செவ்வாய், 28 டிசம்பர், 2021

கத்தர் தேசிய தினம் மற்றும் FIFA ARAB CUP 2021 ஐ முன்னிட்டு 35-வது மாபெரும் இரத்த தான முகாம்



அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 17/12/2021 அன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 35-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 66 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰150 க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇
🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்
🤝 கிளை நிர்வாகிகளுக்கும்
🤝 கிளை உறுப்பினர்களுக்கும்
🤝 கொள்கை சொந்தங்கள்
🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்
🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்
எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். JAZAKALLAHU KHAIRA👆

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும் தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்.

புகைப்படங்கள்:

பத்திரிக்கை செய்திகளில்:




https://thedohaglobe.com/community/qatar-indian-thawheed-centre-organises-blood-donation-drive/?amp=1








கத்தர் TNTJ- நிர்வாகம், 50111203, 66579598

வெள்ளி, 5 மார்ச், 2021

QITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குறிப்புகள்


பேச்சுப்போட்டி குறிப்புகள் 

கீழ்க்கண்ட கட்டுரைகளிலிருந்து தலைப்புகளுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். 


3 & 4 ஆம் வகுப்பு  (4 நிமிடங்கள் மட்டும்)

1 அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் 

2 இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள் 

3 எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்

வியாழன், 4 மார்ச், 2021

QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 5 & 6 Std.


ஸூரா & துஆ மனனப் போட்டி

5 மற்றும் 6 ஆம் வகுப்பு


அத்தியாயம் 80  “அபஸ”  வசனங்கள்:42


அத்தியாயம் 81  “அத்தக்வீர்”  வசனங்கள்:29


அத்தியாயம் 82  “அல் இன்ஃபிதார்”  வசனங்கள்:19


வித்ரு தொழுகையில் குனூத் துஆ


தொழுகையை துவக்கியதும்


இருப்பில் ஓத வேண்டிய துஆ


QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 3 & 4 Std.

 


ஸூரா & துஆ மனனப் போட்டி

3 மற்றும் 4 ஆம் வகுப்பு


அத்தியாயம் 86  “அத்தாரிக்”  வசனங்கள்:17


அத்தியாயம் 90  “அல் பலத்”  வசனங்கள்:18


அத்தியாயம் 88 “அல் காஷியா”  வசனங்கள்:26


பாங்கு முடிந்தவுடன்


 இருப்பில் ஓத வேண்டியவை


நோயாளியை விசாரிக்கசென்றால்ச் சென்றால்


   

QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.


ஸூரா & துஆ மனனப் போட்டி 
1 மற்றும் 2 ஆம் வகுப்பு 


அத்தியாயம் 94  “அஷ்ஷராஹ்”  வசனங்கள்:8


அத்தியாயம் 95  “அத்தீன்”  வசனங்கள்:8


அத்தியாயம் 99 “அஸ்ஸில்ஸிலா” வசனங்கள்:8



தூங்கி எழுந்ததும்


தொழுகையை முடித்த பின்னர் பாவமன்னிப்புத் தேடி ஓத வேண்டிய துஆ



இழப்புகள் ஏற்படும்போது


QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ KG1 & KG2


ஸூரா & துஆ மனனப் போட்டி

KG-1 மற்றும் KG-2 வகுப்பு


அத்தியாயம் 105 “அல் ஃபீல்” வசனங்கள்:5


அத்தியாயம் 106 “குறைஷ்” வசனங்கள்:4




அத்தியாயம் 107 “அல் மாவூன்” வசனங்கள்:7




உதவி செய்தவருக்காக ஓதும் துஆ




உணவளித்தவருக்காக ஓதும் துஆ




கழிவறையில் நுழையும்போது ஓதும் துஆ





திங்கள், 22 பிப்ரவரி, 2021

QITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி - 2021


QITC- அறிவிப்பு 👇

📣📣📣📣🔲🔲🔲📣📣📣📣

ஏக இறைவனின் திருப்பெயரால்...


QITC-யின் 

✍ ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2021


படிவம் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் :28/02/2021


📣📣📣📣🔲🔲🔲📣📣📣📣


🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 28/02/2021


⏰ படிவம் ஏற்கப்படும் நேரம்: இரவு 10:59PM  - வரை மட்டுமே


🕌  அனுப்ப வேண்டிய முகவரி: Online ல் பதிவு செய்தல் மட்டுமே... 


கண்ணியத்திற்குரிய சகோதரர்களே


🔰 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியர்ர்கள் & பெரியவர்களுக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.


🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.


🔰 அதற்கான link யை பதிந்திருக்கிறோம். அதை 28-02-2021 இரவுக்குள் பூர்த்தி செய்துவிடவும். Link 👇


https://forms.gle/nGDQUR7skuCKbwfC9


பூர்த்தி செய்த தகவலை 55591460 என்ற எண்ணிற்க்கு What's app ல் Ramadan Form Filled என அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


போட்டிகள்: 👇


🟥 1) சிறுவர்கள் சூரா மற்றும் துஆ மனனப்போட்டி


🟩 2) சிறுவர்கள் கிராஅத் போட்டி


🟦 3) சிறுவர்கள் பேச்சுப் போட்டி


🟧 4) பெரியவர்கள் கிராஅத் போட்டி


குறிப்பு:👇


1) பேச்சுப்போட்டி, சூரா மற்றும் துஆ, கிராத் ஆகியவைகளுக்கான குறிப்புகள் நமது இணையதளம் & சமூக வளைதளங்களில்  வெளியிடப்படும்.


2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.


3) சூரா மற்றும் துஆக்களுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் 25-03-2021


பேச்சுப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் 08-04-2021


4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.


5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.


6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது. 


📍 பேச்சுப் போட்டிக்கான பயிற்சி வகுப்பு 11-03-2021 வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்


📣📣📣📣🔲🔲🔲📣📣📣📣

அன்புடன்


மண்டல நிர்வாகம்

22-02-2021

📞 44315863, 66579598, 55591460

📣📣📣📣🔲🔲🔲📣 



➡ இதை அனைவருக்கும் Forward செய்யவும் pls ➡


வியாழன், 28 ஜனவரி, 2021

TNTJ கத்தர் மண்டலம் நடத்திய 34-வது இரத்ததான முகாம் 22.01.2021


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) மற்றும் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் (HMC) இணைந்து, 72-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 22.01.2021 வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 34வது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 144 நபர்கள் கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு 99 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.

கொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இம்முகாமில் “கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சித்துளிகள்  

  மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெற்றது.

  வழமையாக மர்கஸில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி இம்முறை நேரடியாக HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.

  குருதிக் கொடையாளர்களின் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

*என்றும் சமுதாய மனிதநேயப் பணியில்...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
கத்தர் மண்டலம்
22.01.2021

*QATAR | QITC | TNTJ | BLOOD | CAMPAIGN | HMC | EMERGENCY | HUMANITIES | TAKE VACCINE | SAVE LIVES*