புதன், 31 அக்டோபர், 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 01/11/2012 வியாழன்


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - (QITC) நடத்தும்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 


  • நாள்: 01 /11 /2012 வியாழன்
  • நேரம்: இன்ஷா அல்லாஹ் சரியாக மாலை  07.30   மணிமுதல் 10.30 வரை
  • இடம்: கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் உள்ளரங்கம் (QITC மர்கஸ்) துமாமா (ஏர்போர்ட், LG ஷோரூம் பின்புறம்)


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

வியாழன்  மாலை  (01/11/2012) QITC மர்கஸில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" எனும் இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழச்சி நடைபெற உள்ளது.

உங்கள் கேள்விகளுக்கு தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள மவ்லவி. முஹமத் அல்தாபி  அவர்கள் பதிலளிக்கவிருக்கிறார்கள் . 

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய   உங்களை அன்போடு அழைக்கின்றோம்.


குறிப்பு :
  1. பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .
  2. முதலில்  வருபவருக்கே முன்னுரிமை (first come first serve) என்ற அடிப்படையில் கேள்வி கேட்க அனுமதிக்கப்படும்.
  3. எண்கள் (டோக்கன்) வழங்கப்பட்டு  அதன் அடிப்படையில் கேள்வி கேட்க  அனுமதிக்கப்படும்.
  4. நேரத்தை கணக்கில் கொண்டு கேள்விகளின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படும். 
  5. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


28-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் "இரத்ததான முகாம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தியாக திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலமும்  [கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - QITC], ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனும் [HMC] இணைந்து 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் "இரத்ததான முகாமைநடத்தியது.

தோஹா QITC மர்கஸில் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட சகோதர - சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில், பங்கு கொண்ட 107 பேரில் 49 சகோதரரர்கள் தகுதி பெற்று இரத்த தானம் கொடுத்தார்கள். 5 சகோதரிகள் உட்பட 58 பேர் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் தகுதி பெறாததால் இரத்த தானம் கொடுக்க முடியாமல் போனது.

இந்த சமுதாய பணியை பாராட்டி ,ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்திற்கு  "பாராட்டு சான்றிதழ்" வழங்கி சிறப்பித்தார்கள்.

கத்தர் நாட்டில் தமிழ் பேசக்கூடிய இயக்கங்களில்,இது போன்ற இரத்த தான முகாம்களை ,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் மட்டும் தான் நடத்தி வருகிறது -என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - திருக்குர்ஆன் 5:32

அல்ஹம்துலில்லாஹ்.











திங்கள், 29 அக்டோபர், 2012

26-10-2012 கத்தர் மண்டல "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி 26-10-2012 வெள்ளி  காலை  7 மணி முதல் 8  மணி வரை  "கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை [ஃபனார்]" அலுவலக  கட்டிடத்தில்  உள்ள கேட்போர் கூடத்தில், மண்டல  தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தியாகத்திற்கு தயாராகுங்கள்" என்ற தலைப்பில் இப்ராஹீம் (அலை), நபி(ஸல்) மற்றும் சஹாபாப்பெருமக்கள் ஆகியோர் செய்த தியாகங்களை தெளிவாக எடுத்துரைத்து, நாமும் தியாகம் தொடர்ந்து செய்ய சபதம் எடுப்போம் என வலியுறுத்தி சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

மண்டல இணைச் செயலாளர் சகோதரர். எம்.எஸ்.ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கிவிட்டு,பின்னர் நன்றியுரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம்   மற்றும் நண்பர்களோடு  கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.






25-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரஃபா நாள் நோன்பு திறப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம் சார்பாக, மண்டல QITC மர்கஸில், 25-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை, அரஃபா நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் தனித்துவம்" என்ற தலைப்பில் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் - அவற்றின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் - அவற்றின் நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற பல விசயங்களை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், 80 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.





24-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் "தாயீக்கள் தர்பியா"

அல்லாஹுவின் அருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் சார்பாக, மண்டல QITC மர்கஸில், 24-10-2012 புதன்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை, தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்  சகோ.முஹம்மத் அல்தாஃபி  அவர்களால் "தாயீக்கள் தர்பியா"  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்-தாயீக்கள்-பொறுப்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களை, மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதில், இந்நாள்-முன்னாள் நிர்வாகிகள், கிளைப் பொறுப்பாளர்கள், மண்டல பேச்சாளர்கள் மற்றும் தஅ'வாக்குழு உறுப்பினர்கள் 51 பேர் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.



சனி, 27 அக்டோபர், 2012

28-10-2012 ஞாயிறன்று QITC மர்கஸில் "மாபெரும் இரத்ததான முகாம் " - அழைப்பிதழ்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே,

தியாகத் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் QITC யும் - HMC யும் இணைந்து நடத்தும்,  "மாபெரும் இரத்ததான முகாம்", இன்ஷா அல்லாஹ் வரும் 28-10-2012 ஞாயிறன்று, மதியம் 2 மணி முதல், நமது QITC மர்கஸில் நடைபெற இருக்கிறது. ஆகவே, அனைவரும் வந்து இரத்ததானம் செய்து,மனித உயிரை காக்க உறுதுணை புரியுமாறு வேண்டுகிறோம்.


குறிப்பு :
1.கத்தர் ID காப்பி அல்லது விசா காப்பி,இரத்ததான அட்டை மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் கலர் ஃபோட்டோ  மறவாமல் கொண்டு வரவும்.



2.பெண்களுக்கான நேரம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே!


சனி, 20 அக்டோபர், 2012

19-10-2012 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC], "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 19-10-2012 வெள்ளி மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகியவை நடத்துவது குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 11 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


19-10-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 19-10-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரதிய்யாத் பகுதியில் - சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






18-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 18-10-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணை பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "முத்தான முஸ்லிம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,லாயிக் அவர்கள், "நாடறிந்த நட்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் தமீம் M.I.Sc., அவர்கள் "உணவின் ஒழுங்குகள் " என்ற தலைப்பில் கேள்வி-பதில் முறையில் நடத்தினார்கள்.


பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இன்றைய தினம், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc., அவர்கள் குழந்தைகளுக்கான 'தர்பியா வகுப்பை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.





வியாழன், 18 அக்டோபர், 2012

ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் - அழைப்பிதழ்

26-10-2012 வெள்ளி பெருநாள் தொழுகைக்குப் பிறகு
ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி
(பெருநாள் தொழுகை 
காலை 5:53 மணி)




28-10-2012 ஞாயிறு மதியம் 2:00 மணி முதல்
மாபெரும் இரத்த தான முகாம்




02-11-2012 வெள்ளி மாலை 5:00 மணி
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்






Fanar Location Map


ஞாயிறு, 14 அக்டோபர், 2012

12-10-2012 கத்தர் மண்டல மர்கசில் "சிறப்பு ஆலோசனைக் கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] ,ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்ச்சிகள் குறித்த "சிறப்பு ஆலோசனைக் கூட்டம்", 12-10-2012 வெள்ளி இரவு 7:30 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல தலைவர் ,டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "கூட்டத்தின் முக்கியத்துவம்" குறித்து உரையாற்றினார்கள்.

தொடர்ந்து,மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள், "மாற்று மதத்தாரை மாற்றுங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பின்பு ,மண்டல த'அவாக்குழு உறுப்பினர் சகோதரர்.மஸ்ஊத் அவர்கள் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு பிற மதத்தாரை எப்படி அழைப்பது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc. அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, இறுதியாக துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "நன்றியுரை" நவின்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.


=========================================================================
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/