வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
27-08-09வியாழன் இரவு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுவர் ஜியாவுதீன் அவர்கள் " திருகுர்ஆன் திருமறையை தினமும் ஓதுங்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாயிக் அவர்கள் "ரமலான் தரும் பாடம்" என்ற தலைப்பிலும் ,மௌலவி லாபிர் மதனி அவர்கள் " உறவை பேணுதல்" என்ற தலைப்பிலும் மௌலவி அன்ஸார் அவர்கள் " உணர படாத தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். " பித்ரா எனும் தர்மம் " என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். ஒவ்வரு சொற்பொழிவுக்கு பின்னர் , சிறுவர் சிறுமியர்கள் குர்ஆனிலிருந்து தங்களுக்கு தெரிந்த சூராக்களை ஓதினார்கள். இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் நடத்தினார்கள். சகோதரர் மஸ் ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். இரவு 10:30 மணிக்கு தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் விறுவிறுப்போடு நடைபெற்றது . வருகை தந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கத்தரில் நடந்த "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"
கத்தார் இந்திய தவ்ஹீத் மையம் கடந்த வெள்ளிகிழமை மாலை பதினாலாம் தேதி " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் , சகோதரர் முஹம்து அல்தாபி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவான முறையில் பதில் அளித்தார்கள்.கேள்வி கேட்ட அனைத்து மாற்று மத சகோதர சகோதிரிகளுக்கு திருகுர்ஆன் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் " திருமறையை தாங்களும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்ட மாற்று மத அன்பர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அரங்கத்தின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி ,இருக்கைகள் இல்லாமல் பலர் சுவர் ஓரமாக நின்று நிகழ்ச்சியை கேட்டுகொண்டிருந்தர்கள் . நிற்கவும் இடம் இல்லாமல் பாதைகளினிடையே மக்கள் அமர்ந்தார்கள் .
மேலும் கூட்டம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நிர்வாகிகள் , துரிதமாக செயல்பட்டு மர்கசிலிருந்து நூறு பிளாஸ்டிக் இருக்கைகளை கொண்டுவந்து போட்டனர்.
வளைகுடா நாடுகளின் பள்ளி விடுமுறை என்பதால் சுமாரான கூட்டம் தான் வரும் என்று எண்ணிய நிர்வாகிகள் அதற்கேற்ற ஏற்பாட்டுடன் தான் இருந்தனர். கூட்டம் இரட்டிப்பாக வந்தால் திக்குமுக்காடிய நிர்வாகிகள் நிகழ்ச்சியின் நடுவே உணவு ஆர்டரை கூட்டினர்.
பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் , சிறய வேன்கள் தோஹாவின் பல பாகங்களிருந்தும் சகோதரர்களை கொண்டுவர பயன்பட்டன. வாகன போக்குவரத்து ஏற்பாட்டை சகோதரர் மீரான் அவர்களும் ,சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்ககளும் சிறப்பாக செய்து இருந்தனர். தொண்டர்கள் ஒருங்கிணைப்பை சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்கள் கவனித்து கொண்டார்கள். " Islam for Global solutions" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் சிறப்பான முறையில் பணிகளை கவனித்து கொண்டார்கள் .
துணை செயலாளர் முஹம்மது அலி MISC அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அஹ்மத் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். பொருளாளர் இப்றாஹீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல மாற்று மத அன்பர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

-------------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

சனி, 8 ஆகஸ்ட், 2009

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (அழைப்பு)பல்வேறு சமூகங்களிடையே இணக்கத்தையும் , புரிந்துதுணர்வையும் ஏற்படுத்தவும் குறிப்பாக, தமிழகத்தில் மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளதை அகற்றிடவும் , இஸ்லாமிய இறை கோட்பாடுகள் , தற்கால முஸ்லீம்கள் ஒழுகும் நடைமுறைகளே இஸ்லாம் போதித்தது என விளங்கி வைத்துள்ள முஸ்லிமல்லாதவர்களிடம் ,முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் போதித்த இறை மார்க்கமே கலப்பில்லாதது என அவர்களுக்கு விளங்க வைத்திடவும் , நம்முடைய களங்களில் அவர்களை அழைத்து அவர்கள் தொடுக்கும் அனைத்து ஐயங்களுக்கு அவர்கள் மனம் ஏற்று க்கொள்ளும் வகையில் விடையளித்திடவும் ,உள்ளங்களிடையே உலகம் உள்ளவும் சமாதனம் சகோதரத்துவம் எத்திவைக்கவும் , ஒரு சிறிய நம்மாலான முயற்சி தான்
" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " என்ற நிகழ்ச்சி .
இறைவன் நாடினால் வரும் வெள்ளியன்று பதினாலாம் தேதி, மாலை 5:30 மணிக்கு , FANAR உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கத்தர் வாழ் தமிழ் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில்
அனைவரும் தங்களுடை முஸ்லிமல்லாத சகோதரர்களை குடும்பத்தோடு அழைத்துவருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்வையிடவும்.

குறிப்பு:
வாகனங்கள் நிறுத்துமிடம் அரங்கத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.வாகன வசதி வேண்டுவோர் ,நமது அலுவலகத்தை 4315863 / 5424109 இலக்கத்தில் முன்கூட்டியே தொடர்புகொள்ளவும்.