சனி, 23 டிசம்பர், 2023

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் 22/12/2023



بسم الله الرحمن الرحيم

QATAR TNTJ – நன்றி அறிவிப்பு 👇

💉 TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு 37-வது மாபெரும் இரத்த தான முகாம் - 💉

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 22/12/2023 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 156 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கிளை உறுப்பினர்களுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹு ஹைரா

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு👇

இரத்த தான முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின் அல்லாஹ்விற்காக மனம் பொறுக்குமாறு மண்டல நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

கத்தர் TNTJ- நிர்வாகம்

தேதி: 22-12-2023

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛




























வியாழன், 21 டிசம்பர், 2023

கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின் 37-வது மாபெரும் இரத்த தான முகாம்



கத்தர் TNTJ –அறிவிப்பு 👇

கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின்

37-வது மாபெரும் இரத்த தான முகாம்

(இது ஓர் மனிதநேய முகாம்......)

தயார் ஆகிவிட்டீர்களா❓

🎒 நாள்: வெள்ளிக்கிழமை 22/12/2023

🎒 நேரம்: நண்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.

🎒 இடம்: Qatar National Blood Donation Centre


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

✍ இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 22/12/2023 வெள்ளிக்கிழமை அன்று TNTJ கத்தர் மண்டலத்தின் "37-வது மாபெரும் இரத்த தான முகாம்" நண்பகல் 1:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களை உயிர்காக்க உதவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒

குறிப்பு: 👇

🚌 வாகன வசதி: ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு: 7721 0605

🚺 பெண்களுக்கு தனியிட வசதி: செய்யப்பட்டுள்ளது

🌔 Location :

Google Map: https://maps.app.goo.gl/dE4BhoocaCWMtP9HA

Waze Map: https://waze.com/ul/hthkxgueut

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

கத்தர் - TNTJ

தொடர்புக்கு: +974 70482146, 70453598

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

➡ இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும் ➡








செவ்வாய், 24 அக்டோபர், 2023

மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி 27-10-2023



கத்தர் TNTJ- அறிவிப்பு 👇


மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு....

இன்ஷா அல்லாஹ்!

🗓 நாள் : 27-10-2023 வெள்ளிக்கிழமை

⏱ நேரம்: மாலை 5:30 PM மணி முதல்

🔵 இடம்: அல்-புர்கான் ஸ்கூல், Souq Al Ali பின்புறம், லக்தா.



🎤 மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


🟣 சிறப்புரை

🎤 சகோ. முஹம்மத் தமீம் MISc
(TNTJ கத்தர் மண்டலத் தலைவர்)

📚 தலைப்பு: அல்லாஹ்வே போதுமானவன்


🎤 சகோ. காதர் மீரான்
(TNTJ கத்தர் மண்டலத் து.தலைவர்)

📚 தலைப்பு: பெற்றோர்களின் கடமைகள்


📌Location 👇
https://goo.gl/maps/BJxE7wXsMEFRdPP1A

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌 பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

📌 தாமதம் தவிர்க்கவும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛

இப்படிக்கு

கத்தர் TNTJ

தேதி : 23-10-2023

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛


புதன், 29 மார்ச், 2023

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 30-03-2023 வியாழக்கிழமை


கத்தர் TNTJ- அறிவிப்பு 👇


➡️ TNTJ கத்தர் மண்டலம் நடத்தும் 

➡️ ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 


✍ நாள் : 30-மார்ச்-2023 வியாழக்கிழமை 


✍ நேரம் :  9:00PM  to 1:00AM  


✍ இடம் : Gulf  Paradise Hotel - Bin Mahmoud  


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 


 👉🏻 ஸஹர் நேர நிகழ்ச்சியில் சிறப்பு  சொற்பொழிவு  மற்றும் மாணவ, மாணவியருக்கான ஸூரா & துஆ இறுதி போட்டித் தேர்வு நிகழ்ச்சி 30-03-2023 வியாழக்கிழமை அன்று பின் மஹ்மூத் பகுதியில் உள்ள Gulf Paradise ஹோட்டல் அரங்கில் நடைபெற உள்ளது


✍ இதில் 


🔖 KG -1 to 10th STD  வரை கலந்துகொண்ட பிள்ளைகளுக்கு ஸூரா & துஆ இறுதி போட்டி🔖


🟢 மற்றும்👇🏻🟢


📣 சிறப்புரை:


🎤 சகோ. முஹம்மத் அலி MIsc 

(TNTJ - கத்தர் மண்டல தலைவர்)


📗 தலைப்பு : 

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே.


✍ இந்த நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 


🟢 குறிப்பு: 👇


📌 போட்டியில் கலந்து கொண்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை 8: 45PM அரங்கிற்கு அழைத்து கொண்டு வந்து விட வேண்டும்.


📌 நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அனைவரும் சரியான நேரத்திற்கு முன் நிகழ்ச்சியில் வருகை தந்து சிறப்பிக்கவும் .


📌 தங்களுக்கு தெரிந்தவர்களை தவறாமல் அழைத்து வரவும்


📌 பெண்களுக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


🍲 ஸஹர்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....


⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛


இப்படிக்கு 


கத்தர்-TNTJ

நிர்வாகம்

29-03-2023


⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

செவ்வாய், 28 மார்ச், 2023

இரவு தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 28, 29-03-2023

 


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

🎤TNTJ கத்தர் மண்டலம்- அறிவிப்பு🎤

இன்ஷா அல்லாஹ்! 

TNTJ கத்தர் ➖ நடத்தும்  

இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
 
✍ நாள்: 28, 29-03-2023  செவ்வாய் & புதன் இரவு 

➡️ சிறப்புரை

 சகோ. அன்சார் மஜிதி 
(TNTJ கத்தர் மண்டலப் பேச்சாளர்)
 
➡️ தலைப்பு
யுக முடிவு நாள்

✍ நேரம்: இரவு  08:45 மணி முதல் 9:30 மணி வரை (கத்தர் நேரப்படி)

✍ இடம்: Zoom இணையவழி

இணைவதற்கான ZOOM லிங்க்  👇

📌 Zoom Link 
Join Zoom Meeting

Meeting ID : 831 6537 1542
Passcode: 2022

மேலே உள்ள லிங்கில்  இணைந்து பயனடையவும்.

📌 தாமதம் தவிர்க்கவும். 
ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

➖➖➖➖➖➖➖➖➖➖➖
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
*(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் : 3:104)

🔷🔷🔷🔷🟡🟡🟡🔷🔷🔷🔷

இப்படிக்கு

TNTJ - கத்தர்
தேதி : 28-03-2023

🔷🔷🔷🔷🟡🟡🟡🔷🔷🔷🔷

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2023 வியாழக்கிழமை

 


🟣 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 


✍ நாள்: 16-02-2023 வியாழக்கிழமை 

நேரம்: இரவு 8:35 மணி முதல் 9:30மணி வரை (கத்தர் நேரப்படி) 

➡️ சிறப்புரை: 
 சகோ.தாவுத்
 (TNTJ கத்தர் மண்டல  பேச்சாளர்) 

➡️ தலைப்பு: 
(உறவோடு உறவாடுவோம்)

✍ நேரம்: இரவு 8:35 மணி முதல் 8:45 மணி வரை (கத்தர் நேரப்படி) 

➡️ சிறப்புரை: 
 சகோ. ஹாரிஸ் MISc 
 (TNTJ பேச்சாளர்) 

➡️ தலைப்பு :
நஸ்ரு அத்தியாயமும் நான்கு விசயங்களும்

✍ நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:30 மணி வரை (கத்தர் நேரப்படி) 


🔗 இணைவதற்கான ஜூம் லிங்க்:- 👇

📌 Zoom Link 👇 
Join Zoom Meeting

Meeting ID: 831 6537 1542 
Passcode: 2022

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2023 படிவம் (Online Form)


 

QITC- அறிவிப்பு 👇

ஏக இறைவனின் திருப்பெயரால்... 

QITC-யின் 

✍ ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2023 

படிவம் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் :10/02/2023 

🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10/02/2023 

⏰ படிவம் ஏற்கப்படும் நேரம்: இரவு 10:59PM  - வரை மட்டுமே 

🕌  அனுப்ப வேண்டிய முகவரி: Online ல் பதிவு செய்தல் மட்டுமே... 

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே

🔰 QATAR TNTJ யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியர்ர்கள் & பெரியவர்களுக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.

🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

🔰 அதற்கான link யை பதிந்திருக்கிறோம். அதை 10-02-2023 இரவுக்குள் பூர்த்தி செய்துவிடவும். Link 👇

https://forms.gle/GuGdDEtK8VHHYLbm6

பூர்த்தி செய்த தகவலை 55263976 என்ற எண்ணிற்க்கு What's app ல் Ramadan Form Filled என அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிகள்: 👇

🟥 1) சிறுவர்கள் சூரா மற்றும் துஆ மனனப்போட்டி

🟦 2) சிறுவர்கள் பேச்சுப் போட்டி

🟧 3) பெரியவர்கள் கிராஅத் போட்டி

குறிப்பு:👇

1) பேச்சுப்போட்டி, சூரா மற்றும் துஆ, கிராத் ஆகியவைகளுக்கான குறிப்புகள் நமது இணையதளம் & சமூக வளைதளங்களில்  வெளியிடப்படும்.

2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.

3) சூரா மற்றும் துஆக்களுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள்02-03-2023

பேச்சுப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் 03-03-2023

4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.

5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது. 

📍  போட்டிக்கான பயிற்சிகளுக்கு உங்களுக்கான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

📣📣📣📣🔲🔲🔲📣📣📣📣

அன்புடன்

மண்டல நிர்வாகம்

25-01-2023

📞 44315863, 66579598,  70453598

📣📣📣📣🔲🔲🔲📣

புதன், 11 ஜனவரி, 2023

தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்


தொழுகையில் நடைபெறும் பித்அத்கள் 

ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். 

நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. 

அல்குர்ஆன்: 04:103 

அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். 

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: புகாரி: 631 

ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

இவை மார்க்கத்தில் இல்லாத பித்அத்கள் ஆகும். அவற்றில் சில பித்அத்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்:

📌 தொழுகைக்கு முன் நிய்யத்தை அரபியில் வாயால் மொழிதல்.

📌 வெள்ளிக்கிழமை சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுதல்.

📌 ஜூம்ஆவிற்கு இரண்டு பாங்கு கூறுதல்.

📌 ஜூம்ஆவின் போது தமிழ், அரபி என இரண்டு பயான் செய்தல்.

📌 மிஃராஜ், பராஅத் முன்னிட்டு தொழப்படும் விசேஷ தொழுகைகள்.

📌 தஸ்பீஹ் தொழுகை தொழுதல்.

📌 தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத் தொழுதல்.

இது போன்ற பல பித்அத்தான நடைமுறைகளையும், நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான தொழுகைகளையும் சிலர் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது பெரும் வழிகேடாகும்,

பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்த்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : நஸாயி 1560

தவறான புரிதலின் அடிப்படையிலும் அதுவே மார்க்கம் என எண்ணியும் தான் தொழுகையில் பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். எனவே நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த தொழுகைகளையும், தொழும் முறைகளையும் மட்டுமே நாம் கடைபிடித்து இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.