புதன், 19 ஜூன், 2024

உலக குருதிக் கொடையாளர் தினத்தை(World Blood Donor Day) முன்னிட்டு TNTJ கத்தர் மண்டலம் நடத்திய 38வது மாபெரும் இரத்ததான முகாம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம்” சார்பாக நேற்று 14/06/2024 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “38வது மாபெரும் இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இரத்ததான முகாமில் “ 200 க்கும் அதிகமான நபர்கள்” கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “131 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.
இம்முகாமில் “கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சித்துளிகள் 👇
🩸 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
🩸 HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கத்தர் மண்டலம்