புதன், 30 மார்ச், 2011

31-03-2011,வியாழன் மர்கஸ் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால்...

வாராந்திர பயான் நிகழ்ச்சி, இன்ஷா அல்லாஹ், 31/03/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் நடைபெறும்.

டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் தலைமை தாங்குவார்கள்.

சகோ.ஷாஜஹான், மௌலவி. அன்சார் மற்றும் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.


சிறப்பு விருந்தினர்:

சிறப்பு விருந்தினராக சவூதி மர்கஸ் இயக்குனர் அஷ்-ஷைக் .பவ்வாஸ் பின் அப்துல்லாஹ் அல்-காமிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.

பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.

திங்கள், 28 மார்ச், 2011

25-03-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான்

அல்லாஹுவின் அருளால் ,ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்
நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, 25-03-2011 அன்று மாலை சரியாக 7:00 மணிக்கு துவங்கி 8:00 மணி வரை நடைபெற்றது.
இதில்,சகோதரி.கதீஜா அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும், சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் "அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் 42 சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கடந்த முறை நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ,"இஸ்லாமிய புத்தகங்கள் " பரிசாக வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.

24-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அல்லாஹுவின் அருளால், மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 24/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது.


மார்க்க பயான்
 
டாக்டர். அஹ்மத் இபுறாஹீம் அவர்கள்- "நபித் தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில், "ஹிந்த் பின்த் உத்பா[ரலி]" அவர்களுடைய வரலாற்றை கூறினார்கள்.
 
மௌலவி. முஹம்மது அலி அவர்கள் "இயற்கை சீற்றங்களும் ,இஸ்லாம் தரும் படிப்பினைகளும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
எப்போதும் போல், சிறார்களுக்கான வகுப்பு, சகோ.அப்துல் கபூர் அவர்களால் நடத்தப்பட்டது.
 
அகீதா வகுப்பில் கலந்து கொண்டு ,அதிக மதிப்பெண்கள் பெற்று ,சான்றிதழ் பெற்றவர்களுக்கு Sheikh  Eid Social Center[Sheik Eid Charitable Association] சார்பாக, 'கைக்கடிகாரம்' பரிசாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும்பெண்களும், சிறார்களும்  கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 23 மார்ச், 2011

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்

இறைவனின் திருப்பெயரால்...



மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்
இன்ஷா அல்லாஹ்
நாள்: 25-03-2011 வெள்ளிக்கிழமை
மாலை 7:00 மணிக்கு

இடம்: QITC மர்கஸ், அல் துமாமா, தோஹா
(‘E’ ரிங் ரோடு, பாராசூட் சிக்னல் அருகில், ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்)

ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில்
நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
கூடுதல் விபரங்களுக்கு:
சகோதரர் A. முஹம்மத் இலியாஸ்
துணைப்பொருளாளர் QITC, பெண்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
55187260 / 44311862
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” - திருக்குர் ஆன் 3:104

ஞாயிறு, 13 மார்ச், 2011

10/03/2011 - வியாழக்கிழமை பயான் நிகழ்ச்சி



வாராந்திர பயான் நிகழ்ச்சி 10/03/2011 அன்று இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. S. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது.
மார்க்க பயான்


சகோ. Dr. அஹ்மத் இபுறாஹீம் - "நபித் தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பிலும்,

சகோ. அன்சார் மௌலவி - "துவாக்களின் சிறப்புக்கள்" என்ற தலைப்பிலும்,


சகோ. அப்துஸ்ஸமத் மதனி - "இறைவனின் சாபத்திற்குரியவர்கள்" என்ற தொடர் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர் சகோ. ஜலாலுதீன் - தலைமைக்கு நமது பங்களிப்பின் அவசியம் பற்றி சிற்றுரையாற்றினார். மேலும் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோ. அப்துல் ஹாலிக் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

புதிய நிர்வாகிகள் அறிமுகம்
தேர்தல் குழுத் தலைவர் சகோ. அப்துஸ்ஸமத் மதனி - புதிய நிர்வாகிகள்அறிமுகத்தின் அவசியத்தை வலியுறுத்தி சகோ. Dr. அஹ்மத் இபுறாஹீமை QITCயின் புதிய தலைவராக அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலைவர் மற்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அறிவிப்புகள்
இறுதியாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள வாக்குரிமை பற்றியும், வாக்களர் பட்டியலில் நமது பெயரை சேர்ப்பது பற்றியும் (Form 6A) அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 9 மார்ச், 2011

04-03-2011 அன்று நடைபற்ற QITC பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு

QITC நிர்வாகிகள் - 2011

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர். அப்துஸ்ஸமத் மதனி (QITC - தேர்தல் குழுத்தலைவர்) அவர்களின் தலைமையில் 04-03-2011 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு QITC - மர்கஸில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களால் 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


நிர்வாகிகளின் பெயர் பட்டியல்:
  1. Dr. அஹ்மத் இபுறாஹீம் - தலைவர்
  2. M. ஜியாவுதீன் - துணைத்தலைவர்
  3. M. முஹம்மத் அலி - செயலாளர்
  4. M.S. ஃபக்குருத்தீன் - இணைச்செயலாளர்
  5. J. பீர் முஹம்மத் - பொருளாளர்
  6. A. முஹம்மத் இலியாஸ் - துணைப்பொருளாளர்
  7. A. சாக்ளா - துணைச்செயலாளர்
  8. S. தஸ்தகீர் - துணைச்செயலாளர்
  9. M. ஷாஜஹான் - துணைச்செயலாளர்
  10. M.I. பக்குருத்தீன் - துணைச்செயலாளர்
  11. S. காதர் மீரான் - துணைச்செயலாளர்
  12. A. அப்துல் பாஸித் - துணைச்செயலாளர்
  13. M. சையது அபுதாஹீர் - துணைச்செயலாளர்

QITC நிர்வாகிகள் - 2009