத் ரஹானா ஆகியோருக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 27 அக்டோபர், 2011

28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மார்க்கத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!

பெண்கள் பயான் சிறப்பு நிகழ்ச்சி

நாள் : 28-10-2011 வெள்ளிக்கிழமை
இடம் : QITC உள் அரங்கம்
நேரம் : மாலை 7 மணி முதல்

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி.

வரும் வெள்ளிக்கிழமை 28-10-2011 அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்!!
பெண்களுக்கான மார்க்க அறிவுப்போட்டி

இந்த பயான் நிகழ்ச்சியில் உங்களுக்கான மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெறும். 

இந்தப்போட்டிக்கான கேள்விகள் குர்ஆன் அத்தியாயம் 68 ,69 , 70 மற்றும் இஸ்லாமிய கொள்கை புத்தகம் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும்.

குறிப்பு:
இன்ஷா அல்லாஹ் கேள்வித்தாள் மர்கசிலேயே வழங்கப்படும்.

தொடர்புக்கு:
சகோ.முஹம்மத் இல்யாஸ் +974 - 5518 7260
பெண்கள் பயான் நிகழ்ச்சி பொறுப்பாளர்

புதன், 26 அக்டோபர், 2011

QITC செயற்குழு கூட்டம் 21/10/2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் அருளால்,

 QITC செயற்குழு கூட்டம் QITC மர்கசில் 21/10/2011 வெள்ளி அன்று இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை QITC தலைவர் Dr. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவீ. முஹம்மத் தமீம் MISc அவர்கள், "ஏகத்துவ எழுச்சி" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் (வீடியோ).

QITC செயலாளர் மௌலவீ. முஹம்மத் அலீ MISc அவர்கள், "கடந்த ரமலான் நிகழ்ச்சிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளும் அவசிய மாற்றங்களும்" குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

QITC  துணைப்பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்கள், "தலைமையின் மூலமாக குர்பானி" கொடுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்தார்கள்.

QITC தலைவர் அவர்கள் "இரத்ததான முகாம்" இன்ஷாஅல்லாஹ் 11-11-2011 அன்று நடக்கவிருப்பதையும், அதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தையும், மாதாந்திர சந்தா குறித்த உறுப்பினர்களின் வாக்குறுதியையும் விளக்கினார்கள்.

பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான விளக்கத்தை QITC செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இறுதியாக, QITC  துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் நன்றியுரை நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

தோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (16 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

மேலும் சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "கிதாபுத் தவ்ஹீத்" என்ற நூலின் பாடத்தையும், அதிலுள்ள அரபி இலக்கணத்தையும் விளக்கினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 24 அக்டோபர், 2011

20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 20-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், "அற்பமான உலகமும் - அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISC அவர்கள், "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் கேள்வி - பதில் நடையில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 5-வது வாரமாக "தவ்ஹீத்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, "கிதாபுத் தவ்ஹீத்" என்ற நூலின் 2-வது பாடத்திலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.

QITC துணைச் செயலாளர் சகோதரர். இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 17 அக்டோபர், 2011

தோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 14-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (15 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 15 அக்டோபர், 2011

QITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 13-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "ஹம்னா பின்த் ஜஹ்ஸ் (ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 4 வது வாரமாக "தவ்ஹீத்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சகோதரர். செல்வகுமார் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தன் பெயரை ஸாலிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்த்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 07-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (14 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 8 அக்டோபர், 2011

தோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 06-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள், "இறைவனை நினப்பதனால் அடையும் பயன்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

QITC அழைப்பாளர் மவ்லவி. அன்சார் அவர்கள், "நரகத்திற்கான ஊடகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமது உரையில் நாம் நமது நாவை பேணவேண்டும்; மேலும் பிறருக்கு நாம் நாவினால் தீங்கிழைத்தால் அது நம் நன்மைகளை அழித்துவிடும்; அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறித்தினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "தவ்ஹீத்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.

QITC துணைச் செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். அப்துல் கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

தாயகத்தில் நமது தலைமை மூலமாக குர்பானி கொடுக்க விருப்பமுள்ளவர்கள் QITC துணைப் பொருளாளர் சகோதரர். முஹமத் இலியாஸ் (Tel: 55187260) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும், மேலும் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை தர்பியா வகுப்பில் சேர்க்க QITC துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் (Tel: 66316247) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 5 அக்டோபர், 2011

தோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் பேரருளால்,

ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தாவா குழு ஆலோசனை கூட்டம் 30/09/2011 அன்று மாலை 7:30 மணிக்கு  தோஹா QITC மர்கசில் நடைபெற்றது.QITC செயலாளர் எம்.முஹம்மத் அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் QITC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் எதிர்வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தாவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 3 அக்டோபர், 2011

30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று மாலை 7:15 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் "முஸ்லீம் பெண்களே! நம்மில் இஸ்லாம் எங்கே?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "உண்மையாளர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 30-09-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு மீண்டும் துவங்கியது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.