இறைவனின் திருப்பெயரால்...
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
QATAR INDIAN THOWHEED CENTRE
Al Thumama, E-Ring Road,
Near Ansar Gallery,
Doha, Qatar.
Tel: +974 4431 5863
E-mail: qitcdoha@gmail.com QITC Location Map
அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், 25/10/2013 அன்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதிரி ரைஹானா சுல்தானா அவர்கள், திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் - அர் ரஹ்மான், அல் வாகிஆ, அல் ஹதீத் ஆகியவற்றின் விளக்கம் அளித்தார்கள்.
பின்னர் அதிலிருந்து கேள்வி தாள்கள் அளிக்கப்பட்டு திருக்குர்ஆன் அறிவு போட்டி நடைப்பெற்றது. இதில் ஏராளமான சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பதில் எழுதினார்கள்.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 27, 2013 |
பிரிவு: கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிகிழமை 25/10/2013 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வக்ரா 1 கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹமத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்தகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 27, 2013 |
பிரிவு: கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிகிழமை 25/10/2013 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு முஐதெர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி அன்ஸார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்தகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 27, 2013 |
பிரிவு: கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிகிழமை 25/10/2013 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு லக்தா மற்றும் கராஃபா கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்தகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 27, 2013 |
பிரிவு: கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிகிழமை 25/10/2013 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அபூஹமூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மவ்லவி இஸஸத்தின் ரிள்வான் சலபீ அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்தகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 26, 2013 |
பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை 24/10/2013 அன்று கத்தர்மண்டல சனையா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு இலங்கையை சேர்ந்த பார்த்திபன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார்.
அவருக்கு மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாமிய கொள்கை விளக்கத்தை (சஹாதா) சொல்லிகொடுத்தார்கள். அவர் தனது பெயரை இர்சாத் என்று மாற்றி கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் அவருக்கு சகோதரர் பீ.ஜே. அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும் 25-10-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே!கேள்விகள் கீழ் கண்ட குர் ஆன் அத்தியாயங்களிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் !
அத்தியாயம் : 55,56,57 ஆகிய மூன்று அத்தியாயம்
மற்றும் இரண்டு துஆக்கள் கேட்கப்படும்.
1.பயண துஆ முழுமையானது - துஆக்களின் தொகுப்பு -67 பக்கம்
2. ஈடுபடப்போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறியாத போது ஓதும் துஆ - துஆக்களின் தொகுப்பு -75 பக்கம்
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தரில் 15-10-2013 அன்று தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சிறப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்றை ஃபனார் உள்ளரங்கத்தில் பெருநாள் தொழுகைக்கு பின் காலை 7:00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கத்தர் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் அனைவரையும் வரவேற்று, சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் "வீரத்தின் விளைநிலம் நபி இப்றாஹீம் அவர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தனியொரு மனிதனாக நின்று ஏகத்துவ பிரச்சாரத்தை வீரத்துடனும் விவேகத்துடனும் சத்தியத்தை எடுத்துரைத்த விதம், இறை கட்டளைக்கு கீழ்படிதல், தியாகத்தில் உயர்ந்தவர்களாக திகழ்ந்தார்கள். இன்றும் அத்தியாகத்தை நினைவு கூர்ந்தவர்களாக நாம் கொண்டாடி கொண்டிருந்தாலும், நம் உள்ளத்தில் ஏகத்துவ உறுதியில்லாமல் இருக்கிறோம். ஆதலால் இன்றை தினத்தில் கொள்கை உறுதிபாட்டுடன் உண்மையான தவ்ஹீத்வாதிகளாக ஒவ்வொருவரும் திகழவேண்டும் என்று உறுதிமொழி எடுத்தவர்களாக கலையவேண்டும் என்று கூறினார்.
இதில் 600க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துக்கொண்டு பயனைடைந்தார்கள். இறுதியாக கத்தர் மண்டல் செயலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 10, 2013 |
பிரிவு: கட்டுரை
காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ்
தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும்
சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2)
இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் கூறும் போது...
(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள்
செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும்
விருப்பமானதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்,
'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான்.
ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில்
எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688
இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ்
மாதத்தை இறையருளால் நாம் அடைந்துள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில்
இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக
இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும்
பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.
இஸ்லாத்தின் அடிப்படைகளில்
ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து
நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை,
குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களில்
அனுகூலமாயிருப்பதை உணரலாம்.
மேலும், 'அறிமுகமான நாட்களில் அல்லாஹ்வி;ன் பெயரை
நினைவு கூர்வர்' (அல்குர்ஆன் 22:28) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்
விளக்கமளிக்கும் போது 'துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள்' என்றார்கள். (புகாரி-பாகம்1 –
பாடம் 11 - பக்கம் 731)
இந்த பத்து நாட்களைத் தொடர்ந்து வரும் 11, 12, 13
ஆகிய தினங்களை அல்லாஹ்வின் மார்க்கம் 'அய்யாமுத் தஷ்ரீக்' என்று
அடையாளப்படுத்துகின்றது.
இதைப்பற்றி நபி(ஸல்)
அவர்கள்...
(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த
நல்லறமும் 'அய்யாமுத்தஷ்ரீக்' நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட
சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று
நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு
இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969
மேலும், 'குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினைவு
கூர்வார்கள்' (அல்குர்ஆன் 2:203) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்
'அய்யாமுத் தஷ்ரீக்' என்று விளக்கமளித்தார்கள். (புகாரி பாகம்-1 பக்கம்
731
ஆக 'துல்ஹஜ்' மாதம் புனிதமான ஒன்றாக இருக்க அதன்
முதல் பத்து நாட்களிலும் அதையொட்டி வரும் 'அய்யாமுத்தஷ்ரீக்' நாட்களிலும்
நல்லறங்கள் செய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒன்றாகும். அடியார்கள் இந்த
நல்வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நலம்பயக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள்
ஹஜ், உம்ரா கிரியைகளை நிறைவேற்றுவது. ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் ஒன்பதாம் நாளான அரஃபா
தினத்தன்று நோன்பு நோற்பதும் நபி வழியாகும்.
அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல்
நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு
வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை
வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்:
திர்மிதீ 680
பெருநாள்!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை
வந்தடைந்த போது, மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த
இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்)
அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது?' எனக் கேட்டார்கள். அதற்கு
அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக
இருந்தோம்' என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக
அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும்
'அள்ஹா' (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும்
வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ்
அபுதாவுத் 1004
அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப்
பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு
பெருநாட்கள.; இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு
வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை
ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா
பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756
சூரியன் உதயமாகி தொழுவது தடுக்கப்பட்ட நேரம்
முடிந்தபின் பெருநாள் தொழுகை தொழுவது நபி வழியாகும் என்பதை புகாரி, அபுதாவுது,
இப்னுமாஜா, ஹாக்கிம் மற்றும் அல்பர்யாபி ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு
நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்:
அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னமாஜா 1070
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப்
பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள்
முதன்;முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை
முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள்.
அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை)
கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை
அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட
வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956
நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும்,
மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச்செய்யும்படி எங்களை
ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும்
(திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி
நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு
உமர்(ரலி) - புகாரி 972
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜீப் பெருநாள் தினத்தில்
தொழுகைக்கு பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையை தொழுது,
நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி
கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக)
அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பரா
பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955
நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு,
மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு
உமர்(ரலி) நூல்: புகாரி 982
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில்
தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். 'யார் தொழுகைக்கு முன்
அறுத்து விட்டாரோ அவர் மற்றொன்றை அறுக்கட்டும்!. யார் அறுக்கவில்லையோ அவர்
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்.!. என்றார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப்(ரலி)
நூல்: புகாரி 985
பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள்
(போவதற்கும், வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்: புகாரி 986
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க்
கருவிகளையும், கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ
அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள்.
நான், 'ஆம்' என்றேன். அவர்கள் என்னை தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின்
கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவின் மக்களே!
விளை யாட்டை தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்தபோது, 'உனக்கு
போதுமா?' எனக் கேட்டார்கள். நான், 'ஆம்' என்றேன். அப்படியானால் (உள்ளே) போ
என்றார்கள்' அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) - புகாரி 950
இதுபோன்ற நன்னாளில் உடலுக்கும், மனதுக்கும்
தெளிந்த ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி விளையாட்டுக்களை
ஊக்குவிப்போமாக!
பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான
கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த
தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின்
அம்சங்ளை கடைபிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!
குர்பானி!
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு
கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் அல்லாஹ்வுக்காக செய்ய
நாங்கள் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் உளுஹிய்யா (குர்பானி) வலியுறுத்தப்பட்ட
கடமையாக உள்ளது.
இந்த கடமையில் ஏழைகளுக்கு உதவும் ஓர் அம்சமும்
பொதிந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று
ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் நாயகம்(ஸல்) அவர்கள்
இக்கட்டளையை திரும்பப் பெற்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த
ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை
அறுத்து, உரித்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ
கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை யிட்டார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி), நூல்:
புஹாரி(1717)
நாள் : 11/10/2013 மாலை 6 மணிக்கு இடம் : QITC மர்கஸ்
கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !
"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரைகள் மலராக வெளியிடல் நிகழ்ச்சி வரும் 11/10/2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் இந்த தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வரவும் மற்றும் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் மறந்து விடவேண்டாம் !
பதிலளிப்பவர் :
பேராசிரியர் M .I சுலைமான்
மாநில பொருளாளர் - TNTJ
கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !
நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது .
அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை நாம் அறிவித்திருந்தோம். அதற்கு பிறமத சகோதரர்களிடமிருந்து 15க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.
அந்த கட்டுரைகளை QITC-யின் ஹஜ்ஜுப் பெருநாள் மலராக வெளியிடும் விதமாக "இஸ்லாம் ஓர் இனிய மாரக்கம்" நிகழ்ச்சி வரும் 11/10/2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிறமத சகோதர சகோதரிகளையும் QITC மர்கஸ் மனமகிழ்ந்து அழைக்கிறது.
குறிப்பு :
1. வாகனம் தேவைப்படும் சகோதரர்கள் மண்டல துணை செயலாளர்கள் ஷேய்க் அப்துல்லாஹ், காதர் மீரான் அவர்களை தொடர்பு கொள்ளவும் 66963393, 70453598
2. பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : 55532718, 66579598
பதிவர்: QITC web
| பதிவு நேரம்: அக்டோபர் 06, 2013 |
பிரிவு: சிறப்பு சொற்பொழிவு
அல்லாஹுவின் பெருங்கிருபையால் 04/10/2013 அன்று மாலை வெள்ளிக்கிழமை 6:00 மணியளவில் ஹஜ் பெரு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கத்தர் மண்டலத்தலைவர் சகோதரர் மஸ் ஊத் அவர்கள் வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று, சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாரு கேட்டுக்கொண்டார்.
முதலாவதாக "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்தாக மவ்லவி முஹம்மது அலி அவர்கள் "பகுதறிவுவாதிகள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியின் அடுத்தாக, கத்தர் மண்டலம் மாணவ மாணவியர்களுக்காக "இஸ்லாமிய அடிப்படை கல்வி" என்ற ஆறு மாத பயிற்சி வகுப்பை நடத்தியது. இதில் தேர்வெழுதி தேர்ச்சிப்பெற்ற 28 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்களை, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர், "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். இறுதியாக தாயி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அன்ஸார் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.
இதில் நானூற்றுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கத்தர் மண்டலம் உணவுக்குழு வருகைதந்திருந்த அனைவருக்கும் உணவை தாயரித்து வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்...
مركز التوحيد الهندي بقطر கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/
بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
சவூதி மர்கஸில் QITC -யின் சிறப்பு நிகழ்ச்சி-04/10/2013
மற்றும்
சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
நாள் : 04/ 10 / 2013 வெள்ளிக்கிழமை
நேரம் :மாலை 6:30 மணிக்கு
இடம் :சவூதி மர்கஸ் உள்ளரங்கம்
கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மாலை 6 : 30 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில் மக்ரிபு தொழுகை யுடன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் மவ்லவி M.I சுலைமான் அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
தலைமை உரை:
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ
தலைப்பு - அல்லாஹ்வே போதுமானவன்
சிறப்புரை:
1 . மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc
தலைப்பு - பகுத்தறிவாதிகள் யார் ?
2 . பேராசிரியர்: மவ்லவி, M.I சுலைமான்
தலைப்பு - மன்னரை வாழ்வு!
குறிப்பு:
1 . பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .
2. இஸ்லாமிய அடிப்படைக்கல்வி பாகம் 1ல் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .
வாகனத்தொடர்புக்கு :
சகோ : காதர் மீரான் - 70453598
சகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புடன்
எம். முஹம்மத் அலி MISc
மண்டல செயலாளர் -கத்தர்-66579598
مركز التوحيد الهندي بقطر கத்தர் இந்திய தவ்ஹீத் மையம், QATAR INDIAN THOWHEED CENTRE[QITC], POST BOX NO: 31579, DOHA-QATAR. Tel/Fax:00974 - 44315863