ஞாயிறு, 25 அக்டோபர், 2015

"ஷிர்க்" எனும் மன்னிக்கப்படாத பாவம்


"ஷிர்க்" எனும் மன்னிக்கப்படாத பாவம்

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக் கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான் செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின், அப்பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தாகும்.

ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில் மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என கூறும்போது, அது மகா கொடிய பாவம் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116)

மற்றோர் இடத்தில்: எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72)

ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய பாவமாகும் என்பது இந்த இறை வசனங்கள் மூலம் தெரிய வருகின்றது.

ஷிர்க் என்றால் என்ன?

இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது கட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போது தான், அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.

ஷிர்க் என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும் தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள், இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு விடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா? எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.

ஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படைப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க். முஸ்லிம்கள் அனைவருக்கும் லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.

இதற்கு நேர் மாறுபட்டதுதான் ஷிர்க். அதாவது வணக்கதிற்கு தகுதியற்ற, அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது, அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும்சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் இவர்கள் எல்லோரும் சமமானவர்களே. மலக்கானாலும், நபியானாலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான். எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கத்திற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.

வணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்குச் செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் வணக்கம் என்று சொல்லப்படும். இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும். அவர்கள் காண்பித்தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பல வகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலீமத்துத் தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், அறிவு தேடுதல் இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.

இது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதுதான் ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும்பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.

உதாரணமாக இறந்துபோன அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப் பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹூல்ஹமீதே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும் (அல்லாஹ்விற்காக நேர்ந்து அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானதுதான்). அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக் குர்பானி(பலி) கொடுப்பேன், என் காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் பெரும் பாவமாகும்.

இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்து வரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள்! யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்!

முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்டுக் கூறப்பட்டுள்ள என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாழிராகி உதவுகிறேன் என்ற பொருள் கொண்ட யாகுத்பா என்றகவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறார்கள்! இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள்! குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே! என்னைக் காப்பற்றுங்கள்! என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன் என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.

இவைகள் எல்லாம் ஷிர்க்கான செயல்களாகும். இது போன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை வைப்பவர்களாவர்கள். இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்த தவறான நம்பிக்கையிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.

இணைவைத்தலின் தீய விளைவுகள்: அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான்.

பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6:88)

மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான். (அல்குர்ஆன் 4:116)

ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள், மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஷிர்க்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹராமாக்கிவிட்டான்.

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள்! நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

பொருளற்ற வாதம் 

ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து வருகின்றீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே? என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுகன்றோ ஒப்பிட்டு விட்டார்கள்! அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை. இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியாதவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்: அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப்படுத்துகின்றோம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்?

ஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88, 10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக அணுகமுடியாது! இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

அவர்களிடம் இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து பேசுகின்றனர் எனக் கூறினார்கள். (அல்குர்ஆன்10:18)

இதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள். (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி)  நூல்: புகாரீ, முஸ்லிம்)

இன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.

அவர்களிடம் கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள். அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும் உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள்.

இப்போது சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா? அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள்! நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன் யாருமில்லை என்று தன் திருமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள் செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

உங்கள் இறைவன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள்! (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன் 40:60)

இஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மௌலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.

தங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.

உங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான். என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர் யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே! எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே! என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே! எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை?

அந்தோ பரிதாபம்! அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா? இல்லையா? என்று சிந்தித்துபாருங்கள்! அல்லாஹ் ஏன் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்! பிறருக்கும் சொல்லுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.

நன்றி: READISLAM.NET

சனி, 17 அக்டோபர், 2015

சங்கைமிக்க முஹர்ரம் மாதம்


புது வருடமும் புனித பணிகளும்

மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் நம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.

முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி? அது எத்தனை? எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.

முஹர்ரம் மாதம் சங்கைமிக்கதாகும்

நபியவர்கள் கூறினார்கள் ‘ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|’ (முஸ்லிம்:1982)

இம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது ‘முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும்' என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)

அதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.


இது கட்டாயக் கடமையல்ல

இந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.

அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹிலியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷுரா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில் நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)

எனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.

இதை எப்போது நிறைவேற்ற வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷுரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர். அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே! என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்” (புஹாரி:2004)

நாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் நம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.

எத்தனை நோன்புகள்?

முஹர்ரம் நோன்பு பிறை 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ்! வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் “நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)

இந்நோன்பின் சிறப்புக்கள்

  • இத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.
  • முன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.
  • மூஸா (அலை) அவர்களை கண்ணியப் படுத்துதல்.
  • யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.
ஆகியவை இந்நோன்புக்குரிய சிறப்பம்சங்களாகும்.

இத்தினத்தில் செய்யக்கூடாதவை

குறிப்பாக “ஷீஆ”க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹுசைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி “யா ஹுசைன் யாஅலீ” என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து, ஆடைகளை கிழித்து, வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து, அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும், ஆடையை கிழித்துக் கொண்டும், அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல”.(புஹாரி:1212)

முஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆக்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.

இன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாறியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.

இந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும்! இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா? அதில் என்ன தவறு? என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்!

அவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? என்று கேட்கப் படும்.”(முலக்:8)

அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டீஸ் - உருது


பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

அதனை விளக்கும் உருது நோட்டீஸ்:வியாழன், 8 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015


ஏக இறைவனின் திருப்பெயரால்...

வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்கள் .

ஏராளமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......ஸவூதி மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி தற்பொழுது சிறப்பாக ஆரம்பமாகி நடை...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

நரகத்தின் கொடூரங்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015

யார் வெற்றி பெற்றவர்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015

QITC கிளைகளில் 02-10-15 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப் பிறகு நடைபெற்ற பயான்கள்QITC கிளைகளில் 02-10-15 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப் பிறகு பயான்கள் நடைபெற்றன.

ஏராளமான சகோதர சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அபூ நக்லா, தப்ஃனா, வக்ரா (1), முந்தஸா, அல் அதிய்யா, கராஃபா, சலாத்தா ஜதீத், பின் மஹ்மூத், ஹிலால், அபூ ஹமூர், லக்தா, கர்தியாத் மற்றும் அல் சத் கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/qatartntj/

கத்தர் மண்டல- அபூ நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வப...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகா...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்.بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகா...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி ...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான். بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

1கத்தர் மண்டல- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வப...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......கத்தர் மண்ட...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்.بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Monday, October 5, 2015

QITC மர்கஸில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழச்சி 01-10-2015


ஏக இறைவனின் திருப்பெயரால்...

வியாழன் மாலை (01/10/2015) QITC மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" எனும் இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழச்சி நடைபெற்றது.

இதில் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு
தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மவ்லவி.K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
அழகிய முறையில் பதிலளித்தார்கள்.

ஏராளமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" சிறப்பு நிகழ்ச்சி. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...தற்பொழுது கத்தர் மண...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Thursday, October 1, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - (2015-10-01)கத்தர் மண்டலம் பதிலளிப்பவர் மவ்லவி. K.M.அப்துந் நாஸிர் MISc
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Saturday, October 3, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - (2015-10-01)கத்தர் மண்டலம் பதிலளிப்பவர் மவ்லவி. K.M.அப்துந் நாஸிர் MISc
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Saturday, October 3, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
Posted by புதுவை மஸ்ஊத் on Friday, October 2, 2015

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015

ஸவூதி மர்கஸ் சிறப்பு நிகழ்ச்சி 02-10-2015

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் சிறப்பு நிகழச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றுகிறார்கள் .

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு :
# பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .
# இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Location Map: