வியாழன், 31 மே, 2012

"நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் பெண்கள்!"


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

"நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் பெண்கள்!"


உலகிலே பெண்களுக்கான சுதந்திரம், கண்ணியம், கெளரவம், பாதுகாப்பு போன்ற உன்னத உரிமைகைளை உலகமே வழங்காத போது, ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களுக்கென வழங்கி, பெண்களும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் என்பதை பறைசாற்றியது.

"ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.' (அல்குர்ஆன் 07:26)

அதில் ஒரு அமசம்தான் ஹிஜாப் அணிவது. இது இஸ்லாம் பெண்களுக்கென வழங்கிய ஓர் சுதந்திரமான சட்டமாகும். அறைகுறை துணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொறுகிக் கொண்டு, இதுதான் சதந்திரம் என்று நடமாடும் மானம் கெட்ட அநாகரீக கூப்பாடிகளுக்கு மத்தியில், வலைத் தளங்களிடையே ஹிஜாப் ஓர் விமர்சன அம்சமாக நோக்கப் படுவதை பார்க்கிறோம்.

மேற்கத்தேய நாடுகிளில் ஹிஜாபுக்கெதிரான சதித் திட்டங்கள் தீட்டப் படுவதும், பின் அதற்கான வாக்கெடுப்புகள் நடந்தேறுவதும், பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அவைகள் இரத்துச் செய்யப்படுவதுமாய், சமீபத்திய நடப்புக்கள் நமக்குச் சொல்லி நிற்கிறது. இத்தனைக்கும் மத்தியில் நம் முஸ்லீம் பெண்களில் அசமந்தப் போக்குள்ள சிலர், இதனை ஆதரிப்பது போல், ஹிஜாபுகளினால் தன்னை அப்பட்ட விபச்சாரி என்று, சொல்லாமல் சொல்வதை, அவர்களின் ஆடையணிவதின் இலட்சணத்தை வைத்து, யாரும் அறிந்து கொள்லளாம்.

தன் கணவனிடம் காட்ட வேண்டிய அழகுகளை தெருவில் செல்லும் தெரு நாய்களிடம் காட்டி தன் அழகு மெச்சப்படுவதை அவள் விரும்புவதையும், அதற்கு கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் சூடு சுரணையற்று இருக்கும் கணவன்மார்களையும் பார்க்கும் போது நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிஜமாவதை காணமுடிகிறது.

"உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

அறியாமைகால "யூத கிறித்துவ" அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று எண்ணும் பொழுது வெட்க்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

நபியவர்கள் கூறினார்கள், 'இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

குறைந்துவிட்ட ஆடை:

இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும், கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேறுவதுதான் வேதனையிலும் வேதனை.

பாலுனர்வை தூண்டுதல்:

ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?

திரைஅரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறது

ஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ, அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள், மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும், இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல, மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.

குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையணியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும். இப்படிப்பட்ட கழிசெடைகளைப்பற்றிதான் நபி ஸல் அவர்கள், உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது. பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்] 

அன்று நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு, இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.

இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:

ஒழுக்கத்திலும், பண்பாட்டிலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத, கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி, அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவலநிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும், மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும், இறுக்கமான பனியன்களும், அணிந்துகொண்டு மார்புகள்மீது துணியே (கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும், கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே? என்று எண்ண தோன்றுகிறது.

இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்[?] தடம்புரண்டு தாவிவிடுகின்றனர். இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.

நமது தந்தை ஆதம் நபி (அலை) அவர்களிடமும், தாய் ஹவ்வா (அலை) அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது...

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]

நபி ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால், ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர். உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.

ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்தபிறகும் அதில் மேம்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

நபி ஸல் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:

'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்: புஹாரி, எண் 9.

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும். எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும். ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாகவும் இருக்கவேண்டும்.

வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம். இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.

அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:

ஜாஹிலிய்யத்திலும் இது போன்ற அறை குறை ஆடை அரங்கேரி இருந்த போது, அல்லாஹ்வின் வேத வசனங்கள் அப்பெண்களின் செவிகளில் விழுந்த பொழுது, தங்களின் திறந்த வெளி பெண் உடல்கள் பாதுகாப்பு வலயங்கள் போன்று ஆடையணிய ஆரம்பித்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லி நிற்கிறது.

அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும், இறையச்சத்தையும், அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள், (ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால், கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி, உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான சவ்தா (ரலி) ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான் (இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் அவர்கள், சவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில்! அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]

ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146 ) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (4:13)

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (4:14)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124)

இறைவனுக்கும்,அவனது தூதருக்கும்,எவர் மாறு செய்கிறார்களோ!அவர்களின் நிலை குறித்தும், எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான். எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு (இறைவனுக்கு) கட்டுப்பட்டும், நபிஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபி ஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.

இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.

நன்றி: சகோ. முபாரக் / மௌலவி. அன்ஸார் மஜீதி


"..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்(05,02)

ஞாயிறு, 27 மே, 2012

25-05-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

மாதந்தோறும் நடைபெறும் ,கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 25-05-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜூன் மாத வியாழக்கிழமைகள் பயான் பட்டியல், ஜூன் மாத வெள்ளிக்கிழமைகள் பயான் பட்டியல், சனயிய்யாவில் வியாழக்கிழமை பயான் ஆரம்பித்தல், உம்முசயீதில் கேம்ப் பயான் ஆரம்பித்தல் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.மண்டல த'அவா குழு ஒருங்கிணைப்பாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ,பதினான்கு பேர் கலந்து கொண்டனர்.

இன்ஷா அல்லாஹ்,அடுத்த கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம் வரும் 29-06-2012 அன்று, இதே இடத்தில், இதே நேரத்தில் நடைபெறும்.

அல்ஹம்துலில்லாஹ்.

25-05-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் அருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  (QITC)  சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", மண்டல [QITC] மர்கசில் 25-05-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி. வஜியத் நிஷா அவர்கள் "சோதனைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "நல்ல தோழியர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.

25-05-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 25-05-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில்- சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
3 .அல் அத்தியா பகுதியில்–   மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
4 .முஐதர் பகுதியில்–  டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில்–   சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில்- சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்- சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில்- சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.சலாத்தா ஜதீத் பகுதியில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.கர்வா கேம்பில்- மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.டொயோட்டா கேம்பில் - மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

4.
6.
9.
10.

24-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 24-05-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.


அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி, ரிழ்வான் அவர்கள் "நம் எழுதுகோல்களுக்கு வேலை கொடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

24-05-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர்-அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள "தாருல் அர்கம்" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 24-05-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை,கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில், மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் "ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் தங்களது  குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 24 மே, 2012

"உலக அதிசயங்களும் குர் ஆனும்" பயான் வீடியோ - மௌலவி, முஹம்மத் தமீம் MISc

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.13/04/2012 அன்று ஃபனாரில் நடைபெற்ற QITC  யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில், QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம் MISc அவர்கள் "உலக அதிசயங்களும் குர் ஆனும்" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

"உலக அதிசயங்களும் குர் ஆனும்"YOUTUBE-லிருந்து வீடியோ நீக்கப்பட்டு விட்டது.
இன்ஷால்லாஹ் விரைவில் நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.


25-05-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


மாதாந்திர பெண்கள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
அழைப்பிதழ்


நாள் : 25/05/2012 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ், வரும் வாரம் 25/05/2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் தகவலுக்கு:
சகோ. முஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

திங்கள், 21 மே, 2012

18-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 18-05-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:40 மணி முதல் 7:40 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பனிரெண்டாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "வருங்கால வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 
இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு நான்கு வார  இடைவெளிக்குப் பிறகு, 22-06-2012 முதல் இம்மர்கஸில், மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.

இஸ்லாத்தை ஏற்றல்
சிறப்பம்சமாகஇந்நிகழ்ச்சியின் இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சார்ந்த சகோதரர். சிவானந்தம்இஸ்லாத்தில் நுழைந்துரியாஸ் என மாறினார். அவருக்குமௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் 'ஏகத்துவ உறுதிமொழியைவிளக்கிக் கூறினார்கள்.

 
மேலும் அவருக்கு பின்மஹ்மூத் கிளை பொறுப்பாளர். வழுத்தூர் ஜஹீர் அஹ்மத் அவர்கள் மார்க்க விளக்க புத்தகங்களை வழங்கினார்கள்.

18-05-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் - சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
4. முஐதர் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில் - சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி, லாயிக்அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


17-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,  

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 17-05-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர்  சகோதரர்.அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலஅழைப்பாளர் மௌலவி,அன்ஸார் அவர்கள் "நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கிக்கொள்ளும், நம் பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் "அல்லாஹுவை நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும்,அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.