ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்


22-08-2008 அன்று வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு கத்தர் இந்தியா தவ்ஹீத் மையத்தில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மையத்தின் தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்களை தலைமை ஏற்று
QITC யின் செயலாளர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் கேட்டுக்கொண்டார். பின்னர் தலைவர் அவர்கள் தனது உரையில் ,
" ஒவ்வருஆண்டும் QITC சிறப்பாக ரமலான் நிகழ்ச்சிகளை அல்லாஹ்வின் பெருங்கருணையினால் நடத்தி வருகிறது. அதே போல் இவ்வருடமும் உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்க வேண்டும் மேலும் எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்புற நடக்க இறைவனிடம் து ஆ ச் செய்ய வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார் . இன்ஷா அல்லாஹ் தாயகத்திலிருந்து வரயிருக்கக்கூடிய சிறப்பு தாயியை எல்லா கிளை பகுதிகளும் நன்றாக பயன்படுத்திக்குள்ள வேண்டும் எனவும் கூறினார். நாம் செய்து கொண்டிருக்கும் தவாவை பண்மடங்கு பெருக்க வேண்டும் அதற்கு இந்த ரமலான் மாதத்தினை களமாக பயன்படுத்திக்குள்ள வேண்டும் எனவும் கூறினார்."
பின்னர் இன்ஷா அல்லாஹ் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சீரான முறையில் நடக்க பல்வேறு பணி குழுக்கள் அமைக்கப்பட்டது.
பித்ரா ஒருங்கிணைப்பு குழு
அரங்க அமைப்பு குழு.
விளம்பரக் குழு.
வாகனக் குழு .
நூலகக் குழு .
ஊடகக் குழு .
உணவு ஏற்பாட்டுக் குழு.
மேற் குறிப்பிட்ட எல்லா குழுக்களுக்கும் முறையே ஒரு நிர்வாகி குழுத் தலைவராக இருப்பார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பித்ரா ஒருங்கிணைப்பு குழு.
தலைவர் : சகோதரர் லியாகத் அலி
சகோதரர் சகோதரர் ரிபாயீ
அரங்க அமைப்பு குழு
தலைவர் : சகோதரர் ஷபீர் அவர்கள்
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்கள்
சகோதரர் அப்துல் ஜலீல்
சகோதரர் ஷம்சுதீன்
சகோதரர் அப்துல்லாஹ்
சகோதரர் ஜலாலுதீன்
சகோதரர் மீரான்
விளம்பரக் குழு.
தலைவர்: சலீம் கான்
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்கள்
சகோதரர் அஜ்மீர் அலி
சகோதரர் ஷாஜகான்
வாகனக் குழு
தலைவர் :சகோதரர் அப்துல் கபூர்
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்கள்
சகோதரர் ஜமீல் அஹ்மத்
சகோதரர் காதர் மீரான்
உணவு ஏற்பாட்டுக் குழு.
தலைவர் : சகோதரர் பீர் முஹம்மத்
சகோதரர் ஹாஜி முஹம்மத்
சகோதரர் ஜாபர்
சகோதரர் அன்சார்
சகோதரர் அப்துல் ராசிக்
சகோதரர் முஹம்மத்
சகோதரர் அபுதாகிர்
நூலகக் குழு மற்றும் ஊடகக் குழு
சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில்
சகோதரர் முகைத்தீன் கனி
சகோதரர் ஷம்சுதீன்
சகோதரர் ஜபருல்லா
சகோதரர் பாக்ருதீன்
எல்லா குழுக்களும் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் சிறப்பு பேச்சாளர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை அந்தெந்த பகுதி பிரதிநதியாளர்களின் வசதியிற்கு ஏற்ப தேதி கொடுக்கப்பட்டது.
ரமலான் நிகழ்ச்சிகளின் கால அட்டவனையயை காண இங்கே சொடுக்கவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை முன் அறிவிப்பின்றி மாறுதலுக்கு உள்ளாகும் எனவே அந்தெந்த பகுதியை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் தொடர்பு கொண்டு உறுதி படுத்திக்கொள்ளவும்.

சனி, 23 ஆகஸ்ட், 2008

வாராந்திர சிறப்பு பயான்

21-01-2008 அன்று வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்குக்பின் மர்கஸில் நடைபெற்ற வாராந்திர சிறப்பு பயானில் "ரமலானின் சிறப்புகள் " , என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி நஜுமுல்ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பின்னர் " மகான்களுக்கு சக்தியுண்டா ?" என்ற தொடர் தலைப்பில் வாரந்தோறும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெறும் ஜும்மா பேர்ருரையின் ஓளி தகட்டை படம்காட்டும்கருவியின் மூலம் அரங்கத்தில் கண்பிக்கப்பட்டது. இஸ்லாம் கூறும் கடவுட் கொள்கையில் ஏக இறைவன் அல்லாவிடம் மட்டுமே உதவி கோரவேண்டும் , அல்லாஹ்அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் கூடாது என்ற ஏகத்துவ சிந்தனையில் உறுதியுடன் நிற்கவும் மகான்களுக்கு சக்தியுண்டு என்று நம்பி தங்களுடைய இன்னல்கள் நீங்க மகான்கள் காலடியில் விழிந்து கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தினை நிரந்தர
நரகத்திலிருந்து காப்பற்ற ஆணித்தரமாகவும் தெளிவான குர்ஆன் ஹதீஸ்
ஆதரங்களுடன் சிந்தனையை தூண்டும் தொடர்தான் இந்த தொடர்.

இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கேட்டு பலனடைந்தனர்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

போலிகள்! அபாயம்!

இஸ்லாத்தின் பெயாரல் பல போலி இணையத்தளங்கள் வலைமனையில்
ஊடுருவி , இஸ்லாத்திற்கு எதிரான பொய்களையும் அவதூற்களையும் பரப்பிவருகின்றன .இதை மேம்போக்காக வலைத்தளங்களை படிக்கும் எண்ணற்ற வாசகர்கள் உண்மை என நம்பி விடுகின்றனர். அதை மேற்கோள் காட்டி மற்றவர்களுக்கும் விரலின் நுனி அபாயம் தெரியாமல் அனுபிவிடுகின்ற்னர். தங்களுடை மார்க்க அறிவின்மையே இதிலிருந்து புலப்படுகிறது.மார்க்கம் என்பது மளிகை கடை சாமான்கள் இல்லை. அரைகிலோ கத்திரி காய் வாங்க ஆயிரம் முறை திருப்பி பார்க்கும் என் சகோதரா ! நீங்கள் வெறுமனே சோம்பி கிடக்கும் ஓய்வு நேரங்களிலோ அல்லது உங்களுடைய பொழுதுபோக்கு நேரங்களிலோ ஜாலிக்காக அனுப்பும் ஜோக்குகளின் மெயில் போல் அல்லாமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து மார்க்க விசியங்களை அனுப்புங்கள். நமக்கு வந்த ஒரு மெயிலில் அல் குரான் இணையத்தளம் ஒன்று அனுபப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்யும் போது போலியான இணையத்தளம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை உடனடியாக கத்தார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு (QTEL) தகவல் அனுப்பப்பட்டது. அந்நிறுவனம் ஆய்வு செய்கிறோம் என்று பதிலளித்து. அடுத்த வாரத்தில் மேற்குறிப்பிட்ட இணையதளத்தையே தடை செய்துவிட்டது. QTEL க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது நமது இணைய தளம்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

நஜ்மாவில் சிறப்பு சொற்பொழிவு



இன்று 15-08-2008
வெள்ளிக்கிழமை ஜு ம்ஆ தொழுகை க்கு பின்னர் மாதந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது . நஜ்மாவில் அமைந்துள்ள குவைத்தி பள்ளி என்று அழைக்கப்படும் ஜு ம்ஆ பள்ளியில் மையத்தின் தாயீ சகோதரர் மௌலவி நஜுமுள் ஹுசைன் அவர்கள்
" சூரத்துல் அஸர் "
என்ற திரு குர் ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரையை எடுத்து கூறினார் .
நஜ்மா கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் அக்கிளையை சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட சகோதர்கள் பங்கு கொண்டார்கள்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்

ஏக இறைவன் திரு பெயரால்
பொதுகுழு அழைப்பிதழ்

அஸ்ஸலமு அலைக்கும் ( வரஹ்)
அன்பிற்குரிய மையத்தின் பொதுகுழு உறுப்பினர்கள் மற்றும் நியமன பொதுகுழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தெரிவித்து கொள்ளவது யாதினில்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை
கத்தார் இந்தியா தவ்ஹீத் மையத்தின் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
நேரம் : மக்ரிப் தொழுகை தொடர்ந்து
இடம் : மர்கஸ் ஹால்
தாங்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து , தங்களுடைய ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
இவண்
நிர்வாகம்
கத்தார் இந்தியா தவ்ஹீத் மையம்.
பொதுகுழு அழைப்பிதழ் கிடைக்க பெறாதவர்கள் இவ்வலை பூவின் அறிவிப்பை அன்புடன் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

சனி, 9 ஆகஸ்ட், 2008

மையத்தின் கட்டிடத்தில் மின் விளம்பரசுட்டி


அஸ்ஸலாமு அலைக் கும்

அன்பிற்குரிய கத்தார் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதரிகளே !

அன்புடன் எங்களுடைய மையத்தில் நடக்கும் எல்லா DAWA

நிகழ்ச்சிகளுக்கும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கான இட வசதி செய்ய ப்பட்டுள்ளது .

  • ஒவ்வொரு வியாழகிழமை தோறும் இரவு8: ௦௦மணிக்கு "குர் ஆன் கூறும் வரலாறு " என்ற தலைப்பிலும் " நபி தோழியர்கள் வரலாறு என்ற தலைப்பிலும் சிறப்பு பயான் கள் நடை பெற்று வருகிறது.
  • ஒவ்வொரு வெள்ளிகிழமையிலும் மக்ரிப் தொழுகை பின்னர் "கித்தாபு தவ்ஹித் " என்ற கொள்கை விளக்க வகுப்பும் நடை பெற்றுவருகிறது.
  • முதலாவது வெள்ளிக்கிழமை அல்கோர் இல் சிறப்பு பயான் .
இடம் : கமர்சியல் பேங்க் பின் புறம்
நேரம் : காலை ஒன்பது மணி முதல் பதினோர் மணி வரை.
  • இரண்டாவது வெள்ளிக்கிழமை சிறப்பு பயான்.
இடம் :சனயா பத்தில்

சனயாவில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு

ஏக இறைவன் திரு பெயரால்

கடந்த வெள்ளிகிழமை காலை பத்துமணி அளவில் சனையா அல் அத்தியா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பானார் உள் அரங்கில் கத்தார் இந்தியா தவ்ஹீத் மையத்தின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.



" ரமலானை வரவேற்ப்போம் "
என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் உரையாற்றினர் . இதில் சனையா வை சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் .பின்னர் செயலாளர் மசூத் அவர்கள் வருகின்ற ரமலானை அடுத்து இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கக்கூடிய சிறப்பு நிகழ்ச்சிகளின் திட்டங்களை பற்றி எடுத்து கூறினார் . எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளும் சிறப்புற நடக்க எல்லோரும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டார் .குறிப்பாக பித்ரா மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றி எல்லா தரப்பு சனையா வாழ் தமிழ் சகோதரர்களிடம் எடுத்து கூற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

ரமலானில் உம்ரா

ஏக இறைவன் திரு பெயரால்
இன்ஷா அல்லா ஹ் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ் வருடம் ரமலான் கடைசி பத்தில் உம்ரா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது . எனவே சகோதர சகோதரிகள் உம்ரா பயணம் மேற்கொள்ள நிய்யத் உள்ளவர்கள் உடன் தொடர்ப்பு கொள்ளவும் . போன் : 4315863.ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ் க்கு நிகரானதாகும் என்பது நபி மொழி .
அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் புஹாரி :1782, ௧௮௬௩.
உம்ரா படிவம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யுங்கள்

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் புதிய கிளை





ஏக இறைவன் திருப் பெயரால்
சீர்காழி யை அடுத்து துளசேந்திரபுரத்தை சேர்ந்த சகோதரர்க்கு சொந்தமான நிறுவனமான மில்லியனியம் கம்பெனியில் 300க்கும் மேற்பட்ட தமிழகத்ததை சேர்ந்வர்கள் பணிபுரிகின்றனர். கடந்த வியாழக்கிழமை 31-07-2008 இரவு 8:30மணியளவில் கத்தரில் மைத்தர் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள மில்லியன் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய பிரச்சாரம் நடைப்பெற்றது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தினார்கள்.பின்னர் மையத்தின் மார்க்க பேச்சாளர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் ஜமாத்தாக செயல்படவேண்டிய அவசியத்தையும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி எடுத்துரைத்தார்கள். அங்கு வசிக்கும் பெரும்பாலான சகோதரர்கள் வந்திருந்து ஆர்வமுடன் மார்க்க உரையை கேட்டனர்.தவ்ஹீத் ஜமாத்தின் ஓரு கிளையாக ஆர்வமுடன் செயல்பட எல்லா சகோதரர்களும் முன் வந்தார்கள்.
மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் புதிய கிளையின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து தருமாறு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார் . கூட்டத்தில் ஒரு மனதாக கீழ் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.கிளை பொறுப்பாளர் சகோதரர் இமாம் அலி (சீர்காழி)
2.து.கிளை பொறுப்பாளர் சகோதரர் இலியாஸ்(துளசேந்திரபுரம்)
3.செயற்குழு உறுப்பினர் சகோதரர் சையத் அலி(துளசேந்திரபுரம்)
4.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் ஆரிஃப் (காரைக்கால்)
5.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் சம்சுதீன் (குமராட்சி)
6.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் நிசாருத்தின் (துளசேந்திரபுரம்)
மேலும் மையத்தின் துணை செயலாளர் அப்துல் கபூஃர் அவர்கள் நு}லக மார்க்க புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் குறித்தும் இன்றயை நவின உலகில் நம் கைபேசியை எளிதாக மார்க்க பயான்களை கேட்கும் வகையில் வந்துள்ள தொழில்நுட்பத்தையும் விளக்கி தஞ்சை வல்ல மாநாட்டின் 18 சிடிக்களையும் நொடிப்பொழுதில் கைபேசியில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் முறையை விளக்கினார்.
இறுதியாக மையத்தின் துணை செயலாளர் சபீர் அஹ்மத் அவர்கள் மையத்தின் உறுப்பினர் படிவத்தை அனைவரும் பூர்த்தி செய்து அங்கத்தினாராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.மையத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இத்துடன் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.

கத்தர் இந்தியன் தவ்ஹீத் மையத்தியற்கு சிறப்பு விருந்தினர் வருகை



கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவிலும் “”குர்ஆன் கூறும் வரலாற்று நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் “”நபிதோழியர்கள் வாழ்கை வரலாறு” என்ற தலைப்பிலும் சிறப்பு பயான்கள் நடந்த வருகிறது.கடந்த வார வியாழன் இரவு 24-07-2008அன்று நமது மையத்தின் அழைப்பின் பேரில் பன்மொழி இஸ்லாமிய அழைப்பு மையமான “ கத்தர் கெஸ்டு சென்டரின் ” தாயிக்களின் ஒருங்கினைப்புகுழுத் தலைவர் சகோதரர்; அப்துர்ரஹ்மான் மனாசிக் அவர்கள் வருகை தந்தார்கள். அவ்வமையம் நடந்த உபசரிப்பில் மையத்தின் நிர்வாகிகள் விருந்தினரை வரவேற்று மையத்தின் தாவா பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் விளக்கி கூறினார்கள்.மேலும் தஞ்சை வல்லத்தில் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மக்கள் திரண்டு வந்த காட்சிகளை அவருக்கு காண்;பிக்கப்பட்டது.பின்னர் ஞஐவுஊஅரங்கில் வந்திருந்த மக்களிடம் அரபியில் தாவாவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.அவருடைய உரையை மையத்தின் தாயி சகோதரர் மௌலவி நஜ்முல் ஹ_சைன் மொழிபெயர்ப்பு செய்தார்.