திங்கள், 31 டிசம்பர், 2012

28-12-2012 "கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] , "கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்", 28-12-2012 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:15 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் தஅவா பொறுப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துவக்கமாக "ஜனவரி - 2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல்" வெளியிடப்பட்டது. 

பின்பு, சனயிய்யாவில் த'அவாவை விரிவு படுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு,நேரம் தவறாமை,பேசும் தலைப்புகளை தேர்ந்தெடுத்தல், ஆன்லைன் நிகழ்ச்சி போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!



28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 28-12-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களின் முக்கியத்துவம்" குறித்து உரையாற்றினார்கள்.

பின்பு, திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களில் இருந்து கேள்விகள் 'தேர்வாக' நடத்தப்பட்டது. இத்தேர்வை பல சகோதரிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.



28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 28-12-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்தொன்றாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "நான்கு எழுத்து வினைச்சொற்கள்" வகை பாடங்களை 'ரிவிசன்' முறையில் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.


28-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 28-12-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  1. வக்ரா பகுதியில்- மௌலவி,இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள். 
  2. நஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – மௌலவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரதிய்யாத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !


ஞாயிறு, 30 டிசம்பர், 2012

27-12-2012 கத்தர் - அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நோயும்-நோயாளியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.


27-12-2012 கத்தர் மண்டலத்தில் "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 27-12-2012 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc., மற்றும் இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி ஆகியோர் "தொழுகை" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.



27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் மனித நேய உதவி


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 27-12-2012 வியாழன் அன்று, தாயகத்திற்கு செல்ல பண வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'இலங்கை - முரட்டுவை' என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.அப்துல் கஃபூர் (என்ற) சண்முகத்திற்கு, இலங்கை செல்ல டிக்கெட் எடுக்க கத்தர் மண்டல ஜமா'அத் பண உதவி செய்தது.

இம்மனித நேய உதவியை ஜமா'அத் சார்பாக கத்தர் மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளருமாகிய சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.அப்துல் கஃபூர் (என்ற) சண்முகம் அவர்கள் கூறுகையில், 'தான் இலங்கை சென்று தன் குடும்பத்தினர் அனைவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்க இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறும்' நம்மை வேண்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலமர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன்இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் "ஏழ்மையை பொருந்திக் கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "விளை நிலங்களை விரிவுபடுத்துவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி ,அவர்கள் "மயக்க வைக்கும் மறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மது அலீ M.I.Sc. அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டுநிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.







சனி, 29 டிசம்பர், 2012

வேலை வாய்ப்பு செய்திகள் - 28-12-2012


ஏக இறைவனின் திருப்பெயரால் ...

நமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா, நாளிதழ்கள் (26-12-2012) மற்றும் eNRI டைம்ஸ் வார இதழ் (28-12-2012) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Click on image to view bigger size.









வியாழன், 27 டிசம்பர், 2012

பெண்கள் சிறப்பு சொற்பொழிவு & அறிவுப்போட்டி-அழைப்பிதழ்



بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ்
நாள் : 28/12/2012 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7:௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!



QITC மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!

அதேபோல் இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் 28-12-2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பெண்களுக்கான அறிவுப்போட்டியும் நடைபெறும் எனவே குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

அறிவுப்போட்டி குர்ஆன் அத்தியாயம் 62,63,64 லிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது


கூடுதல் தகவலுக்குசகோ:முஹம்மத் இல்யாஸ்
+974 -55187260 (பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )

இஸ்லாம் உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டது!


அல்லாஹ் கூறும் பெறிய பத்து அடையாளங்கள் உலகத்தில் நிகழும்வரை உலகம் அழியாது என இஸ்லாம் சவால்விடுகிறது. அதை நிரூபிக்கும் நிகழ்வாக, உலகமே 2012 டிசம்பர் 21ம் நாள் உலகம் அழியும் என சொன்ன போது, அதை மறுத்த இஸ்லாம், 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவன் தூதர் மூலமாக உலகம் எப்போது அழியும், அதன் அறிகுறி என்ன என்பதை தெளிவாக கூறிவிட்டான். அது நிகழும் வரை உலகம் அழியாது என நம்பியது. அந்த உன்மை  22ம்தேதி உலத்துக்கே புரிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ, வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.


சிறிய அடையாளங்கள்:
  • மகளின் தயவில் தாய்
  • பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
  • குடிசைகள் கோபுரமாகும்
  • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
  • பாலை வனம் சோலை வனமாகும்
  • காலம் சுருங்குதல்
  • கொலைகள் பெருகுதல்
  • நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
  • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
  • நெருக்கமான கடை வீதிகள்
  • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • ஆடை அணிந்தும் நிர்வாணம்
  • உயிரற்ற பொருட்கள் பேசுவது
  • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
  • தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
  • பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
  • சாவதற்கு ஆசைப்படுதல்
  • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
  • முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
  • இது வரை நிகழாத அடையாளங்கள்
  • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
  • கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
  • யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
  • கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
  • அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
  • எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
  • செல்வம் பெருகும்
  • மாபெரும் யுத்தம்
  • பைத்துல் முகத்தஸ் வெற்றி
  • மதீனா தூய்மையடைதல்

மாபெரும் பெறிய பத்து அடையாளங்கள்:
  • 1 - புகை மூட்டம்
  • 2 - தஜ்ஜால்
  • 3 - ஈஸா நபியின் வருகை
  • 4 - யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
  • 5 - அதிசயப் பிராணி
  • 6 - மேற்கில் சூரியன் உதிப்பது
  • 7, 8, 9 - மூன்று பூகம்பங்கள்
  • 10 - பெரு நெருப்பு
நன்றி: tntjkuwait.com


மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (அல்குர்-ஆன் 31 : 34)
மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. (அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை)
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க: tntj.net

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

21-12-2012 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்"


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] , "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 21-12-2012 வெள்ளி மாலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கத்தர் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுதல், 2013 காலண்டர் விநியோகித்தல், அரபி வகுப்பு முடித்தல், சனயிய்யா பயான் ஆரம்பித்தல், வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 9 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


21-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி



அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபதாவது வகுப்பு நடைபெற்றது.
 
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "நான்கு எழுத்து வினைச்சொற்கள்"  வகை பாடங்களை  நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.

21-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-12-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  1. வக்ரா  பகுதியில்- மௌலவி,இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள். 
  2. நஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் –  மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் –  சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் -  சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – மௌலவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரதிய்யாத் பகுதியில் -  மௌலவி,முஹம்மத் அலீ ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !