ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

QITC நடத்திய 33வது இரத்ததான முகாம் 07-08-2020அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம்” சார்பாக 07.08.2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “33வது இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் “50 நபர்கள்” கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “82 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.

கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.

கொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இம்முகாமில் கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சித்துளிகள் 👇

🩸மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெற்றது.

🩸வழமையாக மர்கஸில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி இம்முறை நேரடியாக HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.

🩸உணவு & வாகன வசதி ஆகியவை ஏற்படுத்தி கொடுக்க முடியாத சூழலிலும் மண்டலத்தின் அழைப்பை ஏற்று அதிகப்படியான நபர்கள் வருகை தந்தனர்.

🩸குருதிக் கொடையாளர்களின்
பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கத்தர் மண்டலம்
07.08.2020

QATAR | QITC | TNTJ |BLOOD | CAMPAIGN | HMC | EMERGENCY | HUMANITIES | SAVE LIVES

Image may contain: one or more people and people standing
Image may contain: 2 people
Image may contain: 3 people, indoor

புதன், 5 ஆகஸ்ட், 2020

QITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம் 07-ஆகஸ்ட்-2020


QITC –அறிவிப்பு 👇

QITC- யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம்
(இது ஓர் மனிதநேய முகாம்......)


🎒 நாள்: வெள்ளிக்கிழமை 07/08/2020

🎒 நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.

🎒 இடம்: HMC BLOOD DONOR UNIT
🌔 *Location:* 👇 https://maps.app.goo.gl/Wt13Esto3XR314rt6

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

✍ இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 07/08/2020 வெள்ளிக்கிழமை அன்று ஹமத் மருத்துவமனை, QITC இணைந்து நடத்தும் "QITC-யின் 33-வது மாபெரும் இரத்த தான முகாம்" ஹமத் இரத்த தான பிரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 5011 1203, 66579598, 44315863
தேதி: 04-08-2020

இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்

أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا *وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ

ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' திருக்குர்ஆன் 5:32
🩸 *QITC Announcements*🩸 👇

🩸🩸 *Help Nation By Blood Donation*👆🩸🩸

🩸 *QITC- 33Th MEGA BLOOD DONATION CAMPAIGN*🩸

*This Is A Humanitarian Campaign......*

🎒 *Doha-Qatar*🎒
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

*Are You Ready To Save Lives (Donate Blood)*❓

🎒 *Date:* 07/08/2020

🎒 *Venue:* HMC Blood Donor Unit
https://maps.app.goo.gl/Wt13Esto3XR314rt6

🎒 *Timing:* 1:00 pm to 5:00 pm for Registration

*Dear Brothers and Sisters*

*Peace be up on you*

You are Cordially Invited to attend our Life Saving Program *"QITC-33th Mega Blood Donation Campaign"*

*Give(Donate) blood Save Lives*

👉 *Kindly Pass this message to others "It May Save Lives"*

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

👀 *Note:* 👇

⛑ *Registration Timing:* 1:00 pm To 5:00 pm Only

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
*Thanks & Regard's*

*QITC- Management*
*Contact:* 5011 1203, 66579598, 44315863

*Date: 04-08-2020*
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

➡ *PLS FORWARD TO OTHERS* ➡


திங்கள், 27 ஜனவரி, 2020

QITC-யின் 32-வது இரத்த தான முகாமில் 231 பேர் இரத்த தானம் வழங்கினார்கள் (24/01/2020)71-வது இந்திய குடியரசு தினம் மற்றும் கத்தர் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு TNTJ கத்தர் மண்டலம் சார்பில் நடந்த 32-வது மாபெரும் இரத்த தான முகாம் - 231 பேர் இரத்தக் கொடை வழங்கினார்கள்.
மார்க்க பணிகள் மட்டுமின்றி சமுதாய பணிகளிலும் சளைக்காமல் சாதனை படைத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்ற ஏற்றமிகு கொள்கையை தங்களின் செயல்பாடுகளின் மூலம் பலகட்டங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.மனித உயிருக்கு மதிப்பளிக்கும் மார்க்கத்தில் பயணிக்கும் நாம் இரத்த தான முகாமை அதற்கான பாலமாக அமைத்துக்கொண்டு அதனூடாக பல ஆயிரம் மக்களின் உயிருக்கு பலனளிக்கின்ற வகையில் பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் வல்ல ரஹ்மானின் வற்றாப் பெருங்கருணையால் TNTJ கத்தர் மண்டலம் (கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் / Qatar Indian Thowheed Centre - QITC) சார்பாக இந்திய குடியரசு தினம் & கத்தர் தேசிய விளையாட்டு தினம் ஆகியவற்றை முன்னிட்டு "32 மாபெரும் இரத்த தான முகாம்" கடந்த 24-01-2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை QITC மர்கஸில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
அகதி வாழ்க்கையும்,அவசர உதவியும்!
இரத்த தான முகாம் நடத்துவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டவுடன் உயிர் காக்கும் இந்த உன்னத பணிக்கு தேவையான ஏற்பாடுகளை மண்டல, கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டத்தின் வாயிலாக பலகோடிக்கான முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித சமூகத்தை அகதிகளாக்க முனைப்பில் உள்ள இந்த தருணத்தில், வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் கால் வைத்து உறவுகளை பிரிந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில் ஆயுள் காக்கும் அவசர, அத்தியாவசிய உதவியான குறுதிகொடையை தானமாக வழங்கி பிறமக்களின் உயிர் காக்கு உதவிசெய்தனர். இம்முகாமில் பெருந்திரளாக கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
கூடி வந்த மக்கள் கூட்டம்
மனிதநேய உதவியான இந்த முகாம் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு ஜூம்ஆ தொழுகை இடைவேளை வரை 91 நபர்கள் வரை இரத்த தானம் அளித்திருந்தனர். ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து மீண்டும் துவங்கிய முகாம் நேரம் செல்ல செல்ல கூடி வந்த மக்கள் கூட்டத்தால் மர்கஸ் உள்ளரங்கத்திற்குள் மக்கள் செல்வதற்கு சிரமப்பட வேண்டிய சூழல் நிலவியது.
மொத்தமாக 400 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து ஒரே நாளில் 231 நபர்கள் குறுதிக்கொடை வழங்கினார்கள்.
இம்முகாமில் இரத்த தானம் செய்ய தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சகோதரர்களும் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் மேலும் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து வகையான ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு பிறகு சம்பந்தப்பட்ட சகோதரர்கள் இரத்தம் வழங்க பணிக்கப்பட்டனர்.
இம்முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட செயல்வீரர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும், இதற்காக இரவும் பகலும் அயராது உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் அன்பும், அருளும், மன்னிப்பும் ஈருளகிலும் கிடைக்கட்டுமாக!
ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.
ஊக்கம் தந்த உதிர துளிகள் 
1. இரண்டு பஸ்களில் ஒரே நேரத்தில் மக்கள் இரத்த தானம் செய்தார்கள்.
2. இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் கிளைகள் வாரியாக மக்கள் எவ்வளவு பங்காற்றுகிறார்கள் என்பதை அவ்வப்போது மர்கஸில் இரு இடங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டது.
3. இதுவரை கத்தரில் எந்த அமைப்பும் எட்டிராத அளவில் இரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்கள் பதிவு செய்தனர்.மேலும் அதிகபட்ச இலக்காக 231 நபர்கள் இந்த முகாமில் இரத்த தானம் செய்தனர்.
4. மக்கள் அமர்ந்திருந்த பகுதியின் மையத்தில் அமர்ந்து மண்டல நிர்வாகிகள் இரத்ததான முகாம் ஏற்பாடுகள்,பயன்கள் உள்ளிட்ட பல செய்திகளை உள்ளடக்கி கலந்துரையாடல் வடிவில் ஏராளமான விடயங்களை கேள்வி பதில் வடிவில் அமைத்துப்பேசியதை அனைவரும் ஆர்வமாக உள்வாங்கிக்கொண்டனர்.
5. வந்திருந்த மக்களிடல் பலரிடம் இம்முகாம் குறித்த பேட்டிகள் எடுக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது அருமையாக இருந்தது.
6. காலை 7 மணிக்கு சிற்றுடிண்டியும், ஜூம்ஆ தொழுகை முடித்து வந்து மதிய உணவும் வழங்கப்பட்டது.
7. மூன்று பெரிய வாகனம் & ஒரு சிறிய வாகனத்தில் பல கட்டமாக சென்று மக்கள் அழைக்கப்பட்டு வருவதற்கான பிரத்யேக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
8. தோராயமாக 20 பெண்கள் இந்த முகாமிற்காக வந்து கலந்துகொண்டது நம்மை உற்சாகமூட்டியது.
அல்ஹம்துலில்லாஹ்..!