செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் உதவியால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு 30-08-11 அன்று காலை 6:00 மணிக்கு பெருநாள் தின குத்பாவிற்குப் பிறகு தோஹா அலி பின் அலி பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று ஈத் பெருநாள் தரும் படிப்பினை பற்றி துவக்கவுரையாற்றினார்கள்.


சிறப்புரையாக "இறையச்சம் - சிறியவர் முதல் பெரியவர் வரை" என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரி, சேலம்) அவர்கள் உரையாற்றினார்கள் (வீடியோ).

மேலும் QITC செயலாளர்  மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் QITC-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கி நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

26-08-2011 அன்று கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் உதவியால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) மற்றும் கத்தர் சாரிட்டி சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி 26/08/2011 வெள்ளி மாலை 5:00 மணிக்கு அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் QITC துணைச் செயலாளர் A.சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் வருமுன் காப்போம்என்ற தலைப்பில் மறுமையின் வெற்றிக்காக தர்மத்தை முற்படுத்துவது பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் QITC யின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். QITC செயலாளர் மௌலவி முஹம்மத் அலி மற்றும் QITC துணைச் செயலாளர் தஸ்த்தகீர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்ய QITC நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் மஹ்ரிப் தொழுகை நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் இஃப்தார் உணவு பரிமாறப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

25-08-2011 அன்று கத்தரில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் உதவியால் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி 25-08-2011 வியாழன் இரவு கதாரா கல்சுரல் வில்லேஜ் கட்டிட எண் 15 ல் உள்ள ஹாலில் QITC பொருளாளர் பீர்முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 
இந்நிகழ்ச்சியில் மௌலவி முஹம்மத் தாஹா MISC (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி சேலம்) அவர்கள் சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

QITC துணைத்தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 24 ஆகஸ்ட், 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 25/08/2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு கதாரா கல்சறல் வில்லேஜில்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

வருகிற வியாழன் இரவு கதாரா கல்சரல் வில்லேஜில் (பள்ளிக்கு பின்புறம்) கட்டிட எண் 15 ல் உள்ள ஹாலில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நடைபெற உள்ளது .


உங்கள் கேள்விகளுக்கு
மவ்லவி முஹம்மத் தாஹா MISC
(பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி சேலம்)
அவர்கள் பதிலளிக்கவிருக்கிறார்கள்.

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கேள்விகளை முன்கூட்டியே எழுதி கொண்டுவரவும்
================================================================================================
  
 بسم الله الرحمن الرحيم
  கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC)நடத்தும்
  
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
================================================================================================
நாள் : 25 /08 /2011 வியாழன்
நேரம் : இன்ஷா அல்லாஹ் இரவு 8:30  மணி முதல் 11 :00 வரை
இடம் : கதாரா கல்சறல் வில்லேஜ்  - கட்டிட எண்-15-ல்
       
 =================================================================================================
  குறிப்பு :   
1 . பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .

2. Parking வசதி செய்யப்பட்டுள்ளது , அனைத்து சகோதரர்களும் தங்களின் வாகனங்களை கதாரா கல்சறல் வில்லேஜுக்குள் உள்ள Commercial Plaza  எனும் Parking கட்டிடத்தில் Parking செய்து விட்டு  உடனடியாக உங்களை கட்டிட எண் 15 க்கு அழைத்து செல்ல சிறிய வாகனம் தயாராக இருக்கும். எனவே யாரும் தங்களுடைய வாகனங்களை மற்ற இடங்களில் நிறுத்தி சிரமப்பட்டு பொன்னான நேரத்தை வீணடித்துவிடவேண்டாம்.

3. அன்று நமது மர்கசில் வழக்கமான இரவுத்தொழுகை இருக்காது. மாற்று ஏற்பாடு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ் !!!

4. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் எதையும் உன்ன அனுமதி இல்லாததால் யாரும் எந்த உணவையும் அரங்கிற்குள் உன்னவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் .

அன்புடன் , مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863
qitcdoha@gmail.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

18-08-2011 கத்தர் அல் கோர் ரமலான் சிறப்பு சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 18/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் QITC துணைத் தலைவர் முஹம்மத் ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள் நன்றி கெட்டவர்கள் யார்?என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் சிந்திக்கத் தூண்டும் வேதம் அல்-குர்ஆன்என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
 
இஸ்லாத்தின்மீது ஆர்வம் கொண்ட சகோதரர் மார்டின் லுக் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

QITC அழைப்பாளர் லியாக்கத்தலி அவர்களின் தொடர் பயானிலிருந்து நடத்தப்பட்ட கேள்வி-பதில் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த சகோதரிகள் M.R.F.ரினோஸா (1), கதீஜத்துல் நூரியா (2) மற்றும் S.ஜீனத்துல் அமீரா (3) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் நடத்திய இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில், போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் (17 பேருக்கு) ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC செயலாளர் தஸ்த்தகீர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் அருளால், கத்தர் தோஹா QITC மர்கசில் ரமளான் மாதம் முழுவதும் இரவு 8:15 மணிக்கு இரவுத்  தொழுகையும் அதைத் தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் உலகம்" என்ற தலைப்பில் 04-08-2011 முதல் 15-08-2011 வரை தொடர் உரையாற்றினார்கள். மேலும் 16-08-2011 முதல் "மரணத்திற்குப் பின்" என்ற தலைப்பில் தொடர் உரையாற்றுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

11/08/2011 கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 11/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
சவுதி மர்கஸ் அழைப்பாளர் முஹம்மத் யூசுஃப் அவர்கள் தலைமையேற்று “ஆடம்பரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள் “வருந்திடுவோம் வாருங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “மதியிழந்த பிள்ளைகளும், மனம் குமுறும் பெற்றோர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “அறிவுரை தான் வாழ்கையா?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில் (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இதை QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் நடத்தி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் லால்குடியை சார்ந்த சகோதரர் ரிச்சர்ட் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, அப்துர் ரஷீத் என தன் பெயரை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

04-08-2011 கத்தர் - வக்ராவில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 04/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு அல் வக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் ரமலான் சிறப்பு ஸஹர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் உலகம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் சென்ற ரமளானில் இருந்தவர்கள் எங்கே? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி அன்ஸார் மஜ்தி அவர்கள் உறவுகள் - ஓர் அலசல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டி
முன்னதாக சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டி (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) நடைபெற்றது.QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி அவர்கள் நடத்திய இப்போட்டியில் 20 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் QITC சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இன்ஷாஅல்லாஹ் அடுத்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
 
QITC துணைப் பொதுச்செயலாளர் ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC துணைப் பொருளாளர் இல்யாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கத்தர் QITC மர்கஸில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC), கத்தர் ஈத் சாரிட்டியின் உதவியுடன் புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும் தோஹா QITC மர்கஸில் இஃப்தார் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் 03-08-11 அன்று சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்களும், 04-08-11 அன்று மௌலவி முஹம்மத் தாஹா MISc அவர்களும் நோன்பு திறப்பதற்கு முன்னதாக சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.