அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…
பாவமன்னிப்புத்தேட தலையாய துஆ
(ஸய்யிதுல் இஸ்திக்ஃபார்)
اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ ، لاَ إِلهَ إِلاَّ أّنْتَ ، خَلَقْتَنِيْ ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرَّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وأَبُوْءُ بِذَنْبِيْ فاَغْفِرْ لِيْ إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
(அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்தனீ, வ அன அப்துக, வஅன அலா அஹ்திக, வ வஃதிக, மஸ்த தஃது, அஊது பிக மின் ஷர்ரி மா சனஃது, அபூஉ லக பி னிஃமதிக அலைய்ய, வ அபூவு பி ஸன்பீ, ஃபக்பிர்லீ, இன்னஹு லா யக்பிருஸ் ஸுனூப இல்லா அன்த்த.)
பொருள்:
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு (எவரும், எதுவும்) இல்லை. நீயே என்னைப் படைத்தாய்! நான் உன் அடிமை! நான் என்னால் முடிந்த அளவு உன்னிடம் செய்துள்ள உடன்படிக்கையிலும், உனக்கு செய்துள்ள வாக்களிப்பிலும் இருக்கிறேன். நான் செய்துவிட்ட ஒன்றின் தீங்கைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் மீது நீ செய்திருக்கிற உன்னுடைய பாக்கியங்களை நான் ஏற்கிறேன். என்னுடைய பாவத்தையும் நான் ஏற்கிறேன். பாவங்களை மன்னிக்கிறவன் உன்னைத்தவிர வேறு எவரும் இல்லை.
இதன் சிறப்பு:
எவர் இதை முழு நம்பிக்கைக் கொண்டவராக பகலில் கூறிவிட்டு, மாலைப் பொழுதை அடைவதற்கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர். எவர் முழுநம்பிக்கைக் கொண்டநிலையில் இரவில் ஓதி, பகல் பொழுதை அடைவதற்கு முன்னர் இறப்பெய்து விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்குரியவர் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு: ஷத்தாது பின் அவ்ஸ் (ரளி), நூல்: புகாரீ 6306)
துக்கமும், கவலையும் நீங்க ஓதவேண்டிய துஆ
اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ ناَصِيَتِيْ فِي يَدِكَ ماضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ اِسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ ربِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلاَءَ حُزْنِيْ وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ
(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாசியதீ ஃபீ யதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாஉக, அஸ்அலுக பி குல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஜல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் கல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர சத்ரீ, வ ஜலாஅ ஹுஸ்னீ, வ ஸிஹாப ஹம்மீ, வ கம்மீ.)
பொருள்:
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன் அடிமையாவேன். உன் அடிமை ஒருவரின் மகனுமாவேன். உன் அடியாளி ஒருத்தியின் மகனுமாவேன். என்னுடைய முன் நெற்றி உன் கையிலாகும். உனது தீர்ப்பு என்னில் செல்லுபடியாகும். என்னிலே உனது ஏற்பாடும் நீதமாகும். எவைகளை நீ உனக்காக பெயராக வைத்துக் கொண்டாயோ அல்லது உன்னுடைய வேதத்தில் எதை இறக்கிவைத்துள்ளாயோ அல்லது உன்னுடைய படைப்புகளில் எவருக்கு அதைக்கற்றுக் கொடுத்துள்ளாயோ அல்லது உன்னிடமுள்ள மறைவான ஞானத்தில் எதை உனக்காக பிரத்தியேகமாக தேர்வு செய்து வைத்துக் கொண்டுள்ளாயோ அத்தகைய ஒவ்வொரு பெயரையும் முன்வைத்துக் கேட்கிறேன். குர்ஆனை என் இதயத்திற்கு வசந்தமாகவும், என் நெஞ்சிற்கு ஒளியாகவும், என் கவலைக்கு மருந்தாகவும், என் துக்கத்தையும், கவலையையும் போக்கிவிடும் ஒன்றாகவும் ஆக்கி அருள் புரிவாயாக!
இதன் சிறப்பு:
துக்கமோ, மனக்கவலையோ ஏற்பட்ட ஒருவர் இதைக் கூறி பிரார்த்தனை புரிந்தால், அல்லாஹ் அவருடைய கவலையை போக்கியும், அவருடைய கவலையை மகிழ்ச்சியாக மாற்றியும் தருவான் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவ்வார்த்தைகளை நாங்கள் கற்றுக்கொள்வது அவசியமா? என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு ஆம்! அவற்றை செவியேற்றவர் அவற்றை கற்றுக்கொள்வது அவசியம் எனக் கூறினார்கள்.
(அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் (ரளி), நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் 1822)
மனனம் செய்வோம் வாருங்கள்! இறைவனின் அருட்கொடைகளை அடைந்திட விரைவோம் வாருங்கள்!
தொகுப்பு: மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ